Rasi Palan This Week: கும்ப ராசிக்கு இனி தொட்டதெல்லாம் ஹிட்டு.. அடுத்தடுத்து சூப்பர் மாற்றம்

Subscribe to Oneindia Tamil

வார ராசி பலன்: அக்டோபர் 22 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரையிலான ஐப்பசி 5 முதல் ஐப்பசி 9 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கும்ப ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

kumbam-rasi-palan-what-kind-of-benefits-that-kumbam-aquarius-signs-will-get-from-october-22-to-26

சூரிய பகவான் துலாம் ராசியில் நீச்சமாக இருக்கக்கூடிய மாதமே ஐப்பசி. அக்டோபர் 18 ஆம் தேதி முதல் நவம்பர் 16 ஆம் தேதி வரையிலான ஐப்பசி மாதத்தில் மழை, வெள்ளம், புயல் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. அரசியல்வாதிகள், பெரும் புகழ்மிக்கவர்கள், தொழிலதிபர்கள், உலகத் தலைவர்கள், பிரதமர்கள், ராணுவத் தளபதிகள், முப்படைத் தளபதிகள் உள்ளிட்டோர் கவனமாக இருக்க வேண்டிய காலகட்டம்.

அந்த வகையில், அக்டோபர் 22 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரையிலான ஐப்பசி 5 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கும்ப ராசி பலன்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இதுவரை இழுபறியாக இருந்த நிலைமைகள் எல்லாம் மாறும். அடுத்தடுத்து நல்ல விஷயங்கள் நடக்கும். பழைய கடன்களை அடைத்து முடிப்பீர்கள். புதிய முயற்சிகளில் வெற்றி பெறும் யோகம் ஏற்படும். தைரியம் உண்டாகும். வாழ்க்கையில் நம்பிக்கை பிறக்கும். மனஅழுத்தம், புரட்டாசி மாதம் முழுவதும் இருந்த சிக்கல்கள் தீரும்.

இடமாற்றம்

இடமாற்றம், வீடு மாற்றம், உத்தியோக மாற்றம், தொழில் மாற்றம் என எந்த மாற்றங்கள் வந்தாலும் அதனை எடுத்துக் கொள்வது நல்லது. சொந்த தொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்களுக்கு பெரிய அளவிலான அனுகூலமும், சந்தோஷமும், மாற்றமும் ஏற்படும். தடைபட்ட காரியங்கள் எல்லாம் இனி நடக்கும். லாபத்தின் அளவு அபரிமிதமாக உயரும்.

முன்னேற்றம்

விலை உயர்ந்த பொருள்களை வாங்குவீர்கள். அற்புதமான முன்னேற்றம் ஏற்படும். எதிர்பார்த்த விஷயங்கள் அனைத்தும் நடக்கும். தொழில் ரீதியாக இருந்து வந்த சிக்கல்கள் அனைத்தும் தீரும். உத்தியோகம் ரீதியாக இருந்து வந்த பாதிப்புகள் தீரும். வியாபாரத்தில் இருந்த கஷ்டமான நிலைமைகள் அனைத்தும் கட்டாயமாக மாறும்.

ஆரோக்கியம்

எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். எதிரிகள் விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது. உடற்பயிற்சி செய்வது மிகவும் முக்கியம். காளி, சூளினி, பிரித்யுங்கரா வழிபாடு செய்வது நன்மை பயக்கும். கழுத்து, முதுகு, அடிவயிறு, கழிவுப்பாதை, லிவர், கிட்னி போன்றவற்றின் செயல்பாடுகள் தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டால் கவனமாக இருப்பது நல்லது.

கவனம்

உரிய மருத்துவ ஆலோசனை எடுத்துக் கொள்ளாவிட்டால் பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. அதேபோல, கையெழுத்து போடும் விஷயங்களில் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது. ஆவணங்களை ஒருமுறைக்கு இருமுறை படித்துப் பார்த்துவிட்டு கையெழுத்துப் போடுவது நல்லது. இல்லையெனில் தேவையில்லாத பிரச்சனைகளில் சிக்கும் வாய்ப்புள்ளதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+