Chandra Grahan: 2026 இல் சந்திர கிரகணம் எப்போது?.. பரிகார நட்சத்திரத்தினர் யார்?.. செய்யக் கூடாதவை
சந்திர கிரகணம் 2026: 2026 ஆம் ஆண்டில் முதல் சூரிய கிரகணம் நிறைவடைந்துள்ளது. ஆனால், இந்த கிரகணம் இந்தியாவில் தெரியவில்லை. இந்நிலையில், சந்திர கிரகணம் நடைபெறவுள்ளது. இந்த சந்திர கிரகணத்தில் ஏற்படப்போகும் மாற்றம், பரிகாரம் செய்ய வேண்டிய நட்சத்திரத்திரன், வீட்டில் என்னவெல்லாம் செய்யக் கூடாது என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம் [Chandra Grahan].
2026 மார்ச் மாதம் 3 ஆம் தேதி சந்திர கிரகணம் நடைபெறவுள்ளது. ஜோதிட சாஸ்திரத்தின்படி சூரியன், சந்திரன் இரண்டையும் ராஜ கிரகங்கள் என்றும், ஒளிக் கிரகங்கள் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஒளிக் கிரகங்களுக்கு ராகு, கேதுவால் ஏற்படக்கூடிய கிரகஸ்தம் கிரகணம் ஆகும். கேது பகவானால் சந்திரனுக்கு ஏற்பட்கூடிய கிரகணமாகும்.

மார்ச் மாதம் 3 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று பிற்பகல் 3.20 மணிக்கு கிரகணம் ஆரம்பித்து இரவு 7 மணி 53 நிமிடம் வரை கிரகணம் நடைபெறவுள்ளது. இந்த காலகட்டத்தில் ஒவ்வொரு ராசிக்கு பல மாற்றத்தை இந்த கிரகணம் ஏற்படுத்திக் கொடுக்கும். பூரம் நட்சத்திரத்தில் சந்திர கிரகணம் நடைபெறவுள்ளது. சிம்ம ராசி, கடக லக்னத்தில் கிரகணம் நடைபெறுகிறது.
பூரம் நட்சத்திரத்திற்கு இணையான மற்ற நட்சத்திரங்கள் இருக்கின்றன. பரணி, பூராடம் நட்சத்திரத்தினருக்கும் கிரகணம் பிடிக்கிறது. அதேபோல, சிம்ம ராசியில் இருக்கும் இன்னும் 2 நட்சத்திரம் மகம், உத்திரம். இவர்களுக்கும் கிரகணம் பிடிக்கிறது. பரணி, பூரம், பூராடம், மகம், உத்திரம் ஆகி 5 நட்சத்திரத்தினருக்கு கிரகணம் பிடிப்பதால் கிரகண சாந்தி செய்து கொள்வது நன்மை பயக்கும்.
கிரகண சாந்தி செய்யும் நேரம்
இரவு 7.53 மணி வரை சந்திர கிரகணம் இருப்பதால் 8 மணிக்கு குளித்துவிட்டு கிரகண சாந்தி செய்து கொள்வது பெரிய நன்மையைத் தரும். கிரகணத்தால் வரும் தாக்கத்தை அது கட்டுப்படுத்தும். இந்த கிரகண நேரத்தில் கர்ப்பிணிப் பெண்கள் கவனமாக இருப்பது நல்லது. இந்த நேரத்தில் வெளியில் வருவதைத் தவிர்ப்பது நல்லது. வீட்டில் ஜன்னல்களை அடைத்து வைத்துக் கொள்வது நன்மை பயக்கும்.
உணவு சாப்பிடுவதில் மிக கவனமாக இருக்க வேண்டும். கிரகணம் பிடிப்பதற்கு 6 மணி நேரத்திற்கு முன்பே சாப்பிட்டுக் கொள்வது நன்மை. வயிறு சுத்தமாக இருக்க வேண்டும். இல்லையெனில் இந்த கிரகண நேரத்தில் வயிற்றில் இருக்கும் உணவுப் பொருள்கள் விஷத் தன்மையோடு மாறக்கூடும் என்று சொல்லப்படுகிறது. அதனால், உணவுப் பொருள்கள், தண்ணீரில் தர்ப்பைப் புல்லை போட்டு வைப்பது நன்மை பயக்கும். இல்லையெனில் அருகம்புல், துளசியைப் போட்டு வைப்பது நன்மை பயக்கும்.
சந்திரகிரகண காலகத்தில் இஷ்ட தெய்வம், குலதெய்வ மந்திரத்தை சொல்லிக் கொண்டே இருப்பது நன்மை பயக்கும். உங்கள் பெயருக்குரிய கடவுளின் மந்திரங்களை சொல்வதும் நன்மை பயக்கும்.
திதி கொடுக்கலாமா
சந்திரக கிரகணம் நடைபெறும் மார்ச் 3 ஆம் தேதியன்று பெளர்ணமி. அதனால், முன்னோர்களுக்குத் திதி கொடுப்பவர்கள் மார்ச் 4 ஆம் தேதி திதி கொடுக்கலாம்.
சந்திரகிரகணத்தால் நிகழும் மாற்றம்
சந்திரகிரணம் நடைபெறுவதால் வடக்குப் பகுதிகளில் அதிகளவில் மழை பெய்யும். காடுகளில் மழை பெய்யும். கிரகணம் ஏற்படும் மாற்றத்தால் பிற்காலத்தில் நிலஅதிர்வு ஏற்படலாம். கிரகணம் ஏற்படும் காலகட்டத்தில் மீன ராசியில் சுக்கிரன், சனி ஆகிய கிரகங்கள் இருக்கின்றன. 10 நாட்களுக்குப் பிறகு சூரியனும் வந்து சேர்ந்து கொள்கிறார்.
செவ்வாய் பகவானும் சேர்ந்த பின்பு அணு உலைகளால் நாட்டில் பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. அரசியல் துறையினர், கலைத் துறையினருக்குப் பிரச்சனை ஏற்படும் என்பதால் தங்கள் பாதுகாப்பை அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும்.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications