Rasi Palan This Week: கும்ப ராசியை சுத்து போடும் கிரகங்கள்.. எந்த விஷயங்களில் கவனம் தேவை?
Kumbam Rasi Palan: மே 5ஆம் தேதி முதல் மே 10 ஆம் தேதி வரை, சித்திரை 22 ஆம் தேதி முதல் சித்திரை 27 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கும்பம் ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

சித்திரை மாதம் பிறந்துள்ளது. அந்த வகையில், மே 5 ஆம் தேதி முதல் மே 10 ஆம் தேதி வரை, சித்திரை 21 ஆம் தேதி முதல் சித்திரை 27 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கும்பம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
கும்பம் ராசி பலன் (Kumbam Rasi Palan)
கும்பம் ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு முழு குரு பார்வை இருக்கிறது. தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில், முதலீடுகள் ஈர்க்கப்படுவீர்கள். வெளிநாடு, வெளிமாநிலம் செல்லக்கூடிய யோகம் உண்டாகும். உற்றார் உறவினர்களின் பகைகள் நீங்கும். நண்பர்களாக மாறுவீர்கள். தந்தையிடமிருந்து சந்தோஷம், தாயாரிடம் இருந்து பணம் சந்தோஷம் வந்து சேரும்.
கவனம்
வண்டி, வாகனங்களில் செல்லும்போது மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். தேவையில்லாத செலவுகள், கால்முட்டியில் அடிபடுவதற்கான வாய்ப்புள்ளது. பழைய ஆட்கள் மூலமாக பிரச்சனை, அன்பு தொல்லை ஏற்படும். அழகு, ஆடம்பரம், ஜிம்மிற்கு செல்வது போன்ற யோகம் உண்டாகும். புதிய விஷயங்களை எடுத்து செய்யும்போது கவனமாக இருக்க வேண்டும். தான் பெரிய ஆள் என்பது போன்ற எண்ணத்தை தவிர்ப்பது நல்லது.
தடைகள்
மன அழுத்தம் இருக்கும் என்பதால் கோளார் பதிகத்தை கேட்பது நன்மை. தேவையில்லாத தடைகள் காணப்படும். பிள்ளைகள் விஷயத்தில் ஆராய்ச்சி செய்வதைத் தவிர்ப்பது நல்லது. வயிறு தொடர்பான பாதிப்புகளில் கவனமாக இருக்க வேண்டும். சட்ட விரோதமான செயல்பாடுகளில் ஈடுபடுவோரிடம் கவனமாக இருக்க வேண்டும்.
ஏற்றம்
தொழில், உத்தியோகம், படிப்பு, வியாபாரம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் ஏற்றமும், நம்பிக்கையும் ஏற்படும். நிறைய நன்மைகள் நடக்கக்கூடிய காலகட்டம். வளர்ப்பு பிராணிகள் விஷயத்தில் இருந்து வந்த சங்கடங்கள் நீங்கும். லாபம், அசையும், அசையா பொருள்கள் சேர்க்கை உண்டாகும். முதலீடுகள் செய்வீர்கள். தொழில், வியாபாரத்தில் அற்புதமான அமைப்பு ஏற்படும். எதிர்பார்த்த நல்ல விஷயங்கள் நடக்கும் காலகட்டம். குடும்பத்தில் அடுத்தடுத்து நல்ல காரியங்கள் நடக்கும்.
வழிபாடு
டிசம்பர் மாதம் வரை கொஞ்சம் அடக்கமாக இருப்பது நன்மை பயக்கும். தெய்வத்தின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். மறைமுக அரசியல் உங்கள் வீட்டின் பின்னால் நடக்கும். சளி தொந்தரவு, நுரையீரல் தொடர்பான பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. சந்தோஷம் ரீதியாக 80 சதவீதமும், பொருளாதார ஏற்றம் 75 சதவீதம் நன்றாக இருக்கும். தாயின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அங்காள பரமேஸ்வரி வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும்.
-
கும்ப ராசிக்கு அதிர்ஷ்டத்தை அள்ளி கொடுக்கும் குரு, புதன், சுக்கிரன்.. இந்த விஷயங்களில் மட்டும் கவனம் -
Viruchigam: விருச்சிக ராசிக்கு ராஜயோகம்.. சொல்லி அடிக்கும் யோக காலகட்டம் -
குருப்பெயர்ச்சியால் வரப்போகும் மாற்றம்.. மகர ராசிக்கு இந்த வாரம் அடிக்கும் லக்கி ஜாக்பாட் -
குருவின் அருளால் தனுசு ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. 3 அதிர்ஷ்ட நாட்களில் கொட்டும் பணம் -
Meenam: மீன ராசிக்கு குரு அருள் மழை!.. ஜூன் 1-7 வரை பணவரவு, முன்னேற்றம் -
Thulam: துலாம் ராசிக்கு அதிர்ஷ்டம் திரும்புது.. புரோமோஷன் கன்ஃபார்ம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications