Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Meenam Rasi Palan: மீன ராசிக்கு கண்டத்தில் இருந்து விடுதலை.. 2 விஷயத்தில் ரொம்ப கவனம்

Subscribe to Oneindia Tamil

கார்த்திகை மாத பலன்கள்: ஐப்பசி மாதம் நிறைவடையப் போகிறது. இன்னும் சில நாட்களில் கார்த்திகை மாதம் பிறக்கவுள்ளது. ஆன்மீக ரீதியாக கார்த்திகை மாதம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த மாதத்தில் சில கிரக பெயர்ச்சிகளிலும் மாற்றம் இருக்கிறது. பலர் புதிய திட்டங்களுடன் கார்த்திகை மாதத்தில் நுழைவீர்கள். இந்த மாதம் மீன ராசி பெறப் போகும் பலன்களை காணலாம்.

ஐப்பசி மாதம் நிறைவடைந்து கார்த்திகை மாதம் பிறக்கவுள்ளது (நவம்பர் 15 - டிசம்பர் 15) குரு பகவான் கடக ராசியில் உச்ச பலத்துடன் வக்கிரமாக உள்ளார். அவர் 19 ஆம் தேதி மிதுன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அங்கேயும் அவர் வக்ர கதியில் தான் இருக்க போகிறார். சுக்கிரன் 10 ஆம் தேதி விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். செவ்வாய் 21 ஆம் தேதி தனுசு ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.

karthigai-matha-rasi-palan-what-kind-of-benefits-will-get-meenam-rasi-people-during-this-period

யோகங்கள்

சுக்கிரன், செவ்வாய் இருவரும் தங்களின் ஆட்சி பலத்தை விட்டு பெயர்ச்சி ஆகிறார்கள். சூரியன் தனுசு ராசியில் பயணிக்கிறார். புதன் பகவான் 20 ஆம் தேதி விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். சனி பகவான் 12 ஆம் தேதி வக்ர நிவர்த்தி ஆகிறார். சுக்கிரன் - புதன் சேர்க்கை மதன ராஜ கோபால யோகத்தை கொடுக்கும். சூரியன் - செவ்வாய் இணைவை மகா யோகம் என்பார்கள்.

சுக்கிரன் செவ்வாய் சேர்க்கையால் பிருகு மங்கல யோகம் உருவாகிறது. சுக்கிரன் - சூரியன் சேர்க்கையால் சுக்ர ஆதித்ய யோகம் உருவாகிறது. இப்படி கார்த்திகை மாதம் முழுவதும் பல அற்புத யோகங்கள் உள்ளன. இது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால் மீன ராசிக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்க போகிறது என்று பார்க்கலாம்.

மீனம்

மீன ராசியினருக்கு ராசிக்குள் சனி இருந்தாலும் வக்கிரமாக இருக்கிறார். 12 ஆம் தேதிக்குப் பிறகு சனி வக்கிர நிவர்த்தியாகிறார். ராசியதிபதியும் 19 ஆம் தேதிக்கு மேல் வக்கிரமாகிறார். உங்களுடைய தேவைகள், தொழில் சார்ந்த விஷயங்களை 19 ஆம் தேதிக்குள் முடித்துக் கொள்வது நல்லது. ஒருவரை பார்க்கச் செல்வது, தொழில் ரீதியான விஷயங்கள் என எந்த நல்ல விஷயமாக இருந்தாலும், அதில் வெற்றி பெற வேண்டுமானால் நினைத்தால் அதனை 19 ஆம் தேதிக்கு முன்பு வைத்துக் கொள்வது நல்லது.

முதலீடுகள்

19 ஆம் தேதிக்குப் பிறகு 4 ஆம் வீட்டுக்கு வந்து குரு வக்கிரகதி அடைவதால் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். தொழில் சார்ந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். தொழில் செய்யும் இடத்தில், தொழில் முதலீட்டில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். பணம் முதலீடு செய்வதற்கு முன்பு ஒருமுறைக்கு, இருமுறை யோசித்து செய்வது நல்லது.

லாபம் கொட்டும்

லாப ஸ்தானாதிபதி வக்கிர நிவர்த்தியாவதால் 12 ஆம் தேதிக்குப் பிறகு லாபம் ஏற்படும். அதேசமயம் சில விரயங்களும் ஏற்படும். லாபத்தைக் கண்டிப்பாக கொடுப்பார் அதே சமயம் எந்த விஷயமானாலும் யோசித்து செய்வது நல்லது. 2, 9 ஆம் அதிபதியாக இருக்கக்கூடிய செவ்வாய் 9 ஆம் வீட்டிலேயே இருக்கிறார். பண வரவு, பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்.

கண்டங்கள் விலகும்

21 ஆம் தேதி தனுசுக்கு செவ்வாய் வருகிறார். பணவரவு, நன்மைகள் கண்டிப்பாக கிடைக்கும். தொழில் ஏற்படுத்திக் கொடுத்தே தீரும். குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்தே தீரும். அப்பா மூலமாக உதவிகள் கிடைக்கும். ஆண் வாரிசு பிறக்கும் வாய்ப்புகள் ஏற்படும். சுக்கிரன் 8 ஆம் வீட்டிலேயே 10 ஆம் தேதி வரை இருப்பதால் கண்டங்கள் விலகும். ஆனால், சிறிது அவமானத்தைக் கொடுத்திருப்பார்.

ஆரோக்கியம்

10 ஆம் தேதிக்கு மேல் 9 ஆம் வீட்டிற்கு வந்து தனது சொந்த வீட்டைப் பார்க்கிறார். தேவையில்லாத கண்டங்கள், கெட்ட பெயர்கள் நீங்கும். முயற்சிகள் கைகூடி வரும். புதனைப் பொருத்தவரை 4, 7 க்கு உடையவராகி 8 ஆம் வீட்டில் 20 ஆம் தேதி வரை இருப்பதால் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். கணவன், மனைவிக்குள் மனஸ்தாபங்கள் வருவதற்கான வாய்ப்புள்ளது. தேவையில்லாத சங்கடங்கள் பேச்சால் வரும் வாய்ப்புள்ளதால் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது.

கடன் தொல்லை நீங்கும்

சூரியன் 9 ஆம் இடத்துக்கு வருவதால் நல்ல அமைப்புகள் ஏற்படும். வேலை கிடைக்கும். தொழில் பெருகும். தந்தையின் பூர்வீக சொத்துக்கள் கிடைக்கும் வாய்ப்புகள் வரும். கடன்கள் விலகும். கடன் கட்டுவதற்கான ஏதாவதுதொரு பணம் வரும். கடனால் இருந்த தொல்லைகள் விலகும். வழக்குகள் சாதகமாக இருக்கும். ஆரோக்கியத்திலும் குடும்ப வாழ்க்கையிலும் கவனமாக இருக்க வேண்டும். மற்றபடி பொருளாதாரம் நன்றாக இருக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+