Kumbam: கும்பம் ராசிக்கு இனி எல்லாமே ஏறுமுகம் தான்.. தொழிலில் அடிக்கும் ஜாக்பாட்
கார்த்திகை மாத பலன்: நவம்பர் 17 ஆம் தேதி கார்த்திகை மாதம் துவங்கவுள்ளது. இந்த கார்த்திகை மாதத்தில் கும்பம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், ஏற்படப் போகும் மாற்றங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
ஐப்பசி மாதம் முடிந்து கார்த்திகை மாதம் துவங்கவுள்ளது. விருச்சிக ராசி செவ்வாய் வீட்டிற்கு சூரியன் வரக்கூடிய மாதமே கார்த்திகை மாதம். கார்த்திகையில் நிறைய விசேஷங்கள் நடக்கும். ஐயப்ப பக்தர்கள் லட்சக்கணக்கானோர் மாலை போடும் காலம். கார்த்திகை தீபம் வரும் மாதம். நவம்பர் 17 முதல் டிசம்பர் 15 ஆம் தேதி வரையிலான கார்த்திகை மாதம்.

கார்த்திகை மாதத்தில் திருவண்ணாமலை தீபம் மிகவும் பிரதானமானதாகும். வீட்டில் ஒற்றைப் படையில் தீபமேற்றுவது நன்மை பயக்கும். கார்த்திகை மாதம் முழுவதும் சோமவாரம் எனும் திங்கள்கிழமை விசேஷமான காலமாகும். சிவன் கோயிலில் நடைபெறக்கூடிய சங்காபிஷேகத்தில் கலந்துகொள்வது, அபிஷேகத்தில் கலந்துகொள்வது நன்மையை ஏற்படுத்தும்.
பரிகாரம்
கடன் குறைய வேண்டும், தேக ஆரோக்கியத்தில் பலம் பெற வேண்டும் என்றால் கோயிலுக்கு பழங்கள் வாங்கிக் கொடுப்பது நன்மையை ஏற்படுத்தும். கடன் குறைய வேண்டும் என்றால் திங்கள்கிழமை தோறும் பச்சரிசி வாங்கிக் கொடுப்பது நன்மை பயக்கும். பஞ்சாங்கத்தின்படி, கார்த்திகை மாதத்தில் கன மழை பெய்யும். தமிழகம் முழுவதும் வெள்ளக் காடாக மிதக்கும் சூழ்நிலை ஏற்படும். இந்த கார்த்திகை மாதத்தில் கும்பம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்துப் பார்க்கலாம்.
கும்பம்
கும்பம் ராசிக்காரர்களுக்கு தொழிலே இல்லை என்று கஷ்டப்பட்டவர்கள் இனி அற்புதமாக தொழில் செய்யும் யோகம் உண்டாகும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு என அனைத்து விஷயங்களிலும் உங்களுக்கு அபிவிருத்தி ஏற்படும். மன அழுத்தங்கள் பரிபூரணமாக நீங்கும். செய்யாத தவறுக்கு பெரும் பாதிப்புகளைச் சந்தித்து வந்திருப்பீர்கள். அந்த நிலைமைகள் அனைத்தும் தீரும்.
கடன்கள் தீரும் யோகம்
வியாபாரத்தில் அதீத கவனம் ஏற்படும் பழைய கடன்களை அடைத்து முடிக்கும் யோகம் ஏற்படும். எதிரிகள் விஷயத்தில் இருந்து வந்த கோபங்கள் அனைத்தும் நீங்கும் அமைப்பு உள்ளது. உத்தியோகம் ரீதியாக அனுகூலங்கள் காணப்படும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு தொடர்பான விஷயங்களில் இதுவரை இழுபறியாக இருந்து வந்த நிலைமைகள் அனைத்தும் நிவர்த்தியாகும்.
தொழில்
இனி அடுத்தடுத்து நல்ல விஷயங்கள் நடக்கும் காலகட்டமாக இருக்கும். புதிய தொழில் தொடங்கும் அமைப்பு ஏற்படும். குடும்பத்தாருடன் உள்ளூர், வெளியூர், கடல் கடந்த பயணங்கள் மேற்கொள்ளும் அமைப்பு ஏற்படும். குடும்பத்தில் புதிய வரவுகள் வரும். புதிதாக திருமணமாகி உறவுகள் வருவது, குழந்தைகள் வருவது, பேரன் பேத்திகள் வருவது போன்ற நல்ல விஷயங்கள் நடக்கும்.
தொழிலில் ஏற்றம்
சிலர் வளர்ப்பு பிராணிகள் வாங்குவார்கள். உயிருள்ள ஜீவன்கள் வாங்குவது, மீன் வளர்ப்பது போன்ற நல்ல விஷயங்கள் நடக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த கஷ்டங்கள், பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும். சந்தோஷமான மன நிலையில் இருப்பீர்கள். எதிர்பார்க்காத இடத்தில் இருந்து உதவிகள் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் மிகப்பெரிய ஏற்றம் கிடைக்கும். நீண்ட நாட்களாக இருந்த சிக்கல்கள் பரிபூரணமாக நிவர்த்தியாகும்.
ஆரோக்கியம்
படைப்பாளிகள், கலைத் துறையினர், மீடியா துறையினர் எல்லோருக்கும் அனுகூலம் காணப்படும். முதுகு, கழுத்து, சுளுக்கு போன்ற விஷயங்களில் மிக கவனமாக இருக்க வேண்டும். தினந்தோறும் தவறாமல் உடற்பயிற்சி செய்வது ஏற்றத்தைக் கொடுக்கும். ஆயில் புல்லிங் செய்வது பெரிய ஏற்றத்தை தரும். நீண்ட நாட்களாக தொழில் ரீதியாக இருந்த கஷ்டங்கள் படிப்படியாக தீரும்.
வழிபாடு
யோக பலன்கள் அதிகமாகக் கிடைக்கக் கூடிய நல்ல அமைப்பாக இருக்கும். எல்லா விதத்திலும் அனுகூலம் காண விநாயகர், பெருமாள் வழிபாடு ஏற்றத்தை தரும். எதிர்பாராத உதவிகள் முன்னேற்றம் கிடைக்கும் அற்புதமான காலகட்டமாக இருக்கும்.
-
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications