Rasi Palan This Week: கும்ப ராசிக்கு டாப் கிளாஸ் யோகம்.. சொத்துகளை வாங்கி குவிக்கப் போறீங்க
Kumbam Rasi Palan: மார்ச் 30 ஆம் தேதி முதல் ஏப்ரல் 5 ஆம் தேதி வரை, பங்குனி 16 ஆம் தேதி முதல் பங்குனி 22 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கும்ப ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

மார்ச் 3 ஆம் தேதி சந்திர கிரகணம் நடைபெற்றுள்ளது. அதைத்தொடர்ந்து, மார்ச் 6 ஆம் தேதி வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி சனிப்பெயர்ச்சி ஆகியுள்ளது. இந்த கிரகங்களின் மாற்றமானது 12 ராசிகளிலும் பலன்களைக் கொடுக்கும். பங்குனி மாதம் பிறந்துள்ளது. இந்த மாதத்தில் பங்குனி உத்திரம் மற்றும் ஸ்ரீராம நவமி முக்கியத்துவம் வாய்ந்ததாகும். முருகர், ராமர், அனுமன், பெருமாளுக்கு விசேஷமான மாதம்.
அந்த வகையில், மார்ச் 30 ஆம் தேதி முதல் ஏப்ரல் 5 ஆம் தேதி வரை, பங்குனி 16 ஆம் தேதி முதல் பங்குனி 22 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கும்ப ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
கும்பம் ராசி பலன் (Kumbam Rasi Palan)
கும்ப ராசியினருக்கு தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பில் நல்ல ஏற்றம் ஏற்படும். அசையும், அசையா பொருள்கள் சேர்க்கை உண்டாகும். நிறைய சுபகாரியங்கள் நடக்கும் காலகட்டம். பெரிய மனிதர்களைச் சந்திப்பது, பெரிய இடத்துக்குச் செல்வது, உத்தியோக ரீதியாக இருந்து வந்த சிக்கல்கள் தீரும் நல்ல காலகட்டம். வியாபாரத்தில் அனுகூலம் காணப்படும்.
நல்ல செய்திகள்
எதிர்பார்க்காத இடத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். இழுபறியாக இருந்த நிலைமைகள் மாறும். உத்தியோகம், வியாபாரம், தொழிலில் அடுத்தடுத்து நல்ல விஷயங்கள் நடக்கும். எதிர்பார்க்காத காரியங்களில் ஜெயம் ஏற்படும். நீண்ட நாட்களாக இருந்து வந்த தடைகள் நிவர்த்தியாகும். செல்வாக்கு கூடக்கூடிய நல்ல காலகட்டம்.
வீடு வாங்கும் யோகம்
நிலம் வாங்குவது, வீடு வாங்குவது, மண் வாங்குவது போன்ற யோகங்கள் உண்டாகும். குலதெய்வ வழிபாடுகளைச் செய்து மகிழ்வீர்கள். குடும்பத்தில் புதிய வரவுகள் உண்டாகும். எதிர்பார்க்காத இடத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். இழுபறியாக இருந்த விஷயங்கள் நிவர்த்தியாகும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். உத்வேகம் ஏற்படும். வார்த்தைகளில் அதீத கவனமாக இருக்க வேண்டும்.
ஆரோக்கியம்
வாக்கு கொடுப்பது, ஜாமீன் கொடுப்பது போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது. புதிய விஷயங்களை எடுத்துச் செய்யும்போது சிறிது கவனம் வேண்டும். எல்லா விஷயங்களிலும் நன்மைகள் ஏற்பட்டாலும் திருப்தியில்லாத நிலைமை ஏற்படும். இளைய சகோதரன், சகோதரிகள் விஷயங்களில், நண்பர்களுக்கு, மாமனாருக்கு ஆரோக்கியத்தில் குறைபாடு ஏற்படும்.
வழிபாடு
காசு பணத்திற்குப் பஞ்சமே இருக்காது. பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சந்தோஷம் ரீதியாக 60 சதவீதமும், பொருளாதார ஏற்றம் 80 சதவீதமும் நன்றாக இருக்கும். திருத்தணி முருகப் பெருமானை வழிபாடு செய்வது ஏற்றத்தைக் கொடுக்கும். வயிறு தொடர்பான விஷயத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். இரண்டு முறை பல் துலக்குவது ஏற்றத்தைத் தரும்.












Click it and Unblock the Notifications