Rasi Palan This Week: கும்ப ராசிக்கு உத்தியோகத்தில் வரப்போகும் ஆபத்து.. ஒரு விஷயத்தில் அதீத கவனம்
வார ராசி பலன்: அக்டோபர் 6 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரையிலான புரட்டாசி 20 முதல் 26 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கும்ப ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

சூரியன் கன்னி ராசியில் வரக்கூடிய மாதமே புரட்டாசி. கன்னி என்பது புதனின் வீடு. புதனுக்கு மிதுனம், கன்னி ஆகிய இரண்டு வீடுகள் உள்ளன. செப்டம்பர் 22 ஆம் தேதி முதல் நவராத்திரி ஆரம்பித்து நிறைவடைந்துள்ளது. அக்டோபர் 6 முதல் 12 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்தில் கும்ப ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு மன அழுத்தம் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. மேலதிகாரிகள் விஷயத்தில் பதட்டங்கள் வரும் சூழல் உள்ளது. செய்யாத தப்புக்கு பாதிப்புக்குள்ளாக நேரிடும். தொழில், உத்தியோகம், வியாபாரத்தில் அற்புதமான அபிவிருத்தி ஏற்படும். தொழிலில் மாற்றங்கள் வந்தால் எடுத்துக் கொள்வது நல்லது. அதை வேண்டாம் என்று தவிர்க்காமல் இருப்பது நல்லது.
சுபவிரயம்
உங்களுடன் உடனிருந்து சதி செய்பவர்களால் தேவையில்லாத நிறைய பாதிப்புகள் ஏற்படும். சுப விரய பிராப்தம் உண்டாகும். வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்பட்டாலும் அவை சந்தோஷமான செலவுகளாக இருக்கும். பிள்ளைகளுடன் இருந்த பாதிப்புகள் பரிபூரண நிவர்த்தி ஏற்படும். முதுகு வலி, கழிவுப் பாதையில் ஏற்படும் பிரச்சனைகளை கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும்.
எதிரிகளிடம் கவனம்
யோக பலன்கள் அதிகளவில் ஏற்படும். எதிரிகள் விஷயத்தில் சிறிது கவனமாக இருக்க வேண்டும். தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என எந்த எதிரிகளிடமும் அலட்சியமாக இல்லாமல் இருப்பது நல்லது. ஞாயிற்றுக்கிழமை தோறும் பெருமாள் தாயார் வழிபாடு செய்வது, அனுமன் இருக்கும் கோயில்களில் தீபமேற்றி வழிபாடு செய்வது அற்புதமான முன்னேற்றத்தைக் கொடுக்கும்.
ஆரோக்கியம், வழிபாடு
வயிறு, முதுகுத்தண்டுவடம் தொடர்பான பிரச்சனைகளில் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது. முதுகு, கழுத்து பிரச்சனைகளில் அக்கறை செலுத்துவது நல்லது. உத்தியோகம் ரீதியாக சிறு சிறு பிரச்சனைகள் வரும் என்பதால் சிறிது கவனமாக இருப்பது நல்லது. தான் உண்டு, தன் வேலை உண்டு என்றிருப்பது நன்மையைப் பெற்றுத் தரும். உணர்ச்சிவசப்படுவதைத் தவிர்த்துக் கொள்வது நல்லது.












Click it and Unblock the Notifications