Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Karthigai Matha Palan: ரிஷப ராசிக்கு அதிர்ஷ்டத்துக்கு மேல் அதிர்ஷ்டம்.. பேச்சில் ரொம்ப கவனம்

Subscribe to Oneindia Tamil

கார்த்திகை மாத பலன்கள்: ஐப்பசி மாதம் நிறைவடையப் போகிறது. இன்னும் சில நாட்களில் கார்த்திகை மாதம் பிறக்கவுள்ளது. ஆன்மீக ரீதியாக கார்த்திகை மாதம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த மாதத்தில் சில கிரக பெயர்ச்சிகளிலும் மாற்றம் இருக்கிறது. பலர் புதிய திட்டங்களுடன் கார்த்திகை மாதத்தில் நுழைவீர்கள். இந்த மாதம் ரிஷப ராசி பெறப் போகும் பலன்களை காணலாம்.

ஐப்பசி மாதம் நிறைவடைந்து கார்த்திகை மாதம் பிறக்கவுள்ளது (நவம்பர் 15 - டிசம்பர் 15) குரு பகவான் கடக ராசியில் உச்ச பலத்துடன் வக்கிரமாக உள்ளார். அவர் 19 ஆம் தேதி மிதுன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அங்கேயும் அவர் வக்ர கதியில் தான் இருக்க போகிறார். சுக்கிரன் 10 ஆம் தேதி விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். செவ்வாய் 21 ஆம் தேதி தனுசு ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.

karthigai-matha-rasi-palan-what-kind-of-benefits-will-get-rishabam-rasi-people-during-this-period

யோகங்கள்

சுக்கிரன், செவ்வாய் இருவரும் தங்களின் ஆட்சி பலத்தை விட்டு பெயர்ச்சி ஆகிறார்கள். சூரியன் தனுசு ராசியில் பயணிக்கிறார். புதன் பகவான் 20 ஆம் தேதி விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். சனி பகவான் 12 ஆம் தேதி வக்ர நிவர்த்தி ஆகிறார். சுக்கிரன் - புதன் சேர்க்கை மதன ராஜ கோபால யோகத்தை கொடுக்கும். சூரியன் - செவ்வாய் இணைவை மகா யோகம் என்பார்கள்.

சுக்கிரன் செவ்வாய் சேர்க்கையால் பிருகு மங்கல யோகம் உருவாகிறது. சுக்கிரன் - சூரியன் சேர்க்கையால் சுக்ர ஆதித்ய யோகம் உருவாகிறது. இப்படி கார்த்திகை மாதம் முழுவதும் பல அற்புத யோகங்கள் உள்ளன. இது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால் ரிஷப ராசிக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்க போகிறது என்று பார்க்கலாம்.

ரிஷபம்

ரிஷப ராசி மற்றும் மேஷம் லக்னத்தினருக்கு ராசியதிபதி மகாலட்சுமியின் கடாட்சத்தோடு 10 ஆம் தேதி வரை தனது சொந்த வீட்டிலேயே இருக்கிறார். எந்த விஷயத்தை எடுத்துக் கொண்டாலும் 10 ஆம் தேதிக்குள் வைத்துக் கொள்வது நல்லது. எந்த விஷயத்தை தொட்டாலும் அதில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். 10 ஆம் தேதிக்குப் பிறகு சுக்கிரன் விருச்சிகம் வீட்டிற்கு வருகிறார். அதன் பிறகு எதை செய்தாலும் யோசித்து செல்வது நல்லது.

பேச்சில் கவனம்

சுக்கிரன் தனது சொந்த வீட்டைப் பார்க்கிறார். சொந்த வீட்டை ஒரு கிரகம் பார்ப்பதென்பது அரிது. எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். எந்த காரியமானாலும் உங்களுக்கு சாதகமாகவே நடக்கும். அச்சப்படத் தேவையில்லை. 2, 5க்கு உரிய புதன் 20 ஆம் தேதி வரை 6 ஆம் வீட்டிலும், 21 ஆம் தேதியில் இருந்து விருச்சிகத்துக்கு வருகிறார். 2க்கு உரியவர் 6 ஆம் வீட்டிற்கு வருவதால் பேச்சில் மிகுந்த கவனம் தேவை.

பண விஷயத்தில் கவனம்

பணம், கொடுக்கல் வாங்கலில் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது. குழந்தைகள் சார்ந்த விஷயங்களில் கவனம் தேவை. 5க்கு உடையவர் 7 ஆம் வீட்டிற்கு வரும்போது நினைத்ததெல்லாம் நடக்கும் யோகம் உண்டாகும். குழந்தை, பணம், குடும்ப ஒற்றுமை சார்ந்த விஷயங்கள் அனைத்தும் சாதகமாக ஏற்படும். 2 ஆம் அதிபதி 7 ஆம் இடத்தில் இருந்தால் குடும்பம் அமைந்தே தீரும் அமைப்பு ஏற்படும்.

தடைகள் நீங்கும்

திருமணத்தில் இருந்து வந்த தடைகள் நீங்கும். கணவன், மனைவிக்குள் நல்ல புரிதல் ஏற்படும். இந்த காலகட்டத்தில் பிறக்கும் குழந்தைகள் அதிர்ஷ்டமான குழந்தைகளாகப் பிறப்பார்கள். உங்களுக்கு வரும் ஜாதகங்கள் அதிர்ஷ்டமான வரனாக அமையும். 5க்கு உடைய குலதெய்வமும் உங்கள் ராசியைப் பார்ப்பதால் குலதெய்வத்தின் பரிபூரண அருளைப் பெறுவீர்கள்.

சொத்துக்கள் வாங்கும் யோகம்

4க்கு உடைய சூரியன் 7 இல் அமர்ந்திருக்கிறார். வீடு, மனை, வண்டி, வாகனங்கள், சொத்துக்கள் சார்ந்த விஷயங்களில் இருந்து வந்த தடைகள் நீங்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். இடுப்பு வலி, நெஞ்செரிச்சல், அல்சர் பிரச்சனை, வயிறு உபாதைகள் தொடர்பான பிரச்சனைகள் அனைத்தும் விலகி சாதகமாக மாறும்.

திடீர் பணவரவு

குரு பகவான் 2 ஆம் வீட்டில் வரப் போகிறார். ஆனாலும், வக்கிரகதியில் இருக்கிறார். 8, 11 ஆம் அதிபதி வக்கிரமாகும் போது ஒருமுறைக்கு இருமுறை முயற்சி செய்வது நல்லது. 8 ஆம் அதிபதி 2 ஆம் வீட்டிற்கு வந்தாலே திடீர் பண வரவு, திடீர் அதிர்ஷ்டங்கள் உண்டாகும். ஆனால், வக்கிரம் என்பதால் ஒருமுறைக்கு இருமுறை முயற்சி செய்வது நல்லது. வருமானம் இரட்டிப்பாக மாறும். வருமானத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும்.

லாபம் கொட்டும்

லாபம் அதிகரிக்கும். ஜாதகத்தில் சனி வக்கிரமாக இருந்தால் 12 ஆம் தேதி வரைக்கும் நீங்கள் செய்யும் விஷயங்களை முடித்துக் கொள்வது நல்லது. வக்கிரமாக இல்லையெனில் 12 ஆம் தேதி வரை நிச்சயமாக நன்மைகள் கிடைக்கும். ராசியாதிபதி நன்றாக இருப்பதால் தொட்ட காரியங்கள் அனைத்தும் சிறப்பாக இருக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+