கன்னி ராசிக்கு கடல் கடந்து வரும் மெகா ஜாக்பாட்.. இது நம்ம லிஸ்ட்லயே இல்லயே
ஏப்ரல் மாத பலன்: 2025 ஆம் ஆண்டில் சனி, ராகு கேது பெயர்ச்சி, குருப்பெயர்ச்சி ஆகிய முக்கிய கிரகங்களின் பெயர்ச்சி நடைபெறுகிறது. சனிப்பெயர்ச்சி மார்ச் 29 ஆம் தேதி நடைபெற்றுள்ளது. மே மாதத்தில் ராகு கேது பெயர்ச்சி மற்றும் குருப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது. ஏப்ரல் மாதம் தொடங்கியுள்ள நிலையில் கன்னி
ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். கிரகங்களின் மாற்றம் 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த ராசி மாற்றம், கிரகங்களின் நிலைகளில் ஏற்படும் மாற்றமானது சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சிலருக்கு அசுப பலன்களையும் ஏற்படுத்தும்.

2025 ஆம் ஆண்டில் மார்ச் மாதம் நிறைவடைந்து ஏப்ரல் மாதம் தொடங்கியுள்ளது. இரண்டு நாள்களுக்கு முன்பு நடைபெற்ற சனிப்பெயர்ச்சியின் மூலமாக சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கப் போகிறது. மே மாதம் 12 ஆம் தேதி ராகு கேது பெயர்ச்சி, 14 ஆம் தேதி குருப்பெயர்ச்சி நடைபெறவுள்ளதால் எந்தெந்த ராசியினருக்கு அனுகூலம் கிடைக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அந்த வகையில், இந்த ஏப்ரல் மாதத்தில் கன்னி ராசியினருக்கு கிடைக்கப் போகும் பலன்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
கன்னி: கன்னி ராசிக்கு உங்கள் ராசியின் ஏழாவது இடத்தில் சனி, சூரியன், ராகு, புதன், சுக்கிரன் ஆகிய ஐந்து பெரிய கிரகங்களின் கூட்டு சேர்க்கை உள்ளது. சனிப்பெயர்ச்சியில் உங்களுக்கு கண்டக சனி தொடங்கியுள்ளது. கோச்சார ரீதியாக இதை அவ்வளவு நல்ல அமைப்பாக எடுத்துக் கொள்ள முடியாது. நன்மைகள் குறைவாக.. அதுவும் படிப்படியாக தான் நடைபெறும்.
கவனம்
வாழ்க்கை துணையுடன் அடிக்கடி கருத்து வேறுபாடு, மோதல் வந்து செல்லும். மேலும் உறவுகள் மற்றும் நண்பர்களிடையேவும் மனக்கசப்பு வருவதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே யாரையும் நம்பாமல் இருப்பது நல்லது. காதல் விவகாரத்திலும் கசப்பான அனுபவங்களை சந்திக்க நேரிடும். சந்தேக எண்ணம் அதிகரிக்கும். சிலர் காதல் உறவில் பிரிவுகளை சந்திப்பதற்கான வாய்ப்பும் இருக்கிறது.
வெளிநாடு
முதல் 15 நாட்கள் ஒரு மாதிரி இருந்தாலும், 12 ஆம் அதிபதி இரண்டாவது வாரத்துக்கு பிறகு எட்டாம் இடத்தில் உச்சமடைகிறார். அது நல்ல பலன்களை கொடுக்கும். வெளி மாநிலம் மற்றும் வெளி நாடுகளில் இருப்போருக்கு யோகம் உண்டாகும். சொந்த நாட்டில் இருப்போருக்கு வெளி மாநிலம் மற்றும் வெளி நாடு செல்வதற்கான வாய்ப்பு உள்ளது.
மகிழ்ச்சி
சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா நாடுகளுக்கு உயர் கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்காக முயற்சி செய்வோருக்கு இந்த காலத்தில் நன்மைகள் நடைபெறும். பாஸ்போர்ட், விசா முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் இருக்கும். உத்யோகம் மற்றும் குடும்பம் ஆகியவற்றில் மகிழ்ச்சி பொங்கும். தொழில் ரீதியாக வியாபாரிகளுக்கு அவ்வளவு நன்மைகளை தராது.
தொழில்
இதனால் தொழில் செய்வோருக்கு மனக்கவலை ஏற்படும். கடன் பற்றிய கவலை அதிகரிக்கும். ராகு கேது பெயர்ச்சியில் ராகு உங்களின் ராசிக்கு ஆறாவது இடத்துக்கு பெயர்ச்சி ஆகி நல்ல பலன்களை தருவார். எனவே கவலைப்பட தேவையில்லை. படிப்படியாக முன்னேற்றம் இருக்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். இருப்பினும் ராசியை சனி பகவான் பார்ப்பதால் உங்கள் செயல்பாட்டில் தளர்வு இருக்கும்.
பயணம்
கூட்டு தொழிலில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நண்பர்களுடன் இணைந்து புதிய முயற்சிகளை மேற்கொள்ளாமல் இருப்பது நல்லது. எதிலும் நிதானமாக யோசித்து முடிவு செய்ய வேண்டும். தடைகளை பார்த்து தளர்ந்துவிடக் கூடாது. உங்களின் விடா முயற்சியால் தடைகள் விலகவும் வாய்ப்புள்ளது. பயணங்களின் மூலம் நன்மைகள் இருக்கும்.












Click it and Unblock the Notifications