வார ராசி பலன்: மகரம், கும்பம், மீனம் ராசிகள் பெறும் யோகம்?.. இதுல மட்டும் கவனமா இருங்க
வார ராசி பலன்: ஜனவரி 6 முதல் 12 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் புதன் பெயர்ச்சி, சந்திரனின் மாற்றம், சனி, சுக்கிரன் சேர்க்கை, செவ்வாயின் வக்ர நிலை உள்ளிட்ட கிரகங்களின் அமைப்பு காரணமாக மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு எப்படிப்பட்ட பலன்கள் கிடைக்கும் என்பது குறித்து பார்க்கலாம்..
புதன் வக்கிர நிவர்த்தி, சந்திரனின் இடமாற்றம், சனி சுக்கிரன் சேர்க்கை போன்ற முக்கிய கிரக மாற்றங்கள இந்த வாரத்தில் நடைபெறவுள்ளன. இந்த கிரகங்களின் மாற்றம் ஒவ்வொரு ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்கள் அதிர்ஷ்ட யோகம் பெறுவார்கள், சில ராசிக்காரர்கள் பாதிப்பை சந்திக்கும் சூழல் ஏற்படும்.

அந்த வகையில், ஜனவரி 6 முதல் 12 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்தில் பல்வேறு கிரகங்களின் மாற்றத்தால் மகரம், கும்பம், மீனம் ராசி வரையிலான ராசிகளுக்கு என்ன பலன்கள் கிடைக்கப் போகிறது என்பது குறித்து விரிவாகப் பார்க்கலாம்..
மகர ராசி (Magara Rasi palan): மகர ராசியைச் சேர்ந்தவர்களுக்கு நீங்கள் எதிர்பார்த்த வெற்றியும், லாபமும் கிடைக்கவில்லை என்றாலும் ஓரளவு கிடைக்கும். உங்களுடைய சாதுர்யமான நடவடிக்கையாலும், கடின உழைப்பாலும் எந்த வகையான பிரச்னைகள் வந்தாலும் அதனை திறம்பட கடப்பீர்கள். உங்களுடைய முயற்சிகளுக்கு நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் உதவியாக இருப்பார்கள்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் உணர்ச்சிவசப்பட்டோ, கோபத்திலோ எந்த ஒரு முக்கிய முடிவையும் எடுக்காமல் இருப்பது நல்லது. இந்த வாரத்தின் நடுவில் குடும்ப உறுப்பினர்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. இது உங்களுடைய மனக் கவலையை அதிகரிக்கச் செய்யும். பண வரவு குறைவாக இருப்பதால் சிரமத்தைச் சந்திப்பீர்கள். மாணவர்கள் கல்வியில் கொஞ்சம் கூடுதல் உழைப்பை போடும் சூழ்நிலை ஏற்படும். காதல் உறவில் சிந்தித்து செயல்பட வேண்டும்.
கும்ப ராசி (Kumbam Rasi palan): கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அதிர்ஷ்டம் அளிக்கும் வாரமாக இருக்கும். உங்களுடைய நெருங்கிய நண்பர்கள், சமுதாயத்தில் செல்வாக்கு மிக்க நபர்களால் நல்ல பலன்களைப் பெறுவீர்கள். வெளியூர் பயணங்கள் இனிமையானதாக அமையும். தொழில், வியாபாரத்தில் வருமானம் பெருகும். நல்ல மாற்றத்தைக் காண்பீர்கள்.
உத்தியோகத்தில் சக ஊழியர்கள், மேலதிகாரிகளின் ஆதரவைப் பெறலாம். உங்களின் உழைப்புக்கான ஆதாயத்தைப் பெறுவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நீங்கள் நினைத்த காரியங்கள் அனைத்தும் கைகூடும். காதல் உறவில் இனிமையான காலமாக இருக்கும். கணவன், மனைவிக்கிடையே அன்பு பெருகும். குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள்.
மீன ராசி (Meenam Rasi palan): மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நல்ல செய்திகளைத் தரும் வாரமாக இருக்கும். வார தொடக்கத்தில் பெரிய முன்னேற்றத்தையும், வெற்றியையும் காண்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரம் தொடர்பான பயணங்களில் இனிமையானதாகவும், சிறப்பான ஆதாயங்களைத் தருவதாகவும் இருக்கும்.
குடும்பத்தில், அலுவலகங்களில் உங்களின் செல்வாக்கு கூடும். பணியிடத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மூத்த அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். நீங்கள் நினைத்த காரியங்கள் அனைத்தும் நடக்கும். விருப்பமான விஷயங்களை செய்து மகிழ்வீர்கள். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தைப் பெறுவீர்கள். சொத்து தொடர்பான பிரச்சனைகள் தீரும். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் அனைத்தையும் செய்து முடிப்பீர்கள். மனைவியுடனும், விருப்பத்துக்குரிய நபர்களுடனும் உங்களுடைய நேரத்தை செலவிடுவீர்கள்.
-
லக்கி பாஸ்கராகப் போகும் கன்னி ராசியினர்.. இந்த வாரத்தில் வரப்போகும் குட்நியூஸ் -
Rasi Palan This Week: சிக்கலில் சிக்கும் சிம்ம ராசி.. கவனமாக இருக்க வேண்டிய 3 விஷயம் -
Rasi Palan This Week: குரு சுக்கிரன் அருளால் கடக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பணத்துக்கு பஞ்சமில்லை -
Rasi Palan This Week: மிதுன ராசிக்கு பேச்சுதான் பிரச்சனையே.. இந்த விஷயங்களில் ரொம்ப கவனம் -
Rasi Palan This Week: ரிஷப ராசிக்கு கால் வைக்கும் இடமெல்லாம் கண்ணி வெடி.. கவனம் அவசியம் -
Mesham Rasi Palan: மேஷ ராசிக்கு இந்த வாரத்தில் வரும் அதிர்ஷ்டம்.. பணவரவு கொட்டும் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications