கூரையை பிச்சுகிட்டு கொட்டும் அதிர்ஷ்டம்.. கடக ராசிக்கு பண மழையில் நீச்சலடிக்கும் யோகம்
Lakshmi Narayana Yogam: புதன் மற்றும் சுக்கிரன் இணைவால் உருவாகும் லட்சுமி நாராயண யோகம் சில ராசியினருக்கு பல்வேறு சாதகமான பலன்களைத் தரப்போகிறது. குறிப்பாக, அடுத்த 66 நாட்களில் பணவரவு, தொழில், வேலை, திருமணம் உள்ளிட்ட விஷயங்களில் கடகம் ராசிக்கு என்னவிதமான பலன்கள் கிடைக்கும் என்று இந்தப் பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
அழகு, செளந்தர்யம், சந்தோஷம், காதல் போன்ற மகிழ்ச்சி தரக்கூடிய கிரகம் சுக்கிரம். இந்த சுக்கிர பகவான் செப்டம்பர் 4 ஆம் தேதி துலாம் ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். துலாம் ராசியில் ஆட்சி பெற்று அமர்கிறார். மூல திரிகோணத்தில் இருக்கும் புதன் துலாம் ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். அங்கு, துலாம், புதன் இரு கிரகங்களும் சஞ்சாரம் செய்து டிசம்பர் 6 ஆம் தேதி வரை அமர்ந்து யோகத்தை தரப் போகின்றன.

புதனும், சுக்கிரனும் இணைந்து லட்சுமி நாராயண யோகத்தை உருவாக்குவதால் அஷ்ட ஐஸ்வர்யங்களும் கிடைக்கும். பண வரவு உண்டாகும், திருமண யோகம் ஏற்படும். பணவரவு நன்றாக இருக்கும். காதலுக்கு கிரீன் சிக்னல் கிடைக்கும். நண்பர்களால் ஆதாயம் ஏற்படும். பெண்களுக்கு இந்த 66 நாட்கள் அற்புதமாக இருககும். துலாம், கடகம், கும்ப ராசிக்கு நிறைய நன்மைகள் ஏற்படும். தனுசு, ரிஷபம், சிம்ம ராசிக்கு பதவி உயர்வுகள் தேடி வரும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். பொருளாதாரத்தில் 5 மடங்கு உயர்வு ஏற்படும்.
அந்த வகையில், இந்த லட்சுமி நரசிம்ம யோகத்தால் கடகம் ராசியினருக்கு கிடைக்கப் போகும் நல்ல பலன்கள், அதிர்ஷ்டங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
கடகம்
கடகம் ராசியினருக்கு புதன் பகவான் 4 ஆம் இடத்தில் சுக ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார். அப்பார்ட்மென்ட் வாங்குவதற்கான யோகம், முதலீடு செய்வது போன்ற யோகம் உண்டாகும். ரெஜிஸ்டிரேஷன் செய்து ஆவணங்கள் கைக்கு வரும். உங்கள் வீட்டில் சுப காரியங்கள் அடுத்தடுத்து நடக்கும். வீட்டிற்குத் தேவையான பொருள்களான வாஷிங் மெஷின், ஃப்ரிட், ஏசி போன்றவற்றை வாங்கி மகிழ்வீர்கள். கார் வாங்குவது, எலக்ட்ரிக் வாகனங்கள் வாங்குவதற்கான யோகம் உண்டாகும்.
திருமண யோகம்
உற்றார், உறவினர்கள் நிறைய பேருக்கு திருமண யோகம் உண்டாகும். உங்கள் வீட்டில் நிச்சயதார்த்தம் நடக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். கார்டியாலஜிஸ்ட், பல்மனாலஜிஸ்ட் ஆவதற்கான வாய்ப்புள்ளது. உங்கள் ஊரிலேயோ வேலை அமைவது, வீடு கட்டுவது, வரன் அமைவது போன்ற பாக்கியம் உண்டாகும்.
முன்னேற்றம்
பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இளைய சகோதரன், சகோதரிகளின் முதல் குழந்தையின் ஆரோக்கியத்தைப் பார்த்துக் கொள்வது நல்லது. ரத்த அழுத்தம், சர்க்கரை போன்ற பாதிப்புகள் இருப்பவர்கள் ஆரோக்கியத்தைப் பார்த்துக் கொள்வது நல்லது. பொருளாதாரத்தில் அபரிமிதமான ஏற்றம் ஏற்படும். தொழிலில் பத்து மடங்கு உயர்வு ஏற்படும்.
தொழில்
ஆசிரியர், புரொடக்ஷன் துறையில் இருப்பவர்கள், நிதி, வங்கித் துறை, உற்பத்தி துறை போன்றவற்றில் இருப்பவர்களுக்கு ஏ கிளாஸ் யோகம் உண்டாகும். வேலையில் நம்பர் 1 ஆக இருப்பீர்கள். அடுத்தடுத்து உயர்வு, அங்கீகாரம் பெறக்கூடிய காலகட்டம். உலகளந்த பெருமாள் வழிபாடு, மகாலட்சுமி பெருமாள் வழிபாடு செய்வது, துளசி மாலை சாற்றுவது குடும்பத்தில் சந்தோஷத்தையும், ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.
100க்கு 80 மதிப்பெண்
காதல், திருமணம் இரண்டுமே தள்ளிப்போய் நடக்கும். தொழில், வேலை இரண்டுமே நன்றாக இருக்கும். இடம், நிலம், வீடு வாங்கும் யோகம் ஏற்படும். பணவரவு அபரிமிதமானதாக இருக்கும். சொந்த ஊரிலேயே செட்டிலாகும் யோகம் ஏற்படும். அடுத்த 4 மாதம் அற்புதமாக இருக்கும். எதிரிகளை வெற்றி பெறும் அமைப்பு உள்ளது. உறவுகளை நன்றாகப் பார்த்துக் கொள்வது நல்லது. சந்தோஷம் ரீதியாகவும், பொருளாதாரம் ரீதியாகவும் 80 சதவீதம் நன்றாக இருக்கும்.


Click it and Unblock the Notifications
