Kumbam Rasi Palan: கும்பத்துக்கு அள்ளி கொடுக்கும் குரு, சுக்கிரன்.. அதிர்ஷ்ட தேவதை கதவை தட்ட போகுது
செப்டம்பர் மாத பலன்: ஆகஸ்ட் மாதம் நிறைவடைந்து செப்டம்பர் மாதம் தொடங்கப் போகிறது. 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் கும்ப ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
நவக்கிரகத்தில் இருக்கும் 9 கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரக மாற்றமானது சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் ஏற்படுத்தும். இந்த செப்டம்பர் மாதத்தில் பல்வேறு கிரகங்களின் முக்கிய பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. அந்த வகையில், இந்த செப்டம்பர் மாதத்தில் கும்ப ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், மாற்றங்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு அற்புதமான நிகழ்வுகள் நடக்கும் காலகட்டம். பெரிய அளவில் கஷ்டங்கள் எதுவும் இருக்காது. கடந்த ஆண்டுகளில் பட்ட கஷ்டங்கள் எல்லாம் இனி விலகிப் போகும். செப்டம்பர் மாதத்தின் பிற்பகுதியில் 2 சுபர்கள் குருவும், சுக்கிரனும் ராசியை வலுத்துப் பார்க்கின்றனர். இது ஒரு பெரிய விசேஷ அமைப்பாகும். 10 ஆம் தேதிக்குப் பிறகு நல்ல அமைப்பு ஏற்படும்.
அதிர்ஷ்டம்
எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் கிடைக்கும். பங்குச் சந்தையில் கைகொடுக்கக் கூடிய தன்மை உள்ளது. எதிர்பார்க்காத விதமாக ஒரு நண்பர் உங்களுக்கு கைகொடுப்பார். எல்லா நிலைமைகளிலும் முன்னேற்றமான அமைப்பாக இருக்கும். ஜென்மசனி விலகி உள்ளது. இருப்பினும் நல்ல நிலைமையில் இல்லை என வருந்திக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும் காலகட்டமாக இருக்கும்.
குரு பார்வை
10 ஆண்டுகளாக குரு பார்வை உங்களுக்கு கிடைக்காமல் இருந்தது. இனி குரு, சுக்கிரன் பார்வை சேர்ந்து கிடக்கிறது. வழி பிறப்பதை கண்கூடாகப் பார்ப்பீர்கள். தொட்டது துலங்கக் கூடிய காலகட்டமாக இருக்கும். நினைத்தவை எல்லாம் நடக்கும். தடைகள் விலகும். மற்றவர்கள் உங்களைப் புரிந்து கொள்வார்கள். திருமண யோகம் கைகூடும். புத்திர பாக்கியம் கிடைக்கும்.
செழிப்பு
வேலை மாற்றம் உண்டாகும். தொழிலில் முன்னேற்மடையும் காலகட்டம். வியாபார அமைப்புகள் செழிப்பாக இருக்கும். ஜென்மத்தில் ராகு அமர்ந்திருக்கிறார். அந்த ஜென்ம ராகுவும் ஓராண்டில் விலகி விடுவார். அதன் பின்பு உங்களுக்கு அமோகமான முன்னேற்றம் ஏற்படும். முன்னேற்றம் மட்டுமே கொடுக்கக்கூடிய சிறப்பான மாதமாக இருக்கும்.
செலவுகள் வரும்
2 ஆம் இடத்தில் சனி இருப்பது மட்டும் பண வரவில் கொஞ்சம் பாதிப்பை ஏற்படுத்தும். 9 ஆம் இடத்துக்கு செவ்வாய் வருகிறார். அப்பாவின் உறவுகளிடம் கொஞ்சம் கவனமாக இருப்பது நல்லது. குருவின் பார்வையில் செவ்வாய் இருப்பதால் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படாது. தந்தைக்கு ஏதாவது செலவு, சொந்த ஊர் தொடர்பான செலவுகள் ஏற்படுவது போன்றவை ஏற்படும். ஆனால், அவை அனைத்தையும் சமாளிக்கக்கூடிய யோகமும் உள்ளது.












Click it and Unblock the Notifications