Rasi Palan This Week: அஷ்டலட்சுமி யோகம் பெறும் கும்ப ராசி.. கால் வைக்கும் இடமெல்லாம் கரன்ஸி
வார ராசி பலன்: டிசம்பர் 29 ஆம் தேதி முதல் ஜனவரி 4 ஆம் தேதி வரையிலான மார்கழி 7 முதல் 13 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கும்ப ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

தற்போது கார்த்திகை மாதம் முடிந்து இந்த மாதம் மார்கழி பிறந்துள்ளது. மார்கழி மாதம் பீடை மாதம் என்பார்கள். ஆனால், அப்படியல்ல மிகவும் உத்தமமான மாதமாகும். மார்கழி மாதத்தில் தினமும் பிரம்ம முகூர்த்தத்தில் அகல்விளக்கு ஏற்றி வருவது உங்களுக்கு அற்புதமான நன்மைகளைத் தரும். அந்த வகையில், டிசம்பர் 29 ஆம் தேதி முதல் ஜனவரி 4 ஆம் தேதி வரையிலான மார்கழி 7 முதல் 13 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கும்ப ராசி பலன்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு லாபமும், சந்தோஷமும் அதிகரிக்கும். முதலீடுகளைச் செய்து மகிழ்வீர்கள். தொடர்ச்சியாக இருந்து வந்த பாதிப்புகள், கஷ்டங்கள் நீங்கும். பிள்ளைகள் விஷயத்தில் அனுகூலம் ஏற்படும். அசையும், அசையா பொருள்கள் சேர்க்கை உண்டாகும். அவற்றின் மூலம் நல்ல லாபங்கள் கிடைக்கும். வண்டி வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும்.
அஷ்டலட்சுமி யோகம்
அஷ்டலட்சுமி யோகத்தைப் பெறுவீர்கள். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். காதல் அமைப்பு கைகூடும். திருமணம் தொடர்பான விஷயங்களில் இருந்து வந்த தடைகள் அனைத்தும் நீங்கும். வேற்று மொழி மனிதர்களால் அதிகமான ஆதாயம் உண்டாகும். உள்ளூர் பயணம், வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். இழுபறியாக இருந்த விஷயங்கள் இனி அடுத்தடுத்து நடக்க ஆரம்பிக்கும்
ஆடை ஆபரண யோகம்
தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு தொடர்பான விஷயத்தில் நல்ல ஏற்றத்தைக் காண்பீர்கள். புதிய முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். வீடுகளில் இன்டீரியர்களை மாற்றி அமைப்பீர்கள். பெண்களுக்கு ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் ஏற்படும். மனதிற்குப் பிடித்த விஷயங்களை செய்து முடிப்பீர்கள். பிள்ளைகள், பேரக் குழந்தைகள் விஷயத்தில் தலைமுறைக்கும் நல்லது நடக்கும் காலகட்டம்.
அனுகூலம்
எல்லா விதமான அனுகூலங்களும் ஏற்படுவது மகிழ்ச்சியை ஏற்படுத்தும். தாய் வழி உறவு, தந்தை வழி உறவு மேன்மை அடையும். மகான்களின் ஆசிர்வாதம் ஏற்றத்தை தரும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பண வரவு நன்றாக இருக்கும். உத்தியோகத்தில் இருந்து வந்த தடைகள் அனைத்தும் பரிபூரணமாக நிவர்த்தியாகும். நல்ல விஷயங்கள் அடுத்தடுத்து நடக்கும்.
வழிபாடு
குடும்பத்தில் மகிழ்ச்சி பிறக்கும். திட்டமிட்டு செய்யும் காரியங்களில் வெற்றிகளைக் காண்பீர்கள். கோளார் பதிகத்தை தினந்தோறும் கேட்பது அனுகூலத்தை தரும். நவக்கிரகத்தில் இருக்கும் சூரியன், கேது வழிபாடு தடைகளில் இருந்து நிவர்த்தியை ஏற்படுத்தும். அபிராமி அந்தாதியில் இருக்கும் 40, 59, 90 ஆவது பாடல்களை படிப்பது நன்மையைத் தரும்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கோடீஸ்வர யோகம் பெறும் சிம்ம ராசி.. அள்ளிக் கொடுக்கும் குரு, கேது பகவான் -
தமிழ் புத்தாண்டு பலன்: துலாம் ராசிக்கு அதிர்ஷ்டமும், ஆபத்தும் சேர்ந்து வருது.. இந்த விஷயத்தில் கவனம் -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்!












Click it and Unblock the Notifications