சூரியப் பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள்.. பணம், லாபம் கொட்டப் போகுது
சூரியப் பெயர்ச்சி: பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்படவுள்ளது. தை முதல் நாளில் சூரிய பகவான் மகர ராசிக்கு இடப்பெயர்ச்சி ஆகிறார். சூரியப் பெயர்ச்சியானது சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை உண்டாக்கப் போகிறது. எந்தெந்த ராசிக்காரர்கள் நற்பலன்களை அனுபவிக்கப் போகின்றனர் என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்காலம்..
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது இடத்தை மாற்றுகின்றன. ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் கிரக நிலைகளில் ஏற்படுகின்ற மாற்றமானது அனைத்து ராசிகளிலும் அதன் தாக்கத்தை உண்டாக்கும். கிரகங்களின் அதிபதியாகத் திகழக் கூடிய சூரியனும் தை மாதத்தில் தனது இடத்தை மாற்றப் போகிறார்.

கிரகங்களின் மாற்றங்களில் சூரியப் பெயர்ச்சியானது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்து மதத்திலும், சாஸ்திரங்களிலும் சூரியப் பெயர்ச்சியான முக்கியமான மாற்றமாகும். அந்த வகையில், 2025 ஆம் ஆண்டு தை ஆரம்பிக்கும் போது சூரிய பகவான் மகர ராசிக்கு இடப்பெயர்ச்சி ஆகிறார்.
ஜனவரி 14 ஆம் தேதி சூரியப் பெயர்ச்சி நிகழப் போகிறது. இந்த இடப்பெயர்ச்சியானது சில ராசிக்காரர்களுக்கு தாக்கத்தை ஏற்படுத்தினாலும், சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித் தரப் போகிறது. அந்த வகையில், பணம், லாபம், செல்வத்துடன் வாழப்போகும் அதிர்ஷ்ட ராசிகள் எவை என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
ரிஷபம்: சூரியப் பெயர்ச்சியுடன் இந்த தை மாதம் ஆரம்பிக்கவுள்ளது. இந்தப் பெயர்ச்சியானது ரிஷப ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பல்வேறு முன்னேற்றங்ளைத் தரப் போகிறது. சூரியனின் ஆதிக்கம் ரிஷப ராசிக்கும் அதிகம் இருப்பதால் மாணவர்களுக்கு மிகவும் சாதகமான காலமாக இருக்கும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புள்ளது.
தொழில், உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான காலமாக இருக்கும். பதவி உயர்வுகளைப் பெறுவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். நிதி ஆதாயத்தை கொடுக்கக் கூடிய பல வழிகள் உருவாகும். பண வரவு அதிகரிக்கும். நிதி சார்ந்த விஷயங்களை எளிதாக கையாளுவீர்கள். குடும்பத்தில் மங்களகரமான சுப நிகழ்ச்சிகள் ஏற்படுவதற்கான சூழல் உருவாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும்.
மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு பிறக்கும் தை மாதம் பல்வேறு வெளிச்சங்களை உண்டாக்கும் மாதமாக இருக்கப் போகிறது. தடைகளைத் தகர்த்தெரிவீர்கள். மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு தை மாதத்தில் சூரியனைப் போல் ஜொலிக்கும் பிரகாசமான வாழ்க்கை அமையப்போகின்றது. தொழில் ரீதியில் எதிர்பாராத அளவுக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும். இதன் மூலம் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புகளும் காணப்படுகின்றது. சமூகத்தில் உங்களின் மதிப்பும் மரியாதையும் தானாகவே உயரும். நிதி விஷயத்தில் செழிப்பான நிலை உருவாகும்.
கன்னி: மகர ராசிக்கும் இடம்பெயரும் சூரியனால் கன்னி ராசியினர் யோக பலன்களை அனுபவிக்கப் போகின்றனர். புதிதாக திருமணமானவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். குடும்ப உறவுகளிடையே நிலவி வந்த பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். சுமூகமான காலமாக இருக்கும். வியாபாரம், வேலை, தொழில் ரீதியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றியைக் காண்பீர்கள். பண வரவு அதிகரிக்கும். சமுதாயத்தில் உங்களுடை மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். பணத்திற்குப் பஞ்சம் ஏற்படாது. செல்வ செழிப்பாக இருக்கும் காலமாக இருக்கும்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications