Rasi Palan This Week: கும்ப ராசிக்கு பேச்சில் மிகுந்த கவனமாக இருங்க.. அதிர்ஷ்டமும் காத்திருக்கு
Kumbam Rasi Palan: புத்தாண்டில் முதல் தமிழ் மாதமான தை மாதம் பிறந்துள்ளது. தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது நம்பிக்கை. அந்த வகையில் இந்த வாரம் ஜனவரி 19 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை, தை 4 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கும்ப ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

புத்தாண்டில் முதல் தமிழ் மாதமான தை மாதம் பிறந்துள்ளது. இந்த வாரம் முக்கியமான வாரம். வாழ்வில் முன்னேற்றம் பெற தை அமாவாசை தினமான இன்று முன்னோர்களை வழிபாடு செய்வது ஏற்றத்தை தரும். பசு மாடுகளை தானமாக அளிக்கலாம். 19 ஆம் தேதி புண்ணிய நதிகளில் நீராடுவதால் கர்மாவுக்கான கடன்கள் நிவர்த்தியாகும். 25 ஆம் தேதி ரதசப்தமி நடைபெறவுள்ளது. அன்றைய தினம் சூரிய பகவானை வழிபாடு செய்வது நன்மையைத் தரும்.
இந்த வாரம் மிக முக்கிய கிரகப் பெயர்ச்சியான புதன் பெயர்ச்சி நடைபெறுகிறது. தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு புதன் பெயர்ச்சியாகிறார். அந்த வகையில் இந்த தை மாதத்தில் ஜனவரி 19 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை, தை 4 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கும்ப ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
கும்பம் ராசி பலன் (Kumbam Rasi Palan)
கும்ப ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு உங்களுடைய பணிவு எப்போதும் சாதகமாக இருக்கும். 2 ஆம் இடத்தில் சனி இருப்பதால் யாரிடம் எப்படி பேச வேண்டுமோ அப்படி பேசுவீர்கள். ராசி லக்னத்தை விட்டு ராகு போகும் வரை மற்றவர்களிடம் பேசும்போது நாம் பேசும் வார்த்தையில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். பஞ்சம ஸ்தானத்தில் குரு வக்கிரமாக இருப்பதால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
பாக்கியம்
பாக்கியம் நன்றாக உள்ளது. அதிர்ஷ்டங்களை அள்ளும் காலகட்டமாக இருக்கும். பூர்வ புண்ணிய ஸ்தானம் நன்றாக இருப்பதால் முன் ஜென்மத்தில் செய்த செயல்களுக்கான பல பலன்கள், புண்ணியங்கள் கிடைக்கும். குழந்தைகள் நன்றாக இருப்பார்கள். உடம்பில் இருந்து வந்த அலர்ஜி சரியாகும். காலில் இருந்து வந்த பாதிப்புகள் சரியாகும்.
ஆரோக்கியம்
ராகு என்றால் பிரம்மாண்ட விகாரம் என்று பெயர். உடம்பில் தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனை, கட்டி, கொப்புளம் போன்றவை வருவதற்கான வாய்ப்பு உள்ளது. மன நிம்மதி ஏற்படும். தைரியமாக நிறைய நல்ல விஷயங்களை எடுத்துச் செய்வீர்கள். மன நிம்மதி கிடைக்கும். நல்ல விஷயங்கள் நிறைய நடக்கும் காலகட்டமாக இருக்கும். காலில் நிறைய பிரச்சனைகள் வரும் வாய்ப்புள்ளது. அதை மட்டும் பார்த்துக் கொள்வது நல்லது.
முன்னேற்றம்
அற்புதமும், ஆனந்தமும் பெறக்கூடிய நல்ல காலகட்டம். எல்லா விஷயங்களிலும் ஏற்றம் ஏற்படும். இழுபறியாக இருந்த நிலைமைகள் எல்லாம் நீங்கும். அடுத்தடுத்து நல்ல காரியங்கள் நடக்கும். தொழில், உத்தியோகம், வியாபாரம் போன்ற அனைத்து விஷயங்களிலும் நல்லவை நடக்கும் காலகட்டம். சிக்கல்கள், பாதிப்புகள் அனைத்தும் நீங்கும். தொழிலில் அபரிமிதமான முன்னேற்றம் ஏற்படும்.
சுபவிரயம்
உடற்பயிற்சியை தினந்தோறும் செய்வது நல்லது. பிள்ளைகள் விஷயத்தில் ஆராய்ச்சி செய்து கொண்டே தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளின் தொழில், உத்தியோகம், வியாபாரத்தில் யோக பலன்கள் அதிகளவில் கிடைக்கும். சுபவிரய பிராப்தம் உண்டாகும். பெரிய விரயங்கள் ஏற்படும் என்பதால் மதிய வேளையில் உணவு தானம் கொடுப்பது நன்மை பயக்கும்.
வழிபாடு
நீங்கள் சந்தோஷமாக இருப்பதை வெளியில் காட்டிக் கொள்ளாமல் இருப்பது நன்மை பயக்கும். வேறு பெரிய பாதிப்புகள் எதுவும் ஏற்படாது. பூதராஜர் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும். சந்தோஷம் ரீதியாகவும், பொருளாதாரம் ரீதியாகவும் 80 சதவீதம் நன்றாக இருக்கும்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications