வார ராசி பலன்: மேஷம் முதல் மிதுனம் ராசி வரை.. பண மழையில் நனையப் போகும் ராசிகள்?
வார ராசி பலன்: இந்த வாரத்தில் புதன் பெயர்ச்சி, சந்திரனின் மாற்றம், சனி, சுக்கிரன் சேர்க்கை, செவ்வாயின் வக்ர நிலை உள்ளிட்ட கிரகங்களின் அமைப்பு காரணமாக ஜனவரி 6 முதல் 12 வரையிலான காலத்தில் மேஷம் முதல் மிதுனம் ராசிகளுக்கு எப்படிப்பட்ட பலன்கள் கிடைக்கும் என தெரிந்து கொள்வோம்.
புதன் வக்கிர நிவர்த்தி, சந்திரனின் இடமாற்றம், சனி சுக்கிரன் சேர்க்கை போன்ற முக்கிய கிரக மாற்றங்கள இந்த வாரத்தில் நடைபெறவுள்ளன. இந்த கிரகங்களின் மாற்றம் ஒவ்வொரு ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்கள் அதிர்ஷ்ட யோகம் பெறுவார்கள், சில ராசிக்காரர்கள் பாதிப்பை சந்திக்கும் சூழல் ஏற்படும்.

அந்த வகையில், ஜனவரி 6 முதல் 12 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்தில் பல்வேறு கிரகங்களின் மாற்றத்தால் மேஷம் முதல் மிதுனம் ராசி வரையிலான ராசிகளுக்கு என்ன பலன்கள் கிடைக்கப் போகிறது என்பது குறித்து விரிவாகப் பார்க்கலாம்..
மேஷம் (Mesham Rasi palan): மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அதிர்ஷ்டமான பலன்கள் கிடைக்கும். பிறரிடம் பேசும்போது கவனமாக இருக்க வேண்டியது அவசியம். எந்தவொரு செயலைச் செய்தாலும், பேசினாலும் அதில் கவனமாக இருப்பது நல்லது. நிதானத்துடன் இருப்பது நன்மை பயக்கும். சிறிய பிரச்னைகள் கூட பெரிய பிரச்னையாக மாறும் வாய்ப்புள்ளது. அலுவலகத்தில் கொடுக்கப்படும் வேலைகளை உரிய நேரத்தில் செய்து முடிக்க முயற்சிப்பது அவசியம்.
வியாபாரம், தொழிலில் நீங்கள் எதிர்பார்த்ததைவிட நல்ல வருமானத்தை காண்பீர்கள். கூடுதல் வருமானம் உண்டாகும். நிதிநிலை சீராகும். கடன்களை அடைப்பதில் கவனம் செலுத்துவீர்கள். குடும்ப உறவுகளுடன் அல்லது நண்பர்களுடன் சேர்ந்து ஆன்மீக பயணம் மேற்கொள்வீர்கள். ஆடம்பரமான விஷயங்களில் அதிக செலவுகளைச் செய்வீர்கள். போட்டித் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நல்ல செய்திகள் வந்து சேரும். புதிய விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. கணவன், மனைவி மற்றும் காதல் உறவுகள் சிறப்பாக இருக்கும்.
ரிஷபம் (Rishabam Rasi palan): ரிஷப ராசிக்காரர்கள் ஏற்றத்தையும், இறக்கத்தையும் சமமாக சந்திப்பதற்கான காலமாக இருக்கும். உங்களுடைய சூழ்நிலையை உணர்ந்து கவனத்துடன் செயல்பட வேண்டும். சோம்பேறித்தனமாக இருப்பதை தவிர்த்து சுறுசுறுப்பாக இருக்க முயற்சி செய்ய வேண்டும். செய்யும் செயலிலும், பேசும் வார்த்தையிலும் கவனமாக இருப்பது நல்லது. பணத்தால் பல பிரச்னைகளை சந்திப்பீர்கள். பண இழப்புகள் ஏற்படும்.
கஷ்டமான சூழ்நிலைகளில் உங்களுடைய நண்பர்கள் உங்களுக்கு பக்க பலமாக இருப்பார்கள். வியாபாரம், தொழில் தொடர்பான எந்த விஷயங்களிலும் பணத்தை முதலீடு செய்வதற்கு முன்பு எச்சரிக்கையாக இருப்பது நல்லது. கூட்டாக சேர்ந்து தொழில் செய்பவர்கள் பங்குதாரர் விஷயங்களிலும், பண விஷயங்களிலும் கவனமாக இருக்க வேண்டும். உங்களுடைய வாழ்க்கைத் துணை உங்களுக்கு உதவியாக இருப்பார்கள்.
மிதுனம் (Midhunam Rasi palan): மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அதிர்ஷ்டம் தரும் வாரமாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் சக ஊழியர்கள், உயர் அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். உங்களுடைய எதிரிகளின் திட்டங்களை முறியடிப்பீர்கள். செய்ய வேண்டிய வேலைகளை உரிய நேரத்தில் செய்து முடித்து வெற்றி காண்பீர்கள். பாசிட்டிவ் எனர்ஜியுடனும், சுறுசுறுப்புடனும் காணப்படுவீர்கள்.
திடீர் பண வரவுகள் உண்டாகும். கடன் பிரச்னைகளைத் தீர்ப்பீர்கள். கூடுதல் வருமானத்தால் மகிழ்ச்சி அடைவீர்கள. நிலம், சொத்து பிரச்னைகளை பேசி தீர்த்துக் கொள்வது நல்லது. பிள்ளைகள் வழியாக மகிழ்ச்சியான தகவல்கள் வந்து சேரும். செல்வாக்குடைய நபர்களால் லாபம் பெருகும். காதல் வாழ்க்கை மற்றும் கணவன் மனைவிக்கிடையே அன்பும், ஆதரவும் பெருகும். ஆரோக்கியம் மேம்படும்.
-
Rasi Palan This Week: தனுசு ராசிக்கு எதிர்பாராத பணவரவு.. 7 நாட்களில் வரப்போகும் நல்ல மாற்றம் -
Rasi Palan This Week: குரு சுக்கிரன் அருளால் கடக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பணத்துக்கு பஞ்சமில்லை -
Rasi Palan This Week: சிக்கலில் சிக்கும் சிம்ம ராசி.. கவனமாக இருக்க வேண்டிய 3 விஷயம் -
Rasi Palan This Week: ரிஷப ராசிக்கு கால் வைக்கும் இடமெல்லாம் கண்ணி வெடி.. கவனம் அவசியம் -
Rasi Palan This Week: மிதுன ராசிக்கு பேச்சுதான் பிரச்சனையே.. இந்த விஷயங்களில் ரொம்ப கவனம் -
Mesham Rasi Palan: மேஷ ராசிக்கு இந்த வாரத்தில் வரும் அதிர்ஷ்டம்.. பணவரவு கொட்டும் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி!












Click it and Unblock the Notifications