குரோதி தமிழ் புத்தாண்டு பலன்: ஏழரை சனி ஆட்டம்.. குரோதி ஆண்டில் விபரீத ராஜயோகம் யாருக்கு?
சென்னை: நிகழும் மங்களகரமான குரோதி தமிழ் புத்தாண்டு ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி பிறக்கப்போகிறது. சித்திரை மாதத்தில் குரு பகவான் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். சனி பகவான் கும்ப ராசியில் பயணம் செய்கிறார். குரோதி ஆண்டில் கிரகங்களின் மாற்றங்களால் மீனம் ராசியில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
குரோதி மீனம் ராசி: மே 1ஆம் தேதி சித்திரை மாதம் 18ஆம் நாள் குரு பகவான் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு 12 ஆண்டுகளுக்குப் பிறகு சென்று அமரப்போகிறார். மீனம் ராசியில் பிறந்தவர்களுக்கு குரு பகவான் மூன்றாம் வீடான தைரிய ஸ்தானத்தில் ஆண்டு முழுவதும் செய்யப்போகிறார். குரோதி ஆண்டில் குருவின் பார்வை உங்கள் ராசிக்கு 7,9,11ஆம் வீடுகளின் மீது விழுகிறது.

குரு பகவான் பயணம்: முன்றாம் பாவமான தைரியம் சகோதரம் வீரம் எனப்படும் மூன்றாம் வீட்டில் பயணம் செய்யும் குருவினால் உங்களின் தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். பாக்கிய ஸ்தானத்தை குரு பார்த்தால் சகல பாக்கியமும் சேரும். குருவின் பார்வை படும் 7, 9, 11, பாவங்களால் யோகத்தை அனுபவிக்க போகிறீர்கள். திருமணம் தாமதமாகி நிற்பவர்கள் இனிதே திருமணம் நடக்கும். வேலை கிடைப்பதில் பிரச்சினை உள்ளவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
குருவின் பார்வை: 9ஆம் வீடான பாக்ய ஸ்தானத்தை குரு பார்க்கப் போவதால் நீண்ட நாட்களாக நீங்க ஆவலுடன் எதிர்பார்த்த பதவி பட்டங்கள் பூர்விக சொத்து பரிமாற்றம் புது முயற்சிகள் கைகூடும் லாப ஸ்தானத்தை ராசிநாதன் குரு பார்க்கப் போவதால் பொருளாதார நிலை திருப்தி தரும். செய்யும் தொழில் வளர்ச்சி அடையும். நோய் நொடி தொந்தரவுகள் நீங்கும். ஆரோக்கியம் அதிகரிக்கும். மாற்று மருந்தால் நோய் நீங்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். மகிழ்ச்சியும் நிம்மதியும் நிறைந்த ஆண்டாக குரோதி ஆண்டு அமைந்துள்ளது.
சனி பகவான்: குரோதி ஆண்டு முழுவதும் சனி பகவான் உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானத்தில் இருக்கிறார். ஏழரை சனி காலமாக இருந்தாலும் வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்பு அமையும். படித்து முடித்து விட்டு காத்திருக்கும் மாணவர்களுக்கு விரும்பிய இடத்தில் வேலை கிடைக்கும். இடம், வீடு, வண்டி, வாகனங்கள் வாங்க வாய்ப்புகள் தானாக தேடி வரும்.
கடனாக கொடுத்துள்ள பணம் பொருள்கள் தவணை முறையில் வீடு வந்து சேரும். விசா, பாஸ்போர்ட், விஷயங்கள் சாதகமாக அமையும். வேலை விசயமாக வெளியூர் மற்றும் வெளிநாடு செல்ல சந்தர்ப்பங்கள் தேடி வரும். விரைய சனி காலம் என்பதால் திடீர் செலவுகள் அதிகரிக்கும். பணத்தை முதலீடுகளாக சேகரித்து வைப்பது நல்லது.
ராகு கேது பயணம்: குரோதி ஆண்டு முழுவதும் ஜென்ம ராசியில் ராகு பயணம் செய்வார். ஜென்ம ராகு களத்திர ஸ்தான கேது உங்களுக்கு யோகங்களைத் தரப்போகிறார். களத்திர ஸ்தானத்தில் உள்ள கேதுவை குரு பகவான் பார்வையிடுவதால் கோடீஸ்வர யோகம் தேடி வரப்போகிறது. பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். கணவன் மனைவிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு நீங்கும். பணம் விசயத்தில் யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு தொந்தரவுகள் ஏற்பட்டு சீராகும்.
கோடீஸ்வர யோகம்: ஏழாம் இடத்தில் அமர்ந்து உள்ள கேதுவினால் சத்ரு நாசம் ஏற்படும். எதிரிகள் காணாமல் போவார்கள். புதிய நபர்களை நம்பி எந்த விஷயத்திலும் இறங்கக் வேண்டாம். பெண்கள் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் கூடுதல் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. குரு பகவானை பார்வையிடப்போகும் கேது ஆன்மீக பயணத்தை ஏற்படுத்துவார். தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் மதிப்பும் மரியாதையும் கிடைக்கும். குரோதி ஆண்டில் மீன ராசியில் பிறந்தவர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடி வரப்போகிறது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: அடிச்சான் பாரு அப்பாயின்மெண்ட் ஆர்டரு.. மிதுன ராசிக்கு கொட்டும் பணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: கடக ராசிக்கு டாப் கிளாஸ் யோகம்.. தலையெழுத்தே மாறப்போகுது -
தமிழ் புத்தாண்டு பலன்: ராஜாபகவத் போல மாறும் விருச்சிக ராசி.. கூரையை பிச்சுகிட்டு கொட்டும் அதிர்ஷ்டம் -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
தமிழ் புத்தாண்டு பலன்: துலாம் ராசிக்கு அதிர்ஷ்டமும், ஆபத்தும் சேர்ந்து வருது.. இந்த விஷயத்தில் கவனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: கோடீஸ்வர யோகம் பெறும் சிம்ம ராசி.. அள்ளிக் கொடுக்கும் குரு, கேது பகவான் -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம்












Click it and Unblock the Notifications