கார்த்திகை மாதம் பிறந்தாச்சு.. 12 ராசிகளுக்கும் என்னென்ன பலன்கள்?.. அதிர்ஷ்டம் யாருக்கு?

Subscribe to Oneindia Tamil

கார்த்திகை மாத பலன்: ஐப்பசி மாதம் நிறைவடைந்து கார்த்திகை மாதம் பிறந்துள்ளது. இந்த கார்த்திகை மாதத்தில் 12 ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும், கிடைக்கும் நல்ல பலன்கள் மற்றும் பொதுப் பலன்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.

ஐப்பசி மாதம் நிறைவடைந்து இன்று கார்த்திகை மாதம் பிறந்துள்ளது. சுக்கிரன், சூரியன், செவ்வாய் போன்ற முக்கிய கிரகங்கள் ஐப்பசியில் நீச்ச நிலைமைகளில் இருந்தன. இதனால், சில ராசிகள் பாதிப்புகளைச் சந்தித்து வந்திருப்பார்கள். ஐப்பசி மாதம் யார் யாருக்கு பாதிப்பு கொடுத்ததோ, பணவரவு கிடைக்காத நிலைமையில் இருந்ததோ அந்த நிலைமை எல்லாம் இந்த கார்த்திகை மாதத்தில் மாறும்.

Karthigai Rasi Palan Lucky Zodiac Signs

கார்த்திகை மாத யோகங்கள்

கார்த்திகை மாதத்தில் குருமங்கள யோகம், கேள யோகம் உருவாகிறது. இந்த மாதம் முழுவதும் குரு பகவான் சிம்மத்தில் செவ்வாய், கேதுவுடன் சேர்ந்து கேள யோகம் என்ற அற்புதமான அமைப்பில் இருக்கிறார். மேஷம், விருச்சிகம் ராசிகளுக்கு மிகப்பெரிய யோக பலன் இந்த மாதத்தில் கிடைக்கும். ராசிநாதன் மிகவும் வலுவாக இருக்கிறார். ராசி, ராசிநாதன் போன்ற அமைப்பு இந்த இரு ராசிகளுக்கும் அற்புத அமைப்பு உள்ளது. சிம்மம், மீன ராசிக்கு ஆறுதலை கொடுக்கும் மாதமாக இருக்கும்.

பொதுப் பலன்கள்

ரிஷபம், துலாம் ராசியினருக்கும் சுக்கிரனின் நீச்சம் கடந்த மாதம் 15 முதல் 20 நாட்களுக்கு இருந்தது. சுக்கிரனுடைய நீச்சம் இந்த மாதம் விலகி துலாம் ராசியிலேயே சுக்கிரன் ஆட்சியாக இருக்கிறார். சனி பகவான் 11, 6 இல் இருப்பதாலும், ரிஷபம், துலாம் ராசியினருக்கு தொட்டது துலங்கக்கூடிய காலமாக இருக்கும். மிதுனம், கன்னி ராசியினருக்கு புதன் பெரியளவில் கெட்ட அமைப்பில் இல்லை. 3 ஆம் இடத்திலும், 12 ஆம் இடத்திலும் குரு பகவான் இருந்தாலும் ராசிநாதன் செவ்வாயின் வீட்டில் இருப்பதும், செவ்வாயின் பார்வையில் இருப்பது, சூரியனோடு சேர்ந்திருக்கிறது. நல்ல யோகங்கள் கண்டிப்பாக கிடைக்கும்.

கடகம், சிம்மம்

கடகம், சிம்மம் ராசியினருக்கு யோகாதிபதிகள் வலுத்து பரிவர்த்தனை அமைப்பில் இருப்பதால் பெரிய கஷ்டங்கள் எதுவும் இருக்காது. மீன ராசிக்காரர்களுக்கு இதுவரை கஷ்டப்பட்டுக் கொண்டிருந்திருப்பீர்கள். தர்மகர்மாதிபதி இந்த மாதம் முழுவதும் இருப்பதால் தொழில், வேலை போன்ற ஜீவன அமைப்புகள் முன்னேற்றமடையும். காசு பணம் வரவு அற்புதமாக இருக்கும்.

எதிர்பார்க்காத அதிர்ஷ்டம்

தனுசு ராசியினருக்கு மிகப்பெரிய நல்ல முன்னேற்றம் ஏற்படும். ராசிநாதன் ராசியைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். 5, 9 ஆம் பாவங்கள் வலிமையாக இருப்பதால் நல்ல மாதமாக இந்த மாதம் அமையும். மகர ராசிக்கு எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் இந்த கார்த்திகை மாதத்தில் ஏற்படும். கும்பத்திற்கு ராசியை குரு பகவான் பார்க்கிறார். இது ஒரு மிகப்பெரிய யோகமான அமைப்பைக் கொடுக்கும். 12 ராசிக்காரர்களுக்கும் இந்த கார்த்திகை மாதத்தில் நல்ல பலன்கள் கிடைக்கும்.

ராகு கேது பெயர்ச்சி

கார்த்திகை மாதத்தில் முக்கிய நிகழ்வாக, டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி திருக்கணிதப் பஞ்சாங்கத்தின்படி ராகு கேது பெயர்ச்சி நடைபெறவுள்ளது. கும்பத்தில் இருந்த ராகு மகரத்திற்கும், சிம்மத்தில் இருந்த கேது கடகத்திற்கும் மாறப்போகின்றன. இது 12 ராசிகளுக்கும் முக்கிய பலன்களைக் கொடுக்கும். பொதுவாக ராகு கேது 3, 6, 11 இல் வரும்போது தான் நல்ல பலன்களைக் கொடுப்பார்.

அதிர்ஷ்டம் பெறும் ராசிகள்

அந்த வகையில் விருச்சிக ராசிக்கு 3 ஆம் இடத்திலும், சிம்ம ராசியினருக்கு 6 ஆம் இடத்துக்கும், மீன ராசியினருக்கு 11 ஆம் இடத்திற்கு வந்துள்ளது. டிசம்பர் மாதம் 5 ஆம் தேதியில் இருந்து விருச்சிகம், சிம்மம், மீனம் ஆகிய 3 ராசியினருக்கும் ராகுவால் மிகப்பெரிய நல்ல பலன்களைக் கொடுக்கும். அதேபோல, ரிஷப ராசியினருக்கு கேது பகவான் 3 ஆம் இடத்துக்கும், கும்பத்திற்கு 6 இல், கன்னி ராசிக்கு 11 இல் கேது வருகிறார். ரிஷபம், கும்பம், கன்னி ஆகிய 3 ராசிகளுக்கும் கேதுவால் ஒன்றரை வருடத்திற்கு நல்ல பலன்கள் கிடைக்கக்கூடிய காலகட்டமாக இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+