ராகு கேது பெயர்ச்சியோடு நிகழும் சந்திர கிரகணம்.. துலாமில் நான்கு கிரக கூட்டணி.. யாருக்கு சாதகம்?
சென்னை: மேஷ ராசியில் அக்டோபர் 28ஆம் தேதி இரவு சந்திர கிரகணம் நிகழ உள்ளது. சந்திரன் குரு ராகு கூட்டணி மேஷத்தில் சேர்ந்துள்ளது. துலாம் ராசியில் செவ்வாய், கேது, புதன், சூரியன் கிரகங்கள் கூட்டணி சேர்ந்துள்ளன. இந்த கிரகங்கள் சேர்க்கை, பார்வையால் குரு மங்கல யோகம், குரு சந்திர யோகம் உருவாகும் இந்த நாளில் கிரகண யோகமும் இணைகிறது. ராகு கேது பெயர்ச்சியோடு நிகழும் சந்திர கிரகணம் யாருக்கு சாதகம் என்று பார்க்கலாம்.
மேஷம்: உங்கள் ராசி அதிபதி செவ்வாய் ஏழாம் வீட்டில் அமர்ந்து உங்கள் ராசியையும், குரு, ராகுவையம் பார்க்கிறார். களத்திர ஸ்தானமான ஏழாம் வீட்டில் நான்கு கிரகங்கள் இணைந்துள்ளன. ராசியில் மூன்று கிரகங்கள் சேர்ந்துள்ளன. குரு மங்கல யோகமும் குரு சந்திர யோகமும் தேடி வருகிறது. வேலையில் பளு கூடும். அலுவலகத்தில் பலரின் செயல்கள் எரிச்சலை தரும். அதே நேரத்தில் உங்கள் ராசிக்கு நான்கு கிரகங்களின் பார்வையும் கிடைகிறது. முகப்பொலிவு கூடும் அறிவும் ஆற்றலும் அதிகரிக்கும். உங்களுடைய ராசியில் கிரகணம் நிகழ உள்ளதால் அந்த நாளில் உணவு விசயத்தில் கவனம் தேவை. இந்த நாளில் நீங்கள் உச்சரிக்கும் மந்திரம் உங்களுக்கு பல மடங்கு பலனை அளிக்கும். நினைத்த காரியம் நிறைவேற இந்த நாளில் குல தெய்வத்தை வணங்குங்கள் பாதிப்புகள் குறையும்.

ரிஷபம்: நான்கு கிரகங்கள் உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் அமர்வது நற்பலன்களை தரும். தனவரவு திருப்திகரமாக இருக்கும். வம்பு வழக்குகள் முடிவுக்கு வரும். ஆறில் செவ்வாய் சூரியன் இணைந்து அமர்வதால் எதிரிகள் உங்களை விட்டு விலகுவார்கள். உங்களுக்கு மேன்மையும் யோகமும் கிடைக்கும். ஆறாம் வீட்டில் அமர்வது நற்பலன்களை தரும். பணப்புழக்கம் தாராளமாக இருக்கும். தனவரவு திருப்திகரமாக இருக்கும். உங்களுக்கு மேன்மையும் யோகமும் கிடைக்கும். பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றம் ஏற்படும். சந்திரனின் நட்சத்திரமான ரோகிணி உங்கள் ராசியில் இருப்பதால் சந்திர கிரகண நாளில் சந்திரன் காயத்ரி மந்திரம் கூறி பிரார்த்தனை செய்யலாம் நன்மைகள் அதிகரிக்கும்.
