Kumbam: கும்ப ராசிக்கு ஜூனில் வரும் திருப்புமுனை.. குருவின் அருளால் அற்புத யோகம்

Subscribe to Oneindia Tamil

ஜூன் மாத பலன்கள்: 2026 ஜூன் மாதத்தில் கும்ப ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், தொழில் முன்னேற்றம், பொருளாதார முன்னேற்றம், திருமண யோகம், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சி அடைவது இயல்பான நிகழ்வாகும். இந்த கிரக மாற்றங்கள் அனைத்து ராசிகளின் வாழ்க்கையிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. சில ராசிகளுக்கு சுப பலன்களையும், சில ராசிகளுக்கு சவால்களையும் அளிக்கும்.

kumbam-june-month-rasi-palan-what-kind-of-benefits-will-kumbam-rasi-people-get-during-june-2026

இந்த மாதத்தின் மிக முக்கியமான நிகழ்வாக குரு பகவான் கடக ராசியில் உச்சம் பெற்று சஞ்சரிப்பது குறிப்பிடத்தக்கது. இதனால் பல ராசியினரின் வாழ்க்கையில் முன்னேற்றம் மற்றும் புதிய வாய்ப்புகள் உருவாகும். செவ்வாய் தனது சஞ்சாரத்தின் மூலம் செயல் வேகம் மற்றும் தைரியத்தை அதிகரிக்கச் செய்கிறார். 2026 ஜூன் மாதம் பல புதிய வாய்ப்புகளையும் முக்கிய மாற்றங்களையும் கொண்டு வரக்கூடிய மாதமாக அமைகிறது.

தொழில், பணவரவு, குடும்ப வாழ்க்கை மற்றும் திருமண யோகம் போன்ற விஷயங்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் காணப்படலாம். அதே நேரத்தில் சில விஷயங்களில் பொறுமையும் நிதானமும் அவசியமாக இருக்கும். இந்த மாதத்தில் கும்ப ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், கவனிக்க வேண்டிய அம்சங்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள் மற்றும் வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

கும்பம்

கும்ப ராசியினருக்கு 5 ஆம் அதிபதியான புதன் பகவான் 5 ஆம் இடத்திலேயே இருக்கிறார். ராசிநாதன் உச்ச குருவின் பார்வையில் வருவது என அற்புதமான மாதமாக இந்த ஜூன் மாதம் இருக்கும். வெளிநாடு, வெளிமாநில பயணம் இந்த மாதம் 15 ஆம் தேதிக்குப் பிறகு ஏற்படும். மேற்கு திசையில் உள்ள அரபு நாடுகள், ஐரோப்பிய நாடுகள், அமெரிக்க நாடுகளுக்கு படிப்பு, வேலைக்காக செல்லும் யோகம் உண்டு.

கடன்

சுக்கிரனும் சேர்ந்து 6 ஆம் இடம் வலுவாக இருப்பதால் வளர்ச்சிக்கான கடன்கள் ஏற்படும். கடனைப் பார்த்து பயந்து கொண்டிருந்தவர்களுக்கு அந்த பயங்கள் நீங்கக்கூடிய அற்புதமான காலகட்டமாக இருக்கும். எல்லா விஷயங்களையும் சமாளிக்கக்கூடிய நல்ல மாற்றங்கள் உண்டாகும். குருவின் பார்வையால் நிறைய நன்மைகள் உண்டாகும். கொஞ்சம் குழப்பம் நிறைந்த காலகட்டமாக இருக்கும்.

ராசியில் ராகு

ராசியிலேயே ராகு இருக்கிறார். சில தயக்கங்கள் ஏற்படக்கூடிய காலகட்டமாக இருக்கும். யாரை நம்புவது என்பது போன்ற தயக்கங்கள் வரக்கூடிய காலகட்டமாக இருக்கும். பெரிய அளவில் சோதனைகள் எதுவும் இருக்காது. எதைப் பற்றியும் கவலைப்படத் தேவையில்லை. ஜென்மச் சனி விலகி விட்ட காரணத்தால் ஒளி பிறக்கும் காலகட்டமாக இருக்கும்.

தன்னம்பிக்கை

மிகப்பெரிய நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். மனதில் தன்னம்பிக்கை ஏற்படும் காலகட்டமாக இருக்கும். எல்லா விஷயங்களையும் தைரியமாக சமாளிப்பீர்கள். வியாபாரிகளுக்கு கடன்கள் வரும். ஆனால், அவை வளர்ச்சிக்கான கடன்களாக இருக்கும். தொழில்முனைவோருக்கு ஆர்டர்கள் கிடைக்கும். ஹவுசிங் லோன் அப்ரூவல் ஆகும். ஏற்கனவே இருந்த கிரெடிட் கார்டு கடன்களை அடைக்கும் யோகம் உண்டு.

முன்னேற்றம்

பெரிய அளவில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். எதைப் பற்றியும் கவலைப்படாத வகையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். 15 ஆம் தேதிக்குப் பிறகு கடன்களை பேசி முடித்து அடைப்பீர்கள். வேற்று மொழி, மதம் சார்ந்த நண்பர்களின் மூலமாக கிடைத்து வந்த உதவிகள் தடைபடுவதற்கான வாய்ப்பு ஏற்படும். நீங்களே உங்கள் சொந்த காலில் நிற்கக்கூடிய சிறப்பான மாதமாக இருக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+