வார ராசி பலன்: துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கு கிடைக்கும் பலன்கள்?.. யாருக்கு யோகம் கொட்டும்
வார ராசி பலன்: ஜனவரி 6 முதல் 12 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் புதன் பெயர்ச்சி, சந்திரனின் மாற்றம், சனி, சுக்கிரன் சேர்க்கை, செவ்வாயின் வக்ர நிலை உள்ளிட்ட கிரகங்களின் அமைப்பு காரணமாக துலாம், விருச்சிகம், தனுசு ராசிகளுக்கு எப்படிப்பட்ட பலன்கள் கிடைக்கும் என்பது குறித்து பார்க்கலாம்..
புதன் வக்கிர நிவர்த்தி, சந்திரனின் இடமாற்றம், சனி சுக்கிரன் சேர்க்கை போன்ற முக்கிய கிரக மாற்றங்கள இந்த வாரத்தில் நடைபெறவுள்ளன. இந்த கிரகங்களின் மாற்றம் ஒவ்வொரு ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்கள் அதிர்ஷ்ட யோகம் பெறுவார்கள், சில ராசிக்காரர்கள் பாதிப்பை சந்திக்கும் சூழல் ஏற்படும்.

அந்த வகையில், ஜனவரி 6 முதல் 12 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்தில் பல்வேறு கிரகங்களின் மாற்றத்தால் துலாம், விருச்சிகம், தனுசு ராசி வரையிலான ராசிகளுக்கு என்ன பலன்கள் கிடைக்கப் போகிறது என்பது குறித்து விரிவாகப் பார்க்கலாம்..
துலாம் (Thulam Rasi palan): துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அதிர்ஷ்டம் நிறைந்த வாரமாக இருக்கும். மகிழ்ச்சியும், அதிர்ஷ்டமும் பெருகும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த அனைத்து நல்ல விஷயங்களும் வந்து சேரும். சமூகத்தில் அந்த நல்ல அந்தஸ்த்தில் இருப்பவர்களுடன் அறிமுகம் ஏற்படும். அதன் மூலம் உங்கள் ஆசைகள் நிறைவேறும். வியாபாரம், தொழிலை பெரிதுபடுத்துவதற்கான வாய்ப்புகள் உருவாகும்.
இந்த வாரத்தில் பொருளாதாரம் சீரடையும், பண வரவு அதிகரிக்கும். வியாபாரம், தொழில் ரீதியான வெளியூர் பயணங்கள் நல்ல அனுபவங்களையும், பலனையும் தரும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வேறு வேலையை மாற்ற நினைப்பவர்களுக்கு சிறந்த வேலைகள் கிடைக்கும். விளையாட்டுப் போட்டிகளில் மாணவர்கள் வெற்றி பெறுவார்கள். நுழைவுத் தேர்வில் வெற்றி பெறும் வாய்ப்பு உண்டாகும். அரசுத் தேர்வுகளில் வெற்றி பெறும் வாய்ப்பு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். கணவன் மனைவிக்கிடையே அன்பு பெருகும்.
விருச்சிகம் (Viruchigam Rasi palan): விருச்சிக ராசிக்காரர்கள் திட்டமிட்ட காரியங்களை நிறைவேற்றுவீர்கள். அதற்கு கூடுதல் உழைப்பும், முயற்சியும் தேவைப்படும். அலுவலகத்தில் உங்கள் முன்னேற்றத்துக்கு தடையாக இருந்த எதிரிகள் விலகுவார்கள். தொழில், வியாபாரம், வேலை சார்ந்து இடமாற்றத்தை விரும்பியவர்களுக்கு நல்ல மாற்றம் உண்டாகும். வழக்கு தொடர்பான விஷயங்களை பேசி தீர்த்துக் கொள்வது நல்லது. இல்லையெனில் சொத்து போன்ற விஷயங்களில் நஷ்டத்தை சந்திக்கும் சூழல் உருவாகும்.
மாணவர்கள் கல்வி, விளையாட்டுகளில் வெற்றி பெற சற்று கடின உழைப்பை போட வேண்டிய சூழல் உருவாகும். காதலிப்பவர்கள் வீண் பயத்தை தவிர்க்க வேண்டும். விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. துணையின் உணர்வைப் புரிந்து நடப்பது நல்லது.
தனுசு (dhanusu Rasi palan): தனுசு ராசிக்காரர்கள் எந்தவொரு செயலைச் செய்தாலும் அதில் பொறுமையுடன் கையாள்வது நல்ல பலன்களைத் தரும். புதிய வீடு, மனை போன்ற சொத்துகளை வாங்குவது, முதலீடு, சேமிப்பு போன்ற விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது. அவசரப்பட்டு எடுக்கும் முடிவு நஷ்டத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு உண்டு.
வேலை செய்யும் இடங்களில் இருக்கும் சில அரசியல்களில் இருந்து விலகி இருப்பது நல்லது. யார் என்ன ரகசியங்களை கூறியிருந்தாலும் அதனை மனதோடு வைத்திருப்பது நல்லது. வேலையில் எச்சரிக்கையாகவும், கவனமாகவும் இருப்பது நல்லது. திடீர் வெளியூர் பயணம் மேற்கொள்வதற்கான வாய்ப்பு உருவாகும். ஆன்மீகம் தொடர்பான விஷயங்கள், சுபகாரியங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே நேரத்தை ஒதுக்கி பேசிக் கொள்வது, அன்பைப் பரிமாறிக் கொள்வது நல்லது.


Click it and Unblock the Notifications
