வார ராசி பலன்: கடகம் முதல் சிம்மம் வரை.. வேலை, வீடு யோகம் பெறும் ராசிகள்?
வார ராசி பலன்: ஜனவரி 6 முதல் 12 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் புதன் பெயர்ச்சி, சந்திரனின் மாற்றம், சனி, சுக்கிரன் சேர்க்கை, செவ்வாயின் வக்ர நிலை உள்ளிட்ட கிரகங்களின் அமைப்பு காரணமாக கடகம் முதல் கன்னி ராசிகளுக்கு எப்படிப்பட்ட பலன்கள் கிடைக்கும் என்பது குறித்து பார்க்கலாம்..
புதன் வக்கிர நிவர்த்தி, சந்திரனின் இடமாற்றம், சனி சுக்கிரன் சேர்க்கை போன்ற முக்கிய கிரக மாற்றங்கள் இந்த வாரத்தில் நடைபெறவுள்ளன. இந்த கிரகங்களின் மாற்றம் ஒவ்வொரு ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்கள் அதிர்ஷ்ட யோகம் பெறுவார்கள், சில ராசிக்காரர்கள் பாதிப்பை சந்திக்கும் சூழல் ஏற்படும்.

அந்த வகையில், ஜனவரி 6 முதல் 12 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்தில் பல்வேறு கிரகங்களின் மாற்றத்தால் கடகம் முதல் கன்னி ராசி வரையிலான ராசிகளுக்கு என்ன பலன்கள் கிடைக்கப் போகிறது என்பது குறித்து விரிவாகப் பார்க்கலாம்..
கடகம் (Kadagam Rasi palan): கடக ராசிக்காரர்களே இந்த வாரத்தில் உங்கள் வேலையில் அலட்சியமாக இருப்பதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். உங்களுடைய திறன் மற்றும் நேரத்தை சரியாகப் பயன்படுத்துவது நல்ல பலன்களைத் தரும். நீண்ட நாட்களாக வேலை தேடி கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். உங்களைத் தேடி வரும் வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இந்த வாரத்தில் பெரிய செலவுகள் உண்டாவதற்கான வாய்ப்புள்ளது. வியாபாரம், தொழிலில் உங்களுடைய பெயரை நிலைநிறுத்திக் கொள்ள கடுமையாகப் போராட வேண்டியிருக்கும். மாணவர்கள் சில சவால்களைச் சந்திப்பீர்கள். வாரத்தின் இறுதியில் நல்ல செய்திகள் தேடி வரும். அலுவலகத்தில் வேலை செய்யும் பெண்களுக்கு வேலை மற்றும் குடும்பத்தில் உள்ள பொறுப்புகளை சமாளிப்பதில் சில சவால்கள் ஏற்படும். எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
சிம்மம் (Simma Rasi palan): சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நல்ல பலன்களையும், கெட்ட பலன்களையும் சேர்த்தே தரும். ஆனால், பெரிய பாதிப்புகள் எதுவும் இருக்காது. எந்தவொரு விஷயமாக இருந்தாலும் அதனை பொறுமையாக சந்திப்பது நல்லது. கஷ்டமான காலகட்டத்திலும் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், மனைவியின் ஆதரவு கிடைக்கும்.
உடலையும், மனதையும் பராமரிப்பது நல்லது. வேலை செய்யும் இடத்தில் வேலைப்பளு உண்டாகும். உங்களுடைய எதிரிகள் வேலைகளில் சில தடைகளை ஏற்படுத்த முயற்சி செய்வார்கள். தொழில் மற்றும் வியாபாரம் சார்ந்த வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். நீண்ட தூரப் பயணம் நல்ல பலன்களைத் தரும். வீடு, மனை தொடர்பான விஷயங்களில் நல்ல செய்தி வந்து சேரும். உங்களுடைய நண்பர்கள், மனதுக்குப் பிடித்தவர்களிடம் இருந்து முன்னேற்றத்துக்கான ஆலோசனைகள் கிடைக்கும். காதல் உறவு, திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி பெருகும்.
கன்னி (Kanni Rasi palan): கன்னி ராசிக்காரர்கள் இந்த வாரம் கவனமாக இருக்க வேண்டும். பேசுவதிலும், செய்யும் செயல்களிலும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. யாரிடம் பேசினாலும் இனிமையாகப் பேசுவது நல்ல பலன்களைத் தரும். தவிர கோபப்படுவது, வார்த்தையை விடுவது பெரிய பிரச்னைகள் மற்றும் உறவுகளுக்குள் விரிசலை உண்டாக்கும். செலவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.
பணிச்சுமையால் மன அழுத்தம் ஏற்படும். பூர்வீக சொத்துகளால் பிரச்னைகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. வாரத்தின் இறுதி நாட்களில் அலைச்சல் உண்டாகும். நீதிமன்ற விஷயங்களில் நல்ல பலன்கள் கிடைக்க கொஞ்சம் காத்திருக்கும் சூழல் ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. உடல், மனம் சார்ந்த பிரச்னைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு. தொழில், வியாபாரத்தில் கடின உழைப்பை போடுவதன் மூலம் முன்னேற்றம் அடைவீர்கள். கணவன், மனைவி விட்டுக் கொடுத்து செல்வது நல்லது.












Click it and Unblock the Notifications