Kumbam Rasi Palan: கும்பம் ராசிக்கு வாயில் தான் கண்டமே.. திடீர் அதிர்ஷ்டமும் காத்திருக்கு

Subscribe to Oneindia Tamil

Kumbam Rasi Palan: சித்திரை மாதம் தொடங்கியுள்ள நிலையில், கும்பம் ராசியினருக்கு இந்த மாதம் புதிய வாய்ப்புகளும் சில முக்கிய மாற்றங்களும் காத்திருக்கின்றன. தொழில், பணவரவு, உறவுகள் உள்ளிட்டவற்றில் கிடைக்கும் பலன்கள், கவனிக்க வேண்டிய விஷயங்கள் மற்றும் பரிகாரங்களை இங்கே பார்க்கலாம்.

சித்திரை மாதம் 2026 மற்றும் பராபவ தமிழ்ப் புத்தாண்டு பிறந்துள்ளது. சூரிய பகவான் மீன ராசியிலிருந்து கடக ராசிக்குப் பெயர்ச்சியாகியுள்ளார். இந்த சித்திரை மாதத்தில் அட்சய திருதியை நன்னாள் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் கல் உப்பு, அரிசி, பருப்பு வாங்குவது நன்மையைத் தரும். மே 4 முதல் 28 ஆம் தேதி வரை கடும் வெயில் நிலவும்.

Chithirai matha rasi palan kumbam rasi palan lucky zodiac signs

பராபவ வருடத்தின் முதல் மாதமான இந்த சித்திரை மாதத்தில் ஒவ்வொரு ராசியினருக்கும் நற்பலன்கள் கிடைக்கும். அந்த வகையில், இந்த சித்திரை மாதத்தில் கும்பம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து பார்க்கலாம்.

கும்பம் (Kumbam Rasi Palan)

கும்பம் ராசியினருக்கு குடும்பம் தொடர்பான விஷயத்தில் அதீத கவனமாக இருக்க வேண்டும். துணை விஷயத்தில் வாக்குவாதம் இல்லாமல் இருப்பது நல்லது. வாக்கு ஸ்தானத்தில் சனி இருப்பதால் பேசும் வார்த்தைகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். மற்றவர்களுடன் இணக்கமாக பேசி செல்வது நன்மை. பெரும் வெற்றிகள், சந்தோஷம் ஏற்படும் காலகட்டம்.

அதிர்ஷ்டம்

திடீர் பொறுப்புகள், அதிர்ஷ்டம், கெளரவம் கிடைக்கும் நல்ல காலகட்டம். தொழிலில் அற்புதமான ஏற்றம் ஏற்படும். வாகனங்களில் செல்லும்போது மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு தொடர்பான விஷயங்களில் அபிவிருத்தி ஏற்படும். நிலம், பூமி, சம்பந்தப்பட்ட விஷயங்களில் நல்ல ஏற்றம் ஏற்படும்.

யோக பலன்

வீட்டிற்குத் தேவையான விஷயங்களை வாங்குவீர்கள். வீட்டிற்கு இன்டீரியர் டெக்கரேட் செய்வீர்கள். பெரிய மனிதர்களை சந்திக்கும் பாக்கியம் ஏற்படும். யோக பலன்களை அதிகளவில் பெறும் காலகட்டம். வயிறு மற்றும் கழுத்து தொடர்பான பாதிப்புகளில் கவனமாக இருக்க வேண்டும். பெரும் வெற்றி, சந்தோஷம் கிடைக்கும். உணர்ச்சிவசப்படாமல் பொறுமை, நிதானத்துடன் எல்லா விஷயங்களையும் கையாள வேண்டும்.

பணவரவு

சித்திரை மாதத்தில் சிறப்பான வளர்ச்சி ஏற்படும். செயலில் வெற்றி உண்டாகும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். குடும்பத்தோடு தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும். எதிர்பாராத பண வரவுக்கு வாய்ப்பு உண்டு. குடும்பத்தினரிடையே மதிப்பு மரியாதை அதிகரிக்கும். உங்களுடைய பேச்சுக்கு மதிப்பு அதிகரிக்கும்.

சுபநிகழ்ச்சி

சுபநிகழ்ச்சிக்கான பேச்சுவார்த்தை நல்லபடியாக நடக்கும். தந்தை மூலமாக நல்ல ஆதரவு, பண உதவிகள் கிடைக்கும். சகோதரர்களால் சில பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அவர்களிடம் இணக்கமாக செல்வது நல்லது. அரசாங்க அதிகாரிகள் உதவிகரமாக இருப்பார்கள். வழக்குகளில் நல்ல திருப்பம் ஏற்படும். பிள்ளைகளால் மகிழ்ச்சி ஏற்படும். நண்பர்கள் உதவி செய்வார்கள். சிலருக்கு எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படும்.

வழிபாடு

படிப்பு, உத்தியோகம், தொழில், வியாபாரம், அரசு சார்ந்த விஷயங்களில் பெரிய முன்னேற்றம், அதிர்ஷ்டம் ஏற்படும். அசையும், அசையா பொருள்கள் வாங்கும் யோகம் உண்டு. சுப காரியத்தில் இருந்து வந்த தடைகள் பரிபூரணமாக நீங்கும். நவக்கிரகத்தில் இருக்கும் ராகு கேதுவுக்கு விளக்கேற்றுவது ஏற்றத்தை ஏற்படுத்தும். வெள்ளிக்கிழமை தோறும் பசு மாடுகளுக்கு உணவளிப்பது நன்மையைத் தரும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+