Kumbam Rasi Palan: கும்ப ராசிக்கு வாயில தான் கண்டமே.. பேச்சினால் வரப்போகும் பெரும் ஆபத்து.. கவனம்
வார ராசி பலன்: ஏப்ரல் 6 ஆம் தேதி முதல் ஏப்ரல் 12 ஆம் தேதி வரை, பங்குனி 23 ஆம் தேதி முதல் பங்குனி 29 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கும்பம் ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

மார்ச் 3 ஆம் தேதி சந்திர கிரகணம் நடைபெற்றுள்ளது. அதைத்தொடர்ந்து, மார்ச் 6 ஆம் தேதி வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி சனிப்பெயர்ச்சி ஆகியுள்ளது. இந்த கிரகங்களின் மாற்றமானது 12 ராசிகளிலும் பலன்களைக் கொடுக்கும். பங்குனி மாதம் பிறந்துள்ளது. இந்த மாதத்தில் பங்குனி உத்திரம் மற்றும் ஸ்ரீராம நவமி முக்கியத்துவம் வாய்ந்ததாகும். முருகர், ராமர், அனுமன், பெருமாளுக்கு விசேஷமான மாதம்.
அந்த வகையில், ஏப்ரல் 6 ஆம் தேதி முதல் ஏப்ரல் 12 ஆம் தேதி வரை, பங்குனி 23 ஆம் தேதி முதல் பங்குனி 29 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கும்பம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
கும்பம் ராசி பலன் (Kumbam Rasi Palan)
கும்பம் ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்கள் இந்த வாரம் வார்த்தையில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். குடும்பத்தில், வீட்டில், அலுவலகத்தில் என எங்கு பேசினாலும் பொறுமை, நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. உணர்ச்சிவசப்பட்டு பேசினால் பெரிய பிரச்சனைகளில் சிக்கிக் கொள்ளும் வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. கோபத்தை தலைக்கு ஏற்றிக் கொள்ளாமல் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.
லாபங்கள் உண்டு
நிறைய நன்மைகள் நடக்கும் காலகட்டம். பேச்சில் இனிமையைக் கடைப்பிடிப்பது நல்லது. லாபங்கள் அபரிமிதமானதாக கிடைக்கும். உறவுகள் தொடர்பான விஷயங்களில் மேன்மை ஏற்படும். அடுத்தடுத்து சுபகாரியங்கள் நடக்கும் காலகட்டம். புதிய வண்டி, வாகனங்களை வாங்கி மகிழ்வீர்கள்.. கிச்சனுக்குத் தேவையான பொருள்களை வாங்குவீர்கள். சிறிய சிறிய பிரச்சனையையும் தலையில் போட்டுக் கொள்ளாமல் இருப்பது நல்லது.
யோகம்
பஞ்சம ஸ்தானத்தில் இருக்கும் குருவுக்கும், சுக்கிரனுக்கும் முழு சந்திரன் பார்வை கிடைப்பதால் யோகமான காலகட்டமாக இருக்கும். சுறுசுறுப்பாக இருப்பீர்கள். நல்ல விஷயங்கள் நிறைய செய்வீர்கள். ராசி லக்னத்தில் இருக்கும் ராகுவுக்கு குரு பார்வை இருப்பதால் தேவையில்லாத எண்ணங்கள் தோன்றும். எல்லாமே சரியாக இருந்தாலும் ஏதோ சரியில்லை என்கிற எண்ணம் ஏற்படும் என்பதால் கவனம் தேவை.
ஆரோக்கியம்
கும்ப ராசியினர் காது, மூக்கு, தொண்டை, அசிடிட்டி, மன அழுத்தம், அலர்ஜி, ஒருவிதமான பயம் போன்றவை இருக்கும் காலகட்டம். தினந்தோறும் நரசிம்மர் கவசம் கேட்பது ஏற்றத்தைக் கொடுக்கும். நவக்கிரகத்தில் இருக்கும் ராகு வழிபாடு அற்புதமான ஏற்றத்தைக் கொடுக்கும். நரசிம்மர் கோயில்களுக்கு எண்ணெய், பானகத்திற்கு வெல்லம், ஏலக்காய், சுக்கு போன்றவற்றை தானமாக அளிப்பது நன்மை தரும்.
உதவி கிடைக்கும்
பணப் பாற்றைக்குறை இருக்கும். ஆனால், உங்களுக்கு தேவைப்படும் சமயத்தில் ஆட்கள் வந்து நிற்பார்கள். குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்தில் பிரச்சனை வர வாய்ப்புள்ளதால் பார்த்துக் கொள்ள வேண்டும். சந்தோஷம் 80 சதவீதமும், பொருளாதாரம் 65 சதவீமும் நன்றாக இருக்கும்.
-
Kanni Rasi Palan: சொல்லி அடிக்கும் கன்னி ராசி.. இந்த விஷயங்களில் கவனமாக இருங்க..! -
Simmam Rasi Palan: சிங்கம் போல யோகம் பெறும் சிம்ம ராசி.. பண மழை கொட்டப் போகுது -
Kadagam Rasi Palan: கடக ராசிக்கு லாபத்தில் செவ்வாய்.. இந்த வாரம் அதிர்ஷ்டம், ஆபத்து சேர்ந்து வருது -
Mithunam Rasi Palan: டாப் கியரில் செல்லும் மிதுன ராசி.. 3 சர்ப்ரைஸ் நிச்சயம் -
Rishabam Rasi Palan: ஜாக்பாட் அடிக்கும் ரிஷப ராசி.. இனி தொட்ட காரியங்களில் வெற்றி நிச்சயம் -
Mesham Rasi Palan: மேஷ ராசிக்கு டபுள் தமாக்கா காத்திருக்கு.. இந்த வாரத்தில் நடக்கும் அதிரடி மாற்றம் -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங்












Click it and Unblock the Notifications