துலாம் ராசிக்கு ஜாக்பாட்.. தொழில், வேலை, காதல் எல்லாம் அதிர்ஷ்டம்.. தொட்டது துலங்கும்

Subscribe to Oneindia Tamil

ஏப்ரல் மாத பலன்: 2025 ஆம் ஆண்டில் சனி, ராகு கேது பெயர்ச்சி, குருப்பெயர்ச்சி ஆகிய முக்கிய கிரகங்களின் பெயர்ச்சி நடைபெறுகிறது. சனிப்பெயர்ச்சி மார்ச் 29 ஆம் தேதி நடைபெற்றுள்ளது. மே மாதத்தில் ராகு கேது பெயர்ச்சி மற்றும் குருப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது. ஏப்ரல் மாதம் தொடங்கியுள்ள நிலையில் துலாம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். கிரகங்களின் மாற்றம் 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த ராசி மாற்றம், கிரகங்களின் நிலைகளில் ஏற்படும் மாற்றமானது சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சிலருக்கு அசுப பலன்களையும் ஏற்படுத்தும்.

lets-take-a-look-at-the-benefits-that-thulam-libra-rasi-people-will-get-in-april-and-the-things-t

2025 ஆம் ஆண்டில் மார்ச் மாதம் நிறைவடைந்து ஏப்ரல் மாதம் தொடங்கியுள்ளது. இரண்டு நாள்களுக்கு முன்பு நடைபெற்ற சனிப்பெயர்ச்சியின் மூலமாக சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கப் போகிறது. மே மாதம் 12 ஆம் தேதி ராகு கேது பெயர்ச்சி, 14 ஆம் தேதி குருப்பெயர்ச்சி நடைபெறவுள்ளதால் எந்தெந்த ராசியினருக்கு அனுகூலம் கிடைக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அந்த வகையில், இந்த ஏப்ரல் மாதத்தில் துலாம் ராசியினருக்கு கிடைக்கப் போகும் பலன்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

துலாம்: துலாம் ராசிக்காரர்களுக்கு நிலை மாற்றங்கள் ஏற்படக் கூடிய நல்ல மாதமாக இருக்கும். இந்த ஆண்டு தொடங்கியது முதலே துலாம் ராசியினருக்கு அருமையான மாற்றங்கள் ஏற்படத் தொடங்கியிருக்கும். சனிப்பெயர்ச்சி நடைபெற்றுள்ள நிலையில், 6 ஆம் இடத்தில் சனி பகவான் வந்திருக்கிறார். 6 ஆம் இடத்தில் மூன்று பாவ கிரகங்கள் இருப்பது வழக்கு, அசிங்கம், கேவலம் போன்றவற்றை தவிர்க்கக்கூடிய அமைப்பாக இருக்கும். இழந்த கெளரவத்தை மீண்டும் திரும்பப் பெறுவீர்கள். ராசிநாதன் உச்சமாக இருக்கிறார்.

எதையும் சமாளிக்கக்கூடிய நல்ல அமைப்பாக இருக்கும். 3 ஆண்டுகளுக்கு அருமையான காலகட்டமாக உங்களுக்கு இருக்கும். எதிர்பார்க்காத அதிர்ஷ்டங்களால் நன்மைகள் ஏற்படக்கூடிய யோகம் உள்ளது. 8, 12 ஆம் இடங்கள் சுபத்துவமாக இருப்பதால் செலவுகள் இருக்கக்கூடிய மாதமாக இருக்கும். கடன் வாங்கக்கூடிய தேவை இல்லாமல், கடன் தள்ளுபடியாகக் கூடிய அமைப்பு, கடனை திரும்பி தரக்கூடிய அளவுக்கு வருமானம் அதிகரிக்கும்.

வீட்டிற்குத் தேவையான பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவன், மனைவி இருவர் மேலும் அக்கறை அதிகரிக்கும். பிள்ளைகள் சம்பந்தமான மன அழுத்தங்களில் இருந்து விடுபடுவீர்கள். 11 ஆம் அதிபதி 7 ஆம் இடத்தில் 15 ஆம் தேதிக்குப் பிறகு சூரியன் உச்சமாகிறார். இதனால் கணவன், மனைவிக்குள் உறவு மேம்படும். காதலன், காதலிகள் கணவன் மனைவியாக மாறக்கூடிய அமைப்பு உண்டாகும்.

காதல் திருமணங்களுக்கு குடும்பத்தில், பெரியவர்களிடம் சம்மதம் கிடைக்கும். மனைவிக்கு வேலை கிடைக்கும். துலாம் ராசியினருக்கு 2 வருமானம் கிடைக்கக்கூடிய யோகம் உண்டாகும். அதன் மூலம் குடும்பத்தில் சந்தோஷம் உண்டாகும். கூட்டுத் தொழிலில் லாபம் உண்டாகும். அண்ணன், தம்பி உறவுகள், அப்பாவுடன் உறவு மேம்படும். நம்பிக்கை அதிகரிக்கும்.

தந்தை உங்களை நம்பி தொழில், வேலை, சேமிப்பை உங்களுக்கு கொடுக்கக்கூடிய சுப மாதமாக இருக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் நல்ல மாற்றம் மற்றும் வளர்ச்சி ஏற்படும். மொத்தத்தில் இந்த ஏப்ரல் மாதம் அருமையான பலன்களைத் தரக்கூடிய மாதமாக இருக்கும்.

Take a Poll

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+