ஜனவரி மாத ராசி பலன்: கடகம், சிம்மம், கன்னி ராசிக்காரர்களே இந்த மாதம் உங்களுக்கு எப்படி இருக்கும்?
மாத ராசி பலன்: 2025 புத்தாண்டு உற்சாகத்துடன் பிறந்துள்ளது. புத்தாண்டின் முதல் மாதமான ஜனவரி மாதத்தில் கடகம், சிம்மம், கன்னி ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கப் போகிறது என்பது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.. (New year rasi palan 2025)
கடக ராசி (Kadaga rasi palan): கடக ராசிக்காரர்களே உணர்வுப்பூர்வமான மனிதர்களாக இருப்பீர்கள். உங்களை நீங்களே சுய பரிசோதனை செய்து கொள்ளும் காலமாக இருக்கும். உங்களுடைய உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். குடும்பத்தில் சுமூகமான சூழல் ஏற்படும். மகிழ்ச்சி பெருகும். உங்கள் அன்புக்குரிய, விருப்பமான மனிதர்களுடன் நேரத்தைச் செலவிடுவீர்கள். புதிய புதிய விஷயங்கள் உங்கள் வாழ்க்கையில் நடக்கும்.

எந்தவொரு காரியமாக இருந்தாலும் யோசித்து முடிவெடுப்பது நல்லது. முடிவுகளில் கவனமாக இருக்க வேண்டும். அலுவலகத்தில் பணியாற்றுபவர்களுடன் நல்ல உறவுடன் உங்களை வெற்றிப் பாதையில் கொண்டு சேர்க்கும். நிதி தொடர்பான விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது. வீண் செலவுகளைத் தவிர்க்க வேண்டும். சேமிப்பு மற்றும் முதலீடுகளில் கவனம் செலுத்த வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். உடற்பயிற்சி, ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவது நல்லது. மன அழுத்தத்தைத் தவிர்க்க தியானம், யோகாவில் ஈடுபடுவது நல்லது.
சிம்ம ராசி (Simma rasi palan): சிம்மா ராசிக்காரர்களே வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். அதே சமயம் அதில் சவால்களையும் சந்திப்பீர்கள். வாய்ப்பு மற்றும் வரும் சவால்களால் உங்களை இலட்சியங்களை நோக்கி வேகமாகப் பயணிப்பீர்கள். உங்களுடைய அனைத்து பணிகளும் அலுவலகத்தில் பாராட்டப்படும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். டீமாக வேலைகளைச் செல்வதால் பெரிய இலக்குகளை அடைவீர்கள்.
அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் இணக்கமாக இருப்பது நல்ல பலன்களைத் தரும். குடும்பத்துடன் நேரம் செலவிடுவீர்கள். மன அமைதியுடனும், பாதுகாப்பாகவும் உணர்வீர்கள். புதிய அனுபவங்கள் கிடைக்கும் மாதமாக இருக்கும். அந்த அனுபவங்கள் உங்களை வளர்ச்சிப் பாதையை நோக்கி அழைத்துச் செல்லும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. தினமும் உடற்பயிற்சி செய்வது மற்றும் ஆரோக்கியமான உணவுப் பழக்க வழக்கம் உங்களை மனம் மற்றும் உடல் சார்ந்த பிரச்னைகளில் இருந்து பாதுகாப்பாக வைத்திருக்கும். நீங்கள் எதிர்பார்த்த காரியங்களை உங்கள் கதவுகளைத் தட்டும் யோகம் உண்டாகும்.
கன்னி ராசி (Kanni rasi palan): புதிய துவக்கத்துக்கான மாதமாக இந்த மாதம் உங்களுக்கு அமையும். உங்களைச் சார்ந்தவர்கள் மற்றும் உங்களுடைய வளர்ச்சியில் கவனம் செல்லுவதற்கான வாய்ப்பு உண்டாகும். மன அழுத்தத்தைப் போக்க தியானம், யோகா செய்வது நல்லது. இது வாழ்க்கை குறித்த தெளிவான ஒரு பார்வையைத் தரும். உடன் பணியாற்றும் ஊழியர்களுடன் இணக்கமாகச் செல்வது நல்லது. அலுவலகத்தில் ஒற்றுமையால் வேண்டியதை சாதிப்பீர்கள்.
பொருளாதாரம், நிதி சார்ந்த விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது. சேமிப்பு, முதலீடுகளைச் செய்வது நல்ல பலன்களைத் தரும். எதிர்காலத்துக்கு தேவையான நிதித் திட்டத்தை உருவாக்குவீர்கள். உங்கள் அன்புக்கு உரியவர்களுடன் பொன்னான, மகிழ்ச்சியான நேரத்தை செலவிடுவதற்கான வாய்ப்பு ஏற்படும். பொது வாழ்க்கையில் உங்களுடைய பங்களிப்பு அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகத்தால் புதிய வாய்ப்புகள் உண்டாகும். அந்த வாய்ப்புகளை பயன்படுத்துவதன் மூலம் நல்ல பலன்களைப் பெறுவீர்கள்.
-
குருப்பெயர்ச்சி: கடக ராசியினருக்கு பொற்காலம் ஆரம்பம்.. வேலை, வருமானத்தில் முன்னேற்றம்! -
குருப்பெயர்ச்சி: மிதுன ராசிக்கு பேச்சில் தான் கண்டமே.. இந்த விஷயங்களை செய்திடவே செய்திடாதீங்க -
Guru Peyarchi: கும்ப ராசிக்கு காத்திருக்கும் ஆபத்து.. இந்த விஷயங்களில் மிகுந்த கவனம் அவசியம் -
Guru Peyarchi: மகர ராசிக்கு காத்திருக்கும் ராஜவாழ்க்கை.. இந்த விஷயங்களில் மட்டும் கூடுதல் கவனம் -
Guru Peyarchi: தனுசு ராசியினரே தயாராகுங்கள்! குரு தரப்போகும் அபார யோகங்கள் -
விருச்சிகத்துக்கு பொற்காலம் ஆரம்பம்.. குருவின் அருளால் வரப்போகும் ராஜயோகம் -
Guru Peyarchi: கிங்காக மாறப்போகும் துலாம் ராசி.. 10 இல் வரும் குரு அள்ளித் தரும் அதிர்ஷ்ட யோகங்கள் -
குரு 12-இல்.. சிம்ம ராசிக்கு வெளிநாட்டு யோகம், புதிய வாய்ப்புகள்.. வாழ்க்கையில் பெரிய திருப்பம்! -
Guru Peyarchi: மேஷ ராசிக்கு அதிர்ஷ்டத்தை தரும் குருப்பெயர்ச்சி.. வாழ்க்கையை மாற்றும் 3 விஷயங்கள் -
குருப்பெயர்ச்சி: குருவின் அருளால் ரிஷப ராசிக்கு பொற்காலம் ஆரம்பம்.. வேலையில் முன்னேற்றம் -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications