Kumbam: கும்ப ராசிக்கு அதிர்ஷ்டத்தை அள்ளும் நேரம்.. சொந்த வீடு வாங்குவது கன்ஃபார்ம்
மே மாத ராசி பலன்: 2026 மே மாதம் பிறக்கவுள்ளது. இந்த மே மாதத்தில் கும்ப ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரக மாற்றமானது சில ராசிகளுக்கு சுப பலன்களையும், சில ராசியினருக்கு அசுப பலன்களையும் ஏற்படுத்தும். கிரக நிலைகள் ஒவ்வொரு ராசிக்கும் வேறுபட்ட பலன்களை தரும் நிலையில், தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் எப்படி அமையும்? எந்த கிரகங்கள் சாதகமாக உள்ளன, எவற்றில் கவனம் தேவை? இதோ மே மாத கும்பம் ராசிக்கான கிரக பலன்கள்.

கும்பம்
கும்ப ராசியினருக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். பெரிய அளவில் நன்மைகள் கிடைக்கும். மாதத்தின முதல் 15 நாட்கள் 3 ஆம் இடத்தில் சூரியன் வலுவாக இருக்கிறார். பின்னர் அங்கு செவ்வாய் போய் சேருகிறார். 11 ஆம் தேதிக்குப் பிறகு செவ்வாய் அங்கு ஒருமாதம் இருப்பார். 3 ஆம் இடத்தில் பாவ கிரகங்கள் இருந்தால் முயற்சிகள் பலிக்கும். நல்ல அறிமுகங்கள் கிடைக்கும்.
கவலை நீங்கும்
உங்களுடைய 5 ஆம் அதிபதியாகிய புதன் நீசமாக இருந்த நிலையில் 1 ஆம் தேதியில் இருந்து 3 ஆம் இடத்திற்குப் போகிறார். வீட்டில் குழந்தைகள், பெரியவர்கள், குடும்ப உறுப்பினர்களைப் பற்றி இருந்த கவலைகள் நீங்கும். சோம்பேறியாக இருந்த இளைய பருவத்தினர், குழப்பத்தில் இருந்தவர்களுக்கு அந்த நிலைமைகள் எல்லாம் மாறும். எந்த விஷயத்தை செய்ய வேண்டும் என்று யோசித்து செயல்படுவீர்கள். குழப்ப நிலைகள் பரிபூரணமாக நீங்கும்.
வெற்றி
சட்டப் போராட்டங்களில் ஜெயிக்கும் யோகம் உண்டாகும். 7 ஆம் அதிபதி உச்சமாக இருப்பதால் நண்பர்கள், கூட்டாளிகள் மூலமாக நன்மைகள் கிடைக்கும் காலகட்டமாக இருக்கும். கணவன், மனைவி உறவு அற்புதமாக இருக்கும். பிரிந்துவிடலாம் என்று நினைத்தவர்கள் கூட மீண்டும் சேரக்கூடிய அமைப்பு ஏற்படும். பெரிய அளவில் முன்னேற்றங்கள் ஏற்படும்.
பெண்கள்
எதைப் பற்றியும் கவலைப்படத் தேவையில்லை. 7 ஆம் அதிபதி உச்சமாக இருப்பதால் இதுவரை கைகொடுக்காத கணவன், மனைவி, காதலன், காதலி, உறவுகள் கண்டிப்பாக நன்றாக இருக்கும். கடன் அதிகமாகிவிட்டதே என்று வருத்தப்பட்டுக் கொண்டிருக்கும் பெண்களுக்கு அந்த கவலைகள் நீங்கும். கும்ப ராசி பெண்களைப் பற்றிய சந்தேகங்கள் கணவருக்கு விலகும். எல்லா விஷயங்களும் நன்றாக இருக்கும்.
சொந்த வீடு யோகம்
சுக்கிர பகவான் மாதத்திற்கு பிற்பகுதியில் அதிகமாக இருப்பதால் புதிய வீடு, வண்டி வாகனம் வாங்குவதற்கான வாங்கும் யோகம் உண்டாகும். வீட்டுக் கடன் கிடைப்பதற்கான யோகம் உண்டு. 4 ஆம் இடம் சொகுசு பயணங்களை குறிக்கக்கூடியது என்பதால் நிறைய உல்லாச பயணங்களுக்கு செல்வீர்கள். நல்ல வருமானங்கள் கிடைக்கும்.
குழந்தைகளை சந்தோஷப்படுத்துவீர்கள். தூர தேச பயணங்களை மேற்கொள்வீர்கள். எதிலும் நிறைவு இருக்கக்கூடிய மாதமாக இந்த மே மாதம் அமையும். இளைய பருவத்தினருக்கு கூடுதல் நன்மைகள் ஏற்படும். நல்லது நடக்கும் என்கிற பிடிப்பு ஏற்படும்.












Click it and Unblock the Notifications