Kumbam Rasi Palan: தடைகளைத் தகர்த்தெறியும் கும்ப ராசி.. குட்நியூஸ் காத்திருக்கு
பிப்ரவரி மாத பலன்: புத்தாண்டின் இரண்டாம் மாதமான பிப்ரவரி மாதம் பிறக்கப் போகிறது. இந்த மாதத்தில் கும்ப ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து பார்க்கலாம்.
ஒன்பது கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரக மாற்றமான 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிகளுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் கொடுக்கும். இந்த பிப்ரவரி மாதத்தில் குரு பகவான் மிதுன ராசியில் இருக்கப் போகிறார். சந்திரன் தன்னுடைய கடக ராசியில் ஆட்சி வீட்டில் அமர்கிறார். சொந்த வீட்டில் ஆரம்பித்து சொந்த வீட்டிலேயே இந்த மாதத்தை நிறைவு செய்வார்.

கேது பகவான் சிம்ம ராசியில் அமர்ந்திருக்கிறார். சூரியன், சுக்கிரன், செவ்வாய் ஆகியோர் மகர ராசியில் அமர்ந்திருக்கின்றனர். மகரத்தில் செவ்வாய் உச்சமடைந்துள்ளது. கும்ப ராசியில் புதன் பகவானும், செவ்வாயும் அமர்ந்திருக்கின்றனர். மீனத்தில் சனி பகவான் அமர்ந்திருக்கிறார். அந்த வகையில், இந்த பிப்ரவரி மாதத்தில் கும்ப ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.
கும்பம் ராசி பலன்
கும்ப ராசிக்காரர்களுக்கு உங்கள் ராசியிலேயே புதன், ராகு பகவான் இருக்கின்றனர். மாதத்தின் இரண்டாம் பகுதியில் சூரியனும் வந்து அமர்கிறார். செவ்வாய் பகவான் பிப்ரவரி 21 ஆம் தேதி வருகிறார். புதனும், ராகுவும் ராசியில் இருக்கும்போது தொழில் ரீதியாக பெரிதாக ஏதாவது செய்ய வேண்டும் என்கிறத சாதிக்கும் எண்ணம் ஏற்படும். ஆனால், நிறைய தடைகள் வந்து கொண்டே இருக்கும். தடைகளைத் தகர்த்தெறியக் கூடிய வகையில் கடும் உழைப்பைக் கொடுக்கக் கூடிய மாதமாக இருக்கும்.
குழந்தை பாக்கியம்
பிப்ரவரி மாதத்தில் நீண்ட நாட்களாக குழந்தைகள் இல்லாமல் இருப்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். கர்ப்பிணிகள் முறையாக மருத்துவர்களின் ஆலோசனைகளைக் கடைப்பிடிப்பது நல்லது. படிக்கும் மாணவர்களுக்கு அற்புதமான உயர்கல்வி அமையும் யோகம் உண்டு. படிப்பில் முன்னேறக்கூடிய யோகம் உண்டு. புதிதாக படிப்பில் சேர வேண்டும் என்று முயற்சிப்பவர்களுக்கு கடைசி வரை சீட் கிடைக்குமா, கிடைக்காதா என்கிற நெருக்கடிக்கு நடுவில் சேரும் நிலை ஏற்படும்.
வருமானம் பெருகும்
படிப்பில் நிறைய தடைகள் இருக்கும். ஆனாலும், ஜெயிக்கும் யோகம் உள்ளது. நிதி சார்ந்த விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும். கையிருப்பு நன்றாக இருக்கும். குடும்ப வருமானம் பெருகும். பண வரவிற்குப் பஞ்சம் இருக்காது. சனி பகவான் இரண்டாம் இடத்தில் இருக்கிறார் என்பதால் நல்ல பண வரவு இருக்கும். அச்சப்படத் தேவையில்லை.
குடும்பம்
திருமணம் சார்ந்த விஷயங்களில் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. ராசியில் ராகு, 7 இல் கேது இருக்கின்றனர். வாழ்க்கைத் துணைக்கும், உங்களுக்கும் கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதற்கான சூழல் ஏற்படும். குடும்பத்தில் சில சலசலப்புகள் வரும். கணவன், மனைவிக்கிடையே மூன்றாம் நபர்களால் பிரச்சனை வரலாம். ஆனாலும், கணவன், மனைவி இருவரும் விட்டுக் கொடுக்காமல் இணக்கமாகச் செல்வது நல்லது.
வெளிநாடு யோகம்
நிறைய முதலீடுகளைச் செய்து மகிழ்வீர்கள். மூட்டு வலி, வாயு பிரச்சனை, உடல்நலக் குறைபாடு என ஆரோக்கியத்தில் மாறி மாறி ஏதாவது பிரச்சனைகள் வரும். அப்பாவின் ஆரோக்கியத்தில் பிரச்சனைகள் ஏற்படும். வெளியூர் பயணங்கள், வெளிநாடு வாய்ப்புகள் கைகூடி வரும். குடும்பத்தில் திருமண விஷயங்கள் கைகூடி வரும்.
வழிபாடு
நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும் காலகட்டம். தொழிலில் நிறைய எதிர்பார்ப்புகள் உங்களுக்கு ஏற்படும். இந்த மாதத்தில் அதிர்ஷ்டங்கள் பெருக முருகப் பெருமானை வழிபாடு செய்வது ஏற்றத்தைக் கொடுக்கும். எல்லா விதமான நன்மைகளைப் பெறும் மாதமாக இருக்கும்.












Click it and Unblock the Notifications