கும்ப ராசிக்கு டாப் கிளாஸ் யோகம்.. தடைகள் எல்லாம் தவிடுபொடியாகும் காலம்.. என்ஜாய்
வார ராசி பலன்: ஆகஸ்ட் 10 முதல் 16 ஆம் தேதி வரையிலான ஆடி 26 முதல் ஆவணி 1 வரையிலான இந்த வாரத்திற்கான கும்ப ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஆடி மாதம் நிறைவடைந்து ஆவணி மாதம் பிறக்கப் போகிறது. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலைமாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

இந்த ஆவணி மாதத்தில் புதன் வக்கிர நிவர்த்தி அடைகிறார். இந்த மாதத்தில் கடகம், விருச்சிகம், மீனம் ராசிக்காரர்களுக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். நிறைய பேருக்கு வேலையில் நிரந்தர தன்மை உண்டாகும். திடீர் பண வரவுகள் ஏற்படும். மிதுனம், துலாம், கும்ப ராசிக்கும் நன்றாக இருக்கும். வீடு வாங்குவோருக்கு
அந்த வகையில், ஆகஸ்ட் 10 முதல் 16 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்தில் கும்ப ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
கும்பம்
கும்ப ராசி அல்லது லக்கினக்காரர்களுக்கு ஆரம்ப நாட்களில் மட்டும் அலைக்கழிப்பு, அலைச்சல், கோபப்படுவது, சண்டை போடுவது போன்ற தேவையற்ற நிகழ்வுகள் ஏற்படும். ஆரோக்கியம், வண்டி, வாகனங்களில் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது. மற்றபடி எந்த விஷயங்களிலும் பெரிதும் பாதிப்பு ஏற்படாது. திட்டமிட்ட விஷயங்களில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். சண்டை போட்டு எல்லா விஷயங்களையும் சாதிப்பீர்கள்.
பேச்சை தவிர்ப்பது நல்லது
வராத பணங்கள் வந்து சேரும். பிரிந்த கணவன், மனைவி மீண்டும் சேரும் வாய்ப்பு ஏற்படும். மேலதிகாரிகளால் பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. ஆனால், அதனையும் சமாளிப்பீர்கள். பேச்சை கட்டுப்படுத்துவது நல்லது. பேச்சைக் கட்டுப்படுத்தி செயல்படுத்திக் காட்டுவது நல்லது. மனக் கலங்கள் ஏற்படாது. நிறைய ஏற்றங்களும், முன்னேற்றமும் நிறைந்த காலகட்டமாக இருக்கும்.
நினைத்தது நடக்கும்
யோக பலத்தை அதிகளவில் பெறக்கூடிய காலகட்டமாக இருக்கும். எதிர்பார்த்த நல்ல விஷயங்கள் அனைத்தும் நடைபெறக்கூடிய அனுகூலம் ஏற்படும். தொடர்ச்சியாக மனதில் இருந்து வந்த அழுத்தங்கள் அனைத்தும் பரிபூரணமாக நீங்கும். நினைத்த காரியங்கள் கைகூடும் யோகம் உள்ளது. உங்கள் குடும்பத்தில் அந்நியர் தலையீடு, மற்றவர்கள் குடும்பத்தில் உங்கள் தலையீட்டை தவிர்ப்பது நல்லது.
சுபவிரையம்
முன்னேற்றமான காலகட்டமாக இருக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றங்கள் காணப்படும். பண வரவு அதிகரிக்கும். வெளியிடங்களில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். எடுத்த காரியங்களி வெற்றி பெறுவீர்கள். சுப விரையங்கள் ஏற்படும். சுப அமைப்புகள் உண்டாகும். முதலீடுகளைச் செய்து மகிழ்வீர்கள். அனுகூலமான காலகட்டமாக இருக்கும்.
வழிபாடு
தாய் வழி உறவு, தந்தை வழி உறவில் சந்தோஷமும், ஆதாயமும், லாபமும் உண்டாகும். சந்தோஷம் மற்றும் பொருளாதாரம் சார்ந்த விஷயங்களில் 90 சதவீதம் நன்றாக இருக்கும். நரசிம்மர் வழிபாடு சகல விதத்திலும் ஏற்றத்தை ஏற்படுத்தும்.












Click it and Unblock the Notifications