Chandra Grahan 2025: மீன ராசிக்கு தலைக்கு மேல் சுத்தும் கத்தி.. இதை மட்டும் பண்ணுங்க போதும்
Lunar Eclipse 2025: சந்திர கிரகணம் செப்டம்பர் 7 ஆம் தேதியான இன்று இரவு நடைபெறுகிறது. இந்த சந்திரகிரகணத்தால் மீனம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
2025 ஆம் ஆண்டில் செப்டம்பர் 7 ஆம் தேதி சந்திர கிரகணம் நடைபெறவுள்ளது. இரவு 9.57 முதல் நள்ளிரவு 1.56 வரையிலான காலகட்டத்தில் இந்த சந்திரகிரகணம் நடைபெறவுள்ளது. இந்த காலகட்டத்தில் சந்திரகிரகணம் ஆரம்பிக்கும் மூன்று மணி நேரத்திற்கு முன்பே சாப்பிட்டு விடுவது நல்லது. அதற்குப் பின்னர் சாப்பிடக் கூடாது. அடுத்த நாளை குளித்துக் கொண்டு வீட்டை சுத்தப்படுத்திவிட்டு சமைத்து சாப்பிடுவது நல்லது.

கர்ப்பிணிப் பெண்கள், முதியவர்கள் வீட்டில் ஓய்வெடுப்பது நல்லது. ஜெபதப அனுஷ்டானங்கள் செய்யக்கூடியவர்கள் கன்னி9.56 மணிக்கும், 1.58 மணிக்கும் குளித்துவிட்டு ஜெபம் செய்வது நல்லது. இந்த கிரகண காலத்தில் ஒருமுறை மந்திரத்தை ஜபித்தாலும் அது 10 முறைக்கு சொன்னதற்கு சமமாகும். அந்த அளவுக்கு புண்ணியம் கிடைக்கும்.
5 ராசியினர் கவனம்
முருகன், சிவனை வழிபாடு செய்வது, காயத்திரி மந்திரம் ஜெபிப்பது நன்மையைத் தரும். சந்திரன், ராகு சேர்ந்திருப்பதால் சந்திர மெளலீஸ்வரரை மனதார வழிபடுவது உங்களை பாதிப்புகளில் இருந்து காக்கும். இந்த சந்திரகிரகண காலத்தில் 5 ராசியினருக்கு அதாவது கும்பம், துலாம், மிதுனம், மகரம், மீனம் பிரச்சனைக்குரிய காலகட்டமாக இருக்கும். இதனால், மன சஞ்சலம் ஏற்படும். உங்களைச் சுற்றி இருப்பவர்கள் அழுத்துவது போன்று இருக்கும். 40 நாட்களுக்கு இதுபோன்ற நிலைமையே தொடரும்.
யோகமான ராசி
இந்த சந்திரகிரகண காலகட்டத்தில் தனுசு, ரிஷபம், கன்னி ஆகிய மூன்று ராசியினருக்கு அற்புதமான நேரமாக இருக்கும். நீங்கள் நினைப்பது அனைத்துமே நடக்கக்கூடிய காலகட்டமாக இருக்கும். கடனுக்கு முயற்சி செய்பவர்களுக்கு கண்டிப்பாக கடன் கிடைக்கும். நீண்ட நாட்களாக முடிக்க முடியாத விஷயங்களை எல்லாம் நடத்தி முடிப்பீர்கள். வேலை கிடைப்பதற்கான யோகம் உண்டாகும்.
இந்த சந்திரகிரகணத்தால் மீனம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
மீனம்
மீனம் ராசி, லக்கினக்காரர்களுக்கு 12 ஆம் இடம் என்பது விரைய ஸ்தானம், மருத்துமனையில் அனுமதிக்கப்படும் ஸ்தானம். வெளியூர் போகக்கூடியது, வேலையில் இடமாற்றம் பெறுவது போன்ற அனைத்துமே 12 ஆம் இடம் தான். ரகசியமாக இருக்கும் விஷயங்கள் எல்லாம் வெளியில் வரும். பைல்ஸ், அமரும் இடத்தில் கட்டி, மறைமுக இடங்களில் பிரச்சனைகள், சாக்கடை, கழிவறை பிரச்சனை போன்றவை உண்டாகும்.
சிகிச்சை
சிலருக்கு அறுவை சிகிச்சை, பாட்டி, அத்தை, போன்றோர் மருத்துவமனையில் அனுமதிக்கும் சூழல் உண்டாகும். சிலருக்கு இடமாற்றத்தால் பிரச்சனைகள் வரும் வாய்ப்பு உள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது, கட்டிகளுக்கு சிகிச்சை பெறுவது, கர்ப்ப்பை பிரச்சனைகள் போன்றவை உண்டாகும்.
செலவுகள்
12 ஆம் இடம் விரைய ஸ்தானத்தில் சந்திரன் அமர்ந்திருக்கும்போது மீனத்தில் பிறந்து அரபு நாடு, மலேசியாவில் வசிப்பவர்களுக்கு நிறைய விரையங்கள் செய்வதற்கான வாய்ப்புள்ளது. சிலருக்கு நிறைய செலவுகள் ஏற்படும். புதிய முதலீடுகளைச் செய்வீர்கள். இதில் எதைச் செய்ய வேண்டும் என்பதை நிதானமாக சிந்தித்து செயல்படுவது நன்மை பயக்கும்.
விரைய ஸ்தானம்
எந்த விஷயத்தையும் வெளியில் சொல்லாமல் இருப்பது நல்லது. மன சங்கடங்கள் கொடுக்கும் விஷயங்கள் நடக்கும். விரைய ஸ்தானத்தில் இருக்கும்போது தான் நாம் இடமாறியதே தவறு என்பது புரியும். மன ரீதியாக ரொம்ப சிரமத்தை சந்திப்பீர்கள். இந்த மாதிரி சமயங்களில் 9 முறை மூச்சை இழுத்து விடுவது நல்து. மூச்சை உள் இழுக்கும்போது உங்கள் கஷ்டங்களையும், வெளியில் மூச்சை விடும்போது கஷ்டங்கள் பஷ்பமாவது போன்று நினைத்துக் கொள்வது நல்லது.
வழிபாடு
இந்த தியானத்தை செய்ய செய்ய 40 நாட்களுக்குப் பிறகு நடக்கப்போகும் பாதிப்புகள் எதுவும் நடக்காமல் போகும். சிவன் கோயிலுக்குச் சென்று விழுந்து வணங்கி, அவரை சரணடைவது உங்களுக்கு ஏற்றத்தை கொடுக்கும்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications