Rasi Palan This Week: கும்ப ராசிக்கு அதிர்ஷ்ட தேவதை கதவை தட்டும்.. பண வரவு அற்புதமாக இருக்கும்
Kumbam Rasi Palan: ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை, சித்திரை 7 ஆம் தேதி முதல் சித்திரை 13 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கும்பம் ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

சித்திரை மாதம் பிறந்துள்ளது. சித்திரை என்பது சூரியன் கும்பத்திற்கு வரக்கூடிய மாதமாகும். அந்த வகையில், ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை, சித்திரை 7 ஆம் தேதி முதல் சித்திரை 13 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கும்பம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
கும்பம் ராசி பலன் (Kumbam Rasi Palan)
கும்பம் ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு மற்றவர்கள் குடும்ப விஷயத்தில் நீங்கள் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. அதேபோல, உங்கள் குடும்ப விஷயத்திலும் மற்றவர்களின் தலையீடு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். துணையின் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நன்மை பயக்கும். சூரியன் உச்சமாக இருப்பதால் குடும்பம் தொடர்பான விஷயங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.
சுபகாரியம்
குலதெய்வ கோயில்களுக்கு, யாத்திரைகள் சென்று வருவது நன்மை பயக்கும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு தொடர்பான விஷயங்களில் அற்புதமான ஏற்றமும், சந்தோஷமும் ஏற்படும். செல்வாக்குகள் கூடும். சுபகாரியத்தில் இருந்து வந்த சிக்கல்கள் பரிபூரணமாக நீங்கும். பண வரவிற்கான அமைப்பு உண்டு. அதிகாரம் உங்களிடம் வந்து சேரும்.
பணவரவு
எல்லா விஷயங்களிலும் வெற்றி பெறுவீர்கள். பல் பிரச்சனைகளை சரி செய்வீர்கள். கண் சார்ந்த பிரச்சனைகளுக்க சிகிச்சை மேற்கொள்வீர்கள். காசு , பணத்திற்குப் பிரச்சனையே இருக்காது. வீடு வாங்குவதற்கான யோகம் உண்டாகும். ஆடம்பரமான வீடு வாங்குவது, நல்ல இன்டீரியர் டெக்கரேட் செய்வதற்கான யோகம் உண்டாகும். காசு, பணத்திற்குப் பஞ்சம் இருக்காது.
தைரியம்
எதுவாக இருந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்கிற தன்மை ஏற்படும். மனதில் தைரியம் அதிகரிக்கும். அரசு வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. ரெஜிஸ்டிரேஷன் துறை, பிடிஓ துறையில் வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. காது மூக்கு தொண்டை, ஆர்த்தோ மருத்துவர்களுக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். கும்பத்தில் பிறந்த பலருக்கு பல பிரச்சனைகள் சரியாகும் காலகட்டமாக இருக்கும்.
கண்டங்கள்
கண்டங்களில் இருந்து வெளிவருவீர்கள். சந்தோஷம் அதிகமாக இருக்கும். தேவையில்லாத பிரச்சனைகள் குறையும். நீங்கள் நினைப்பது நடக்கக்கூடிய அற்புதமான காலகட்டமாக இருக்கும். முயற்சி எதுவாக இருந்தாலும் அதில் வெற்றி பெறும் யோகம் உண்டு. அங்காள பரமேஸ்வரியை வழிபாடு செய்வது ஏற்றத்தைத் தரும். வீட்டிற்குத் தேவையான ஆடம்பரப் பொருள்களை வாங்குவீர்கள்.
வழிபாடு
கோபத்தை தவிர்த்துக் கொள்வது நல்லது. நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் பரிபூரணமாக நீங்கும். மன தாங்கல்கள் தீரும். வண்டி, வாகனங்கள், ஆடை ஆபரணங்களை சேர்க்கும் யோகம் உண்டாகும். செல்வாக்குகள் கூடக்கூடிய அற்புதமான காலகட்டமாக இருக்கும். வயிறு சம்பந்தப்பட்ட விஷயங்களைப் பார்த்துக் கொள்ள வேண்டும். அனுமனை வழிபாடு செய்வது ஏற்றத்தைத் தரும். சந்தோஷம் 80 சதவீதமும், பொருளாதார ஏற்றம் 90 சதவீதமும் நன்றாக இருக்கும்.












Click it and Unblock the Notifications