Rasi Palan This Week: கும்பத்துக்கு குபேர யோகம்.. அடுத்தடுத்து அதிர்ஷ்டம்.. 1 விஷயம் ரொம்ப முக்கியம்
வார ராசி பலன்: டிசம்பர் 22 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரையிலான மார்கழி 7 முதல் 13 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கும்ப ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

தற்போது கார்த்திகை மாதம் முடிந்து இந்த மாதம் மார்கழி பிறந்துள்ளது. மார்கழி மாதம் பீடை மாதம் என்பார்கள். ஆனால், அப்படியல்ல மிகவும் உத்தமமான மாதமாகும். மார்கழி மாதத்தில் தினமும் பிரம்ம முகூர்த்தத்தில் அகல்விளக்கு ஏற்றி வருவது உங்களுக்கு அற்புதமான நன்மைகளைத் தரும். அந்த வகையில், டிசம்பர் 22 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 29 முதல் மார்கழி 6 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கும்ப ராசி பலன்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
கும்பம் (Kumbam Rasi Palan)
கும்ப ராசிக்காரர்களுக்கு நீங்கள் எதிர்பார்த்த அனைத்து நல்ல விஷயங்களும் நடக்கக்கூடிய அற்புதமான காலகட்டமாக இருக்கும். தடைபட்டு வந்த அனைத்து சுபகாரியங்களும் நடக்கும். வரவுகளில் முன்னேற்றம் ஏற்படும். ஆடை, ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். நகை வாங்குவது, வீடு வாங்குவது, நிலம் வாங்குவது, முதலீடுகள் செய்வது, பயணங்கள் மேற்கொள்வது போன்ற யோகங்கள் ஏற்படும்.
பணவரவு கொட்டும்
கையில் பணத்திற்குப் பஞ்சம் இருக்காது. பொருளாதாரத்தில் அபரிமிதமான முன்னேற்றம் ஏற்படும். கவனத்தை சரியாக ஓரிடத்தில் வைத்தால் எல்லா விஷயங்களிலும் வெற்றி ஏற்படும். நிறைய பேருக்கு தொழில் அமையும். வேலை அமையும். ஈடிஎப், இன்சூரன்ஸ், அக்கவுண்ட் சம்பந்தப்பட்ட துறைகளில் உங்களுக்கு வேலை கிடைக்கும் யோகம் உண்டாகும். பெரிய பதவிகள் கண்டிப்பாக கிடைக்கும்.
ஆசிர்வாதம்
சமூகத்தில் இருக்கும் பெரிய மனிதர்களைச் சந்திக்கும் நல்லகாலகட்டமாக இருக்கும். திடீர் மகான்கள் தரிசனம் ஏற்படும். தொலைதூரத்தில் இருப்பவர்கள் ஆசிர்வாதம் பெறக்கூடிய காலகட்டம். அனுமன் வழிபாடு சகலவிதத்தில் ஏற்றத்தைக் கொடுக்கும். ஆஞ்சநேயர், விநாயகர் தரிசனம் உண்டாகும். எல்லா விஷயங்களும் இந்த வாரம் சமூகமாக, சந்தோஷமாக நடைபெறும்.
உடற்பயிற்சி முக்கியம்
ஏழரை சனி இருப்பதால் உடற்பயிற்சியை தொடர்ச்சியாக செய்து வருவது நல்லது. இழுபறியாக இருந்த நிலைமைகள் மாறுவது ஆச்சரியமான முன்னேற்றத்தை ஏற்படுத்தும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு விஷயங்களில் இருந்து வந்த பாதிப்புகள் அனைத்தும் நீங்கும். சித்திரை மாதம் 1 ஆம் தேதி முதல் உங்களுடைய ஆட்டம் தொடங்கும்.
வழிபாடு
பெரிய ஏற்றங்களும், நம்பிக்கையும் உருவாகும். கோபத்தை தவிர்ப்பது நல்லது. வாக்குறுதிகளை பார்த்துக் கொடுப்பது நல்லது. வயிறு சம்பந்தப்பட்ட உறுப்புகள், கல்லீரல், குடல் போன்றவற்றில் ஏற்படும் பாதிப்புகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். நவக்கிரகத்தில் இருக்கும் சூரிய பகவான் வழிபாடு உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தைக் கொடுக்கும்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications