Kumbam: கும்ப ராசிக்கு அட்டகாசமான முன்னேற்றம்.. ஏமாறும் வாய்ப்புள்ளதால் மிகுந்த கவனம்
மார்ச் மாத பலன்கள்: பிப்ரவரி மாதம் நிறைவடைந்து மார்ச் மாதம் பிறந்துள்ளது. மார்ச் மாதத்தில் சந்திரகிரகணம் நேற்று நிறைவடைந்துள்ளது. மார்ச் 6 ஆம் தேதி சனிப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது. முக்கிய கிரகங்களின் மாற்றம் நடைபெறும் நிலையில், இந்த மார்ச் மாதத்தில் கும்ப ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம்.
மார்ச் மாதம் ஆரம்பிக்கும்போதே சுக்கிரன் தனது உச்ச வீடான சிம்மத்தில் அமரப்போகிறார். உலகில் உள்ள அனைத்து மக்களுக்கும் சுகங்களையும், செளபாக்கியங்களையும் தரக்கூடிய மாதமாக இருக்கும். 13 ஆம் தேதிக்குப் பிறகு குரு பகவான் வக்கிர நிவர்த்தி அடையவுள்ளார். 22 ஆம் தேதி செவ்வாயும் அமருகிறார். 14 ஆம் தேதி சூரியன் சனியோடு இணைந்து மீனத்தை நோக்கி பயணிக்கப் போகிறார்.

30 ஆண்டுகளுக்குப் பிறகு சூரியன், சனி, செவ்வாய் இணைவுகள் நிகழப் போகிறது. 5 ஆம் வீட்டில் கேது, 11 ஆம் வீட்டில் ராகு இருக்கிறார். இந்த கிரக நிலைகளின் அடிப்படையில் இந்த மாதம் பிறக்கிறது. சந்திரன் தன்னுடைய பயணத்தை தனது சொந்த வீடான கடகத்தில் இருந்து ஆரம்பிக்கிறார். அந்த வகையில், இந்த மார்ச் மாதத்தில் கும்ப ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.
கும்பம்
கும்ப ராசியினருக்கு இந்த மார்ச் மாதம் கொஞ்சம் கடுமையான மாதமாக இருக்கும். 4,9 க்கு உடைய சுக்கிரன் மாதத்தின் முதல் 3 ஆம் தேதியே உச்சமடைந்து 2 ஆம் வீட்டுக்குச் செல்கிறார். சுக்கிரன் உங்களுக்கு பாதகாதிபதி. அந்த சுக்கிரன் இப்போது 2 ஆம் இடமான தன ஸ்தானத்தில் உச்சமடைகிறார். பணம், பொருளாதாரம் சார்ந்த விஷயங்களில் மிகுந்த பாதிப்பு ஏற்படும்.
ஏமாறும் வாய்ப்பு
வம்பு, வழக்கு, பிரச்சனைகள், தீய நண்பர்கள், பழக்கவழக்கங்கள் போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். யாரையும் நம்பி பணம் தராமல் இருப்பது நல்லது. அவர்கள் உங்களை ஏமாற்றிச் செல்வதற்கான வாய்ப்பு ஏற்படும். 4, 9க்கு உரிய சுக்கிரன் உச்சம் பெறுவதால் மனைவி, மனைவி வீட்டு ஆட்களால் மிகப்பெரிய பிரச்சனைகள், டென்ஷன்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு.
அமைதி அவசியம்
அமைதியையும், பொறுமையும் கடைப்பிடிப்பது ஏற்றத்தைத் தரும். ஐடி துறையில் இருப்பவர்கல், இன்ட்ரா டே செய்பவர்கள் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். ராசியிலேயே ராகு இருப்பதால் பணத்தை மிகவும் பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும். காதல் மலரும் யோகம் உண்டு. இல்லறம் சிறக்கும். காதலுக்கு கிரீன் சிக்னல் கிடைக்கும்.