மிதுனம்: உங்கள் ராசிக்கு 5வது வீட்டில் செவ்வாய், சூரியன், புதன் கேது உடன் இணைந்து பயணம் செய்வதால் கர்ப்பிணிப் பெண்கள் கவனமாகச் செயல்படுவது நல்லது. பூர்வீக சொத்து விற்பது, வாங்குவதில் வில்லங்கம் ஏதாவது இருக்கிறதா என்று சரிபார்த்துக் கொள்ளுங்கள். சந்திர கிரகண நாளில் காலையிலேயே குல தெய்வ கோவிலுக்கு சென்று வருவது நன்மையை ஏற்படுத்தும். குழந்தைகளில் உடல்நலனில் அக்கறை தேவை. வயிறு தொடர்பான பிரச்சினைகள் வர வாய்ப்பு உள்ளது. காரமான உணவுகளை தவிர்த்து விடுங்கள். வெளி உணவுகளை சாப்பிட வேண்டாம். பிரச்சினைகள் தீர கணபதியை வணங்கவும். கிரகண தோஷம் நீங்குவதற்கு கந்த சஷ்டி கவசம் படிக்கவும்.
கடகம்: உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் நான்கு கிரகங்கள் இணைந்துள்ளதால் அம்மாவின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். தாயாருக்கு மருத்துவச் செலவுகள், சொத்து தகராறுகள் வந்து செல்லும். கிரகண தோஷம் உங்களுக்கு இல்லை என்றாலும் லாப ஸ்தானத்தில் சந்திர கிரகணம் ஏற்படுகிறது. பண வரவு அதிகரிக்கும். தொழில் ஸ்தானத்தில் கிரகணம் நிகழ்வதால் வேலையில் கவனமும் நிதானமும் தேவைப்படும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். கிரகண நாளில் மன குழப்பம் நீங்க துர்க்கா அஷ்டோத்திரம் படிப்பது மன தைரியத்தை அதிகரிக்கும்.
சிம்மம்: உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3ஆம் வீட்டில் நான்கு கிரகங்கள் இணைகின்றன. பாக்ய ஸ்தானத்தில் சந்திர கிரகணம் நிகழ்கிறது. மூன்றாம் வீட்டில் நான்கு கிரகங்கள் கூட்டணியால் செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். எங்கிருந்தாவது பணம் கொட்டும். வருமானம் அதிகரித்து பாக்கெட்டில் பணம் நிறைய மகிழ்ச்சியும் அதிகரிக்கும். சந்திர கிரகண நாளில் தேவையற்ற பேச்சுக்களை குறையுங்கள். அப்பாவின்
உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். குல தெய்வ வழிபாடு மன நிம்மதியை அதிகரிக்கும்.
கன்னி: உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் நான்கு கிரகங்கள் கூட்டணி சேர்கின்றன. தனம் குடும்பம் வாக்கு ஸ்தானத்தில் உஷ்ண கிரகணங்கள் இணைவதால் கோபமான பேச்சுக்களை தவிர்க்கவும். பேசும் பேச்சுக்களில் கவனம் தேவை. பங்குச்சந்தை முதலீடுகளில் தேவையில்லாமல் ரிஸ்க் எடுக்காதீங்க. தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். குடும்ப உறுப்பினர்களிடமும், அலுவலகத்திலும் கோபமான பேச்சுக்களை தவிர்த்து விடுங்கள். உறவுகளிடம் சின்னச் சின்ன சண்டைகள், சச்சரவுகள் ஏற்படும். எட்டாம் வீட்டில் மூன்று கிரகங்கள் இணைந்துள்ள நாளில் சந்திர கிரகணம் நிகழ்கிறது. அஷ்டமத்தில் கிரகணம் நிகழும் நாளில் சந்திராஷ்டமும் உள்ளது. எனவே மிக முக்கியமான முடிவுகளை அன்றைய தினம் எடுக்க வேண்டாம். பணம், நகை போன்ற விலை உயர்ந்த பொருட்களை பத்திரமாக வையுங்கள். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்கவும். யாரிடமும் கொடுத்து ஏமாந்து போக வேண்டாம். புதிய முதலீடுகளை தவிர்க்கவும். சந்திர கிரகண நாளில் கந்த சஷ்டி கவசம் படியுங்கள். கவலைகள் நீங்கும்.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications