சிங்கம் போல மாறும் கும்ப ராசி.. ராஜவாழ்க்கை வாழப்போறீங்க கன்ஃபார்ம்

Subscribe to Oneindia Tamil

Masi Matha Palangal: தை மாதம் நிறைவடைந்து மாசி மாதம் பிறக்கவுள்ளது. இந்த மாசி மாதத்தில் கும்பம் ராசியினருக்கு (Kumbam Rasi Palan) கிடைக்கும் முழுமையான பலன்கள், அதிர்ஷ்டங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம்.

கும்பத்தில் சூரியன் வரக்கூடிய மாதமே மாசி மாதம் என்று அழைக்கப்படுகிறது. பிப்ரவரி 13 முதல் மார்ச் 14 ஆம் தேதி வரையிலான இந்த மாதத்தில் நிறைய விசேஷங்கள் நடைபெறவுள்ளன. பிப்ரவரி 15 ஆம் தேதி மகா சிவராத்திரி நடைபெறுகிறது. 4 கால பூஜைக்கு தரிசனம் செய்வது, பசு நெய், நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுவது, அன்னதானத்திற்கு உதவி செய்வது ஏற்றத்தை ஏற்படுத்தும்.

kumbam-rasi-palan-what-kind-of-benefits-will-get-kumbam-rasi-people-during-this-maasi-month

சிவனுக்கு வழிபாடு செய்வது, ஆராதனை செய்வது, இரவு நேரம் கண் விழித்து சிவனுக்கு செய்யக்கூடிய தொண்டு திருப்தியைக் கொடுக்கும். உங்களுடைய கர்மாக்கள் நிவர்த்தியாகும். இந்த மாசி மாதத்தில் கும்பம் ராசியினருக்கான முழு பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

கும்பம் ராசி பலன்

கும்பம் ராசி, லக்கினம் சார்ந்த நபர்களுக்கு எடுத்த காரியங்களில் வெற்றிகள் கிடைக்கும். வெற்றியைக் கொடுக்கக் கூடிய காலகட்டம். முழுமூச்சாக ஒரு காரியத்தில் இறங்குவீர்கள். அதில் அற்புதமான வெற்றியைப் பெறக்கூடிய யோகம் உண்டாகும். வாழ்க்கையில் மாற்றம் வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு எல்லா எல்லா விதமான நல்ல மாற்றங்களும் ஏற்படும். நீங்கள் திட்டமிட்டாலே போதும்.

தலைமைப் பொறுப்பு

திட்டமிட்டு செய்யும் விஷயங்கள் அனைத்துமே உங்களுக்கு சாதகமாக நடக்கும். தேவையில்லாத மனக் கவலை, சலிப்பு, கோபம் எல்லாமே நிவர்த்தியாகும். தலைமைப் பதவிகள் தேடி வரும். பேராசிரியர், கல்லூரியில் வேலைக்கு சேருவது, துணை வேந்தராகும் யோகம், பெரிய பெரிய துறைகளில் தலைமைப் பொறுப்புக்குச் செல்லும் அமைப்பு, தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் யோகம் உண்டாகும்.

பதவி உயர்வு

பதவி உயர்வுகள் தேடி வரும். நினைத்த விஷயங்கள் அனைத்திலுமே வெற்றி வாகை சூடுவீர்கள். காரியத்தை கச்சிதமாக செய்து முடிப்பீர்கள். எதற்காகவும், யாருக்காகவும் பயப்படத் தேவையில்லை. பெரிய பொறுப்பு, புகழ், மரியாதை கிடைக்கும். நிம்மதியாக ஒரு காரியத்தில் நின்று சாதிக்கும் யோகம் உண்டு. பெரிய வெற்றியைப் பெறக்கூடிய காலகட்டம்.

குருவக்கிரம்

கும்பத்தில் இருக்கும் பல பேர் கும்பாபிஷேகத்தில் பங்கேற்கும் யோகம், பூர்ண கும்ப மரியாதை பெறக்கூடிய யோகம் உண்டு. பெரிய ஏற்றம், வெற்றிகளைப் பெறக்கூடிய அற்புதமான காலகட்டம். குரு வக்கிரமாக இருப்பதால் உங்களுக்கு திருமண யோகம், வெளியூரில் வேலை, குழந்தை பாக்கியம், காதல் கைகூடுவது, நிறைய பேர் உங்கள் திருமணத்தில் பங்கேற்பது போன்ற யோகங்கள் உண்டு.

மாற்றம், முன்னேற்றம்

இடமாற்றம், வீடு மாற்றம், தொழில் மாற்றம், படிப்பு மாற்றம் என அனைத்து விதமான மாற்றங்களும் ஏற்படும் அற்புதமான காலகட்டமாக இருக்கும். இந்த மாசி மாதத்தில் உங்களுக்கு நிறைய நன்மைகள் நடக்கும். சந்தோஷம், பொருளாதாரம் ரீதியாக 100 சதவீதம் நன்றாக இருக்கக்கூடிய அற்புதமான காலகட்டமாக இருக்கும். முருகர் வழிபாடு உங்களுக்கு அமோகமான விதத்தை ஏற்படுத்தும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+