பயணம்
புதிய சிந்தனைகள் வரும். இளமை திரும்பும். நிறைய பேர் ஜிம்மில் சேரும் யோகம் உண்டாகும். செவ்வாய், சூரியன், ராகு ஆகியோர் ராசியில் இருக்கும்போது மிகவும் பிஸியாக இருப்பீர்கள். ஊரை விட்டுச் செல்வது நன்மையைத் தரும். ராசியில் இத்தனை கிரகங்கள் இருக்கும்போது பயணம் செய்வது நன்மை பயக்கும். புனித பயணம், ஆறு தாண்டி, கடல் தாண்டி பயணம், ராமேஸ்வரம் செல்வது போன்ற பயணங்கள் மேற்கொள்வது நன்மை பயக்கும்.
திடீர் அதிர்ஷ்டம்
ராசியில் ராகு இருப்பதால் பெரிய பணங்கள் திடீர் அதிர்ஷ்டங்கள் வந்து சேரும். புதிய வாய்ப்புகள் பொறுப்புகள் வந்து சேரும். இந்த மாதம் கண்டிப்பாக நல்ல வாய்ப்புகள் வந்து சேரும். அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வது நல்லது. உங்கள் நிலை கண்டிப்பாக உயரும். ராசியில் ராகு பகவானோடு செவ்வாய், சூரியன் ஆகிய கிரகங்கள் இருக்கின்றனர்.
பொருளாதாரம்
2 ஆம் இடத்தில் சூரியன் வருவதால் வெளிநாட்டு உறவுகளால் நன்மை, வெளிநாடு பயணத்தால் அனுகூலம் உண்டாகும். சனி 2 ஆம் இடத்துக்குச் சென்றுள்ளதால் பொருளாதாரம் அற்புதமாக உயரும். இந்த மாதம் முழுவதும் ஆன்மீகம், அன்னதானம், உதவிகள் செய்வது, ஏழைகளுக்கு உதவுவது, ரத்த தானம் கொடுப்பது நன்மையைத் தரும்.
வழிபாடு
12 ஆம் தேதி குரு பகவான் வருவதால் உங்கள் வாழ்க்கையே மாறும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். தங்கம் சேரும் யோகம் உண்டாகும். புதிதாக தொழில் தொடங்கும் யோகம் உண்டாகும். நல்ல காலம் பிறக்கும் யோகம் உண்டு. மனைவி, மனைவி சம்பந்தப்பட்ட பிரச்சனைகல் வருவதற்கான வாய்ப்புள்ளது. பணத்தை இழப்பதற்கான வாய்ப்புள்ளதால் மிகுந்த கவனம் தேவை. ஆலங்குடி குரு பகவான் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
தமிழ் புத்தாண்டு பலன்: ராஜாபகவத் போல மாறும் விருச்சிக ராசி.. கூரையை பிச்சுகிட்டு கொட்டும் அதிர்ஷ்டம் -
தமிழ் புத்தாண்டு பலன்: ரிஷப ராசிக்கு குரு உச்சம்.. கூரையை பிச்சுகிட்டு கொட்டும் பணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: கோடீஸ்வர யோகம் பெறும் சிம்ம ராசி.. அள்ளிக் கொடுக்கும் குரு, கேது பகவான் -
தமிழ் புத்தாண்டு பலன்: கடக ராசிக்கு டாப் கிளாஸ் யோகம்.. தலையெழுத்தே மாறப்போகுது -
தமிழ் புத்தாண்டு பலன்: துலாம் ராசிக்கு அதிர்ஷ்டமும், ஆபத்தும் சேர்ந்து வருது.. இந்த விஷயத்தில் கவனம் -
Rasi Palan This Week:குருவின் அருளால் சனியிடமிருந்து தப்பிக்கும் மீன ராசி..பண விஷயத்தில் ரொம்ப கவனம் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம்












Click it and Unblock the Notifications