Chandra Grahan 2025: தனுசுக்கு அடிச்சான்பாரு அப்பாயின்மென்ட் ஆர்டரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது
Lunar Eclipse 2025: சந்திர கிரகணம் செப்டம்பர் 7 ஆம் தேதியான இன்று இரவு நடைபெறுகிறது.. இந்த சந்திரகிரகணத்தால் தனுசு ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
2025 ஆம் ஆண்டில் செப்டம்பர் 7 ஆம் தேதி சந்திர கிரகணம் நடைபெறவுள்ளது. இரவு 9.57 முதல் நள்ளிரவு 1.56 வரையிலான காலகட்டத்தில் இந்த சந்திரகிரகணம் நடைபெறவுள்ளது. இந்த காலகட்டத்தில் சந்திரகிரகணம் ஆரம்பிக்கும் மூன்று மணி நேரத்திற்கு முன்பே சாப்பிட்டு விடுவது நல்லது. அதற்குப் பின்னர் சாப்பிடக் கூடாது. அடுத்த நாளை குளித்துக் கொண்டு வீட்டை சுத்தப்படுத்திவிட்டு சமைத்து சாப்பிடுவது நல்லது.

கர்ப்பிணிப் பெண்கள், முதியவர்கள் வீட்டில் ஓய்வெடுப்பது நல்லது. ஜெபதப அனுஷ்டானங்கள் செய்யக்கூடியவர்கள் 9.56 மணிக்கும், 1.58 மணிக்கும் குளித்துவிட்டு ஜெபம் செய்வது நல்லது. இந்த கிரகண காலத்தில் ஒருமுறை மந்திரத்தை ஜபித்தாலும் அது 10 முறைக்கு சொன்னதற்கு சமமாகும். அந்த அளவுக்கு புண்ணியம் கிடைக்கும்.
5 ராசியினர் கவனம்
முருகன், சிவனை வழிபாடு செய்வது, காயத்திரி மந்திரம் ஜெபிப்பது நன்மையைத் தரும். சந்திரன், ராகு சேர்ந்திருப்பதால் சந்திர மெளலீஸ்வரரை மனதார வழிபடுவது உங்களை பாதிப்புகளில் இருந்து காக்கும். இந்த சந்திரகிரகண காலத்தில் 5 ராசியினருக்கு அதாவது கும்பம், துலாம், மிதுனம், மகரம், மீனம் பிரச்சனைக்குரிய காலகட்டமாக இருக்கும். இதனால், மன சஞ்சலம் ஏற்படும். உங்களைச் சுற்றி இருப்பவர்கள் அழுத்துவது போன்று இருக்கும். 40 நாட்களுக்கு இதுபோன்ற நிலைமையே தொடரும்.
யோகமான ராசி
இந்த சந்திரகிரகண காலகட்டத்தில் தனுசு, ரிஷபம், கன்னி ஆகிய மூன்று ராசியினருக்கு அற்புதமான நேரமாக இருக்கும். நீங்கள் நினைப்பது அனைத்துமே நடக்கக்கூடிய காலகட்டமாக இருக்கும். கடனுக்கு முயற்சி செய்பவர்களுக்கு கண்டிப்பாக கடன் கிடைக்கும். நீண்ட நாட்களாக முடிக்க முடியாத விஷயங்களை எல்லாம் நடத்தி முடிப்பீர்கள். வேலை கிடைப்பதற்கான யோகம் உண்டாகும்.
இந்த சந்திரகிரகணத்தால் தனுசு ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
தனுசு
தனுசு ராசி, லக்கினக்காரர்களுக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கம். மூன்றாம் இடம் என்பது உங்களுடைய வலிமையைக் காட்டக்கூடியது. எந்த அளவுக்கு நீங்கள் பலமானவர்கள், எந்த அளவுக்கு தைரியமாக ஒரு விஷயத்தை எதிர்கொள்வீர்கள் என்பதற்கான விஷயங்கள் ராகு 3 ஆம் இடத்தில் இருக்கும்போது மட்டும்தான் நடக்கும்.
தொழில் தொடங்கும் யோகம்
சந்திரன், ராகு தொடர்பு இருப்பதால் நிறைய பேர் புதிதாக தொழில் தொடங்கும் வாய்ப்புள்ளது. ஆண் குழந்தைகள் பிறப்பதற்கான காலகட்டமாக இந்த 40 நாட்கள் இருக்கும். குழந்தைப் பேறு உண்டாகும் வாய்ப்புள்ளது. அடுத்த 40 நாட்கள் அற்புதமான காலகட்டமாக இருக்கும். வீட்டை விற்க வேண்டும் என்று காத்துக் கொண்டிருப்பவர்கள் வீட்டை விற்கும் யோகம் உண்டாகும்.
துபாய் பறக்கப் போறீங்க
துபாய், அரபு நாடுகளுக்கு செல்ல வேண்டும் என்று நினைத்தவர்கள் செல்லும் யோகம் உண்டு. நிறைய பணம் சம்பாதிக்கும் சூழல் உண்டாகும். ஏஐ துறை, டேட்டா பேஸிஸ், டேட்ட மைனிங், சாஃப்ட்வேர் துறை, போட்டோகிராபர் சினிமோட்டேகிராஃபர் ஆவது, மீடியாவில் இருப்பவர்களுக்கு பெரிய வெளிச்சம் உண்டாகும் அற்புதமான காலகட்டமாக இருக்கும்.
வாகன யோகம்
மற்றவர்களின் தவறுகள் இனி உங்களுக்குத் தெரிய ஆரம்பிக்கும். என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்வீர்கள். புதிதாக வண்டி வாங்கும் யோகம் உண்டு. வீட்டில் ஆரோ சிஸ்டம் மாற்றுவீர்கள். தம்பியுடன் இருக்கும் பிரச்சனைகள் நீங்கும். வெளியூரில் இருக்கும் அக்கா, தங்கையுடன் இருந்த பிரச்சனைகள் நீங்கி ஒன்று சேருவீர்கள். நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும் காலகட்டமாக இருக்கும்.
உதவி செய்தல்
குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். மற்றவர்களுக்கு உதவி செய்வது நன்மை பயக்கும். குரு பார்வையில் அமர்ந்திருப்பதால் உங்களுக்கு எந்தவிதமான பாதிப்புகளும் ஏற்படாது. எடுத்த காரியங்களில் எல்லாம் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் பெறுவீர்கள்.
-
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்?












Click it and Unblock the Notifications