Rasi Palan This Week: லக்கி பாஸ்கராக மாறும் கும்ப ராசி.. தொட்டதெல்லாம் தூள் பறக்கப் போகுது
வார ராசி பலன்: செப்டம்பர் 8 முதல் 14 ஆம் தேதி வரையிலான ஆவணி 23 முதல் ஆவணி 29 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கும்ப ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

இந்த ஆவணி மாதத்தில் புதன் வக்கிர நிவர்த்தி அடைகிறார். பொதுவாக இந்த மாதம் கடகம், விருச்சிகம், மீனம் ராசிக்காரர்களுக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். நிறைய பேருக்கு வேலையில் நிரந்தர தன்மை உண்டாகும். திடீர் பண வரவுகள் ஏற்படும். மிதுனம், துலாம், கும்ப ராசிக்கும் நன்றாக இருக்கும். வீடு வாங்குவோருக்கு சிறப்பான காலகட்டமாக இருக்கும்.
சந்திர கிரகணம், குரு வக்கிர பெயர்ச்சி உள்ளிட்ட பல முக்கிய நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. அந்த வகையில், செப்டம்பர் 8 முதல் 14 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்தில் கும்ப ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
கும்பம்
கும்பம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் உத்யோகம், தொழிலில் அற்புதமாக இருக்கும். உத்யோகம், தொழில், வியாபாரம், கல்வி எல்லாவற்றிலும் அமோக பலன்கள் கிடைக்கும். உத்யோகம், தொழிலில் இருந்த தடைகள் நீங்கி ஏற்றம் காணப்படும். குழந்தைகளின் கல்வி, வேலை வாய்ப்பு ஆகியவற்றில் முன்னேற்றம் ஏற்படும். இழுபறியாக இருந்த விஷயங்கள் நிறைவேறும்.
அதிர்ஷ்டம்
மனதில் நினைத்த காரியங்கள் படிப்படியாக நிறைவேறும். சுப காரிய தடைகள் விலகும். திருமணம், குழந்தை பாக்கியம் போன்ற முயற்சிகளில் நல்ல செய்தி கிடைக்கும். குடும்பத்தில் புதிய உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். பயணங்களால் ஆதாயம் உண்டு. இந்த வாரம் உள்ளூர், வெளி மாநில, வெளிநாடு பயணங்களால் திடீர் அதிர்ஷ்டம் ஏற்படும். எதிர்பாராத இடத்தில் இருந்து திடீர் பண வரவு, அதிர்ஷ்டம் இருக்கும்.
வாய்ப்புகள்
தொழிலில் இருந்த சிக்கல்கள் விலகி தொழிலில் விருத்தி ஏற்படும். உங்கள் மனதில் தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும். உங்களின் பேச்சுக்கு மதிப்புக் கூடும். சமூகத்தில் உங்களின் செல்வாக்கு, அந்தஸ்து அதிகரிக்கும். தொழிலில் நீண்ட காலமாக திட்டமிட்ட காரியங்களை நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகள் கைகூடி வரும்.
கவனம்
வாழ்க்கை துணை கால், பாதம், மூட்டு சம்மந்தப்பட்ட விஷயங்களில் அதிக கவனமாக இருக்க வேண்டும். வழுக்கி விழுவதற்கான அபாயம் உள்ளது. எனவே நடக்கும்போது மிகவும் கவனத்துடன் இருப்பதை உறுதி செய்யுங்கள். சிறு பிரச்சனையாக இருந்தாலும் அலட்சியம் காட்டாமல் உடனடியாக மருத்துவ பரிசோதனை மேற்கொள்வது அவசியம். வளர்ப்பு பிராணிகள், விசப்பூச்சிகள் ஆகியவற்றிடமும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
பரிகாரம்
உங்கள் ஆரோக்கியத்தை பொறுத்தவரை வயிறு, கண் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். நவகிரகங்கள் வழிபாடு நல்ல பலன்களை கொடுக்கும். சூரிய பகவானுக்கு விளக்கு ஏற்றி வழிபடுவதன் மூலம் தடைகள் விலகி அதிர்ஷ்டங்கள் கூடும்.
-
Mithunam Rasi Palan: டாப் கியரில் செல்லும் மிதுன ராசி.. 3 சர்ப்ரைஸ் நிச்சயம் -
Rishabam Rasi Palan: ஜாக்பாட் அடிக்கும் ரிஷப ராசி.. இனி தொட்ட காரியங்களில் வெற்றி நிச்சயம் -
Mesham Rasi Palan: மேஷ ராசிக்கு டபுள் தமாக்கா காத்திருக்கு.. இந்த வாரத்தில் நடக்கும் அதிரடி மாற்றம் -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு












Click it and Unblock the Notifications