வீடு, கார், சொத்து வாங்கும் யோகம்.. மிதுனம் ராசிக்கு 66 நாட்கள் ராஜயோகம்
Lakshmi Narayana Yogam: புதன் மற்றும் சுக்கிரன் இணைவால் உருவாகும் லட்சுமி நாராயண யோகம் சில ராசியினருக்கு பல்வேறு சாதகமான பலன்களைத் தரப்போகிறது. குறிப்பாக, அடுத்த 66 நாட்களில் பணவரவு, தொழில், வேலை, திருமணம் உள்ளிட்ட விஷயங்களில் மிதுனம் ராசிக்கு என்னவிதமான பலன்கள் கிடைக்கும் என்று இந்தப் பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
அழகு, செளந்தர்யம், சந்தோஷம், காதல் போன்ற மகிழ்ச்சி தரக்கூடிய கிரகம் சுக்கிரம். இந்த சுக்கிர பகவான் செப்டம்பர் 4 ஆம் தேதி துலாம் ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். துலாம் ராசியில் ஆட்சி பெற்று அமர்கிறார். மூல திரிகோணத்தில் இருக்கும் புதன் துலாம் ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். அங்கு, துலாம், புதன் இரு கிரகங்களும் சஞ்சாரம் செய்து டிசம்பர் 6 ஆம் தேதி வரை அமர்ந்து யோகத்தை தரப் போகின்றன.

புதனும், சுக்கிரனும் இணைந்து லட்சுமி நாராயண யோகத்தை உருவாக்குவதால் அஷ்ட ஐஸ்வர்யங்களும் கிடைக்கும். பண வரவு உண்டாகும், திருமண யோகம் ஏற்படும். பணவரவு நன்றாக இருக்கும். காதலுக்கு கிரீன் சிக்னல் கிடைக்கும். நண்பர்களால் ஆதாயம் ஏற்படும். பெண்களுக்கு இந்த 66 நாட்கள் அற்புதமாக இருககும். துலாம், மிதுனம், கும்ப ராசிக்கு நிறைய நன்மைகள் ஏற்படும். தனுசு, ரிஷபம், சிம்ம ராசிக்கு பதவி உயர்வுகள் தேடி வரும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். பொருளாதாரத்தில் 5 மடங்கு உயர்வு ஏற்படும்.
அந்த வகையில், இந்த லட்சுமி நரசிம்ம யோகத்தால் மிதுன ராசியினருக்கு கிடைக்கப் போகும் நல்ல பலன்கள், அதிர்ஷ்டங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
மிதுனம்
மிதுன ராசியினருக்கு அடுத்த 66 நாட்கள் அற்புதமாக இருக்கக்கூடிய காலகட்டம். ராசியதிபதி புதன் 5 ஆம் இடத்தில் அமர்வதால் இஷ்ட தெய்வத்தின் அனுக்கிரகம் கிடைக்கக்கூடிய காலகட்டம். காதல் வாழ்க்கை அமையும். திருமணம் கைகூடி வரும் யோகம் உண்டாகும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். பூர்வீக சொத்துகள், பரம்பரை சொத்துகள், மனைவி சொத்துகள் கிடைக்கும். கணவர் வீட்டார் சொத்துகள் வந்து சேரும்.
புரோமோஷன்
அலுவலகத்தில் பதவி உயர்வு, அங்கீகாரம் கிடைக்கும். கார் வாங்கக்கூடிய யோகம் உண்டாகும். வீட்டில் நிறைய அலங்காரப் பொருள்களை வாங்குவீர்கள். சிலைகள் வாங்குவது, அலங்காரப் பொருள்கள் வாங்குவது, ஆபரணங்கள், ஆடைகள், பரிசுகள் போன்றவற்றை வாங்கி குவிப்பீர்கள். பிள்ளைகளின் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும்.
கவனம்
பின்பகுதியில் வலி வருவதற்கான வாய்ப்புள்ளது. மேலதிகாரிகள், புரோஜக்ட் நிர்வாகம் செய்யும் நபர்களால் பிரச்சனை வருவதற்கான வாய்ப்புள்ளது. வீட்டுக்கான பணத்தை அட்வான்ஸாக கொடுத்துவிட்டு ஏமாறாமல் இருப்பது நல்லது. சந்தோஷத்திற்கு அளவே இல்லாத அளவுக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். கணவன், மனைவிக்குள் அந்நியோன்யம், இணக்கமும் ஏற்படும். பெரிய அளவுக்கு வெற்றியும், மேன்மையும் ஏற்படும்.
சொத்துகள் குவியும்
வாழ்க்கையின் இலக்குகளை நிர்ணயிப்பீர்கள். வீடு வாங்குவது, கல்யாண மண்டபம் வாங்குவது, காம்ப்ளக்ஸ் வாங்குவது போன்ற யோகம் உண்டாகும். நண்பர்களால் பெரிய அளவு மகிழ்ச்சி ஏற்படும். கடனிலிருந்து முற்றிலும் விடுபடக்கூடிய அற்புதமான காலகட்டமாக இருக்கும். இந்த 4 மாதம் நீங்கள் முயற்சி செய்யும் காரியங்களில் எல்லாம் வெற்றி பெறும் யோகம் பெறுவீர்கள்.
வழிபாடு
லட்சுமி ஹயக்ரீவர் வழிபாடு ஏற்றத்தையும், சந்தோஷத்தையும் ஏற்படுத்தும். காதல் வாழ்க்கை இனிக்கும். தொழிலில் அற்புதமான முன்னேற்றம் ஏற்படும். கட்டிய வீடு வாங்குவதற்கான வாங்கும் யோகம் உண்டாகும். பணவரவு, மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். எதிரிகளின் தொல்லை, தடைகள் நீங்கும். இஷ்ட தெய்வத்தின் பரிபூரண அருள் கிடைக்கும்.
100க்கு 95 மதிப்பெண்
பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். திட்டமிட்ட காரியங்களில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பிரச்சனைகள் குறைந்து முன்னேற்றம் பெறக்கூடிய அமைப்பு உள்ளது. ஏற்கனவே இருக்கும் நபர்களால் மன நிம்மதி பெறுவீர்கள். சந்தோஷமும் பொருளாதார ஏற்றமும் 95 சதவீதம் நன்மைகளைப் பெறுவீர்கள்.


Click it and Unblock the Notifications
