ராகு கேது பெயர்ச்சியோடு நிகழும் சந்திர கிரகணம்.. நான்கு கிரக கூட்டணியால் இந்த 4 ராசிக்காரர்கள் கவனம்
சென்னை: மேஷ ராசியில் அக்டோபர் 28ஆம் தேதி இரவு சந்திர கிரகணம் நிகழ உள்ளது. சந்திர கிரகண நாளில் துலாம் ராசியில் நான்கு கிரகங்கள் கூடியுள்ளன. ராகு குரு சந்திரன் சேர்க்கையை, சூரியன், புதன், செவ்வாய்,கேது கிரகங்கள் பார்வையிடுகின்றன. இந்த கிரகங்கள் சேர்க்கை பார்வையால் யாரெல்லாம் கவனமாக இருக்க வேண்டும் என்று பார்க்கலாம்.
துலாம்: காதல் ராசியான உங்கள் ராசியில் செவ்வாய் குடியேறியுள்ளார். நான்கு கிரகங்கள் உங்கள் ராசியில் இணைவதால் மன குழப்பம் உண்டாகும். உங்களுக்கு ஏதோ பெரிய நோய் இருப்பதைப் போல நீங்கள் உணருவீர்கள். ராசிக்கு நேர் எதிரே மூன்று கிரகங்கள் இணைந்துள்ளன சந்திர கிரகணம் ஏழாம் வீட்டில் நிகழப்போவதால் கோபமான பேச்சுக்களை தவிர்க்கவும். கணவன் மனைவி சின்னச் சின்ன பிரச்சினைகள் வரலாம் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. உடல் நலத்தில் சிக்கல்கள் வரும் நோய்கள் தலைதூக்கும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். கர்ப்பிணிப் பெண்கள் கவனமாக இருக்கவும். கிரகண நாளில் வெளியிடங்களுக்கு செல்வதை தவிர்ப்பது நல்லது. முருகப்பெருமானை வணங்க கந்த சஷ்டி கவனம் படிக்க பாதிப்புகள் விலகி நன்மைகள் அதிகம் நடைபெறும்.

விருச்சிகம்: நான்கு கிரகங்கள் 12ஆம் வீட்டில் இணைந்துள்ளன. 12வது வீடு விரைய ஸ்தானம். செலவுகள் சும்மா பிச்சிக்கிட்டு போகும். எவ்வளவு பணம் வந்தாலும் பாக்கெட் ஓட்டையாகும் பர்ஸ் காலியாகும் . கூடவே வருமானம் அதிகரிக்கும் பணத்தை பத்திரப்படுத்துங்கள். எதையும் சட்டப்பூர்மாக செய்யுங்கள். ஆறாம் வீட்டில் கிரகணம் நிகழப்போவதால் மருத்துவ செலவுகள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். காரமான உணவுகளை தவிர்ப்பது நல்லது. பணி செய்யும் இடத்தில் உயர் அதிகாரிகள் சொல்வதை கேட்டு செய்யுங்கள் வீணாக செலவுகள் ஏற்படும் கவனமாக இருக்கவும். சிவ ஆலயங்களில் துவரம் பருப்பு தானம் செய்வது நல்லது. தினசரியும் கந்த சஷ்டி கவசம் படிக்க நன்மைகள் உண்டாகும்.
தனுசு: லாப ஸ்தானத்தில் நான்கு கிரகங்கள் கூட்டணி சேர்ந்துள்ளதால் பணவருமானம் அதிகரிக்கும். இறக்குமதி ஏற்றுமதி தொழில் செய்பவர்களுக்கு வருமானம் அதிகரிக்கும். பேசும் பேச்சில் நிதானம் தேவை. பேச்சில் கோபம் வேண்டாம். பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ஆம் வீட்டில் சந்திர கிரகணம் நிகழப்போவதால் கவனமும் நிதானமும் தேவை. எலக்ட்ரிக், எலக்ட்ரானிக் துறைகளில் பணி செய்பவர்களுக்கு நன்மைகள் அதிகம் நடைபெறும். கிரகண நாளில் வெள்ளை நிற ஆடை அணிந்து முருகப்பெருமானை வணங்க பாதிப்புகள் குறைந்து நன்மைகள் அதிகம் நடைபெறும்.
மகரம்: தொழில் ஸ்தானமான பத்தாவது வீட்டில் நான்கு கிரகங்கள் கூட்டணி சேர்வதால் திடீர் யோகம் உண்டாகும். உங்கள் செயல்களே உங்களுக்கு நன்மையையும் தீமையையும் தீர்மானிக்கும். உயரதிகாரிகள் சொல்வதை கேட்டு நடப்பது நல்லது. பணப்புழக்கம் தாரளமாக இருக்கும். கூடவே செலவும் அதிகரிக்கும் என்பதால் சிக்கனமாக இருக்கவும். நான்காம் வீட்டில் மூன்று கிரகங்கள் இணைவதோடு கிரகணமும் நிகழப்போகிறது. வாகனங்களில் பராமரிப்பு செலவுகள் வரும். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் சின்னச் சின்ன கோபம் அவ்வப்போது எட்டிப்பார்க்கும் ஆலய வழிபாடு மன அமைதியை தரும்.
கும்பம்: ஒன்பதாம் வீட்டில் நான்கு கிரகங்கள் கூட்டணி சேர்ந்துள்ளன. அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம். மூன்றாம் வீட்டில் 3 கிரகங்கள் கூடுகின்றன. புது முயற்சிகளில் கவனம் தேவை. இந்த நாளில் புது வேலைக்காக முயற்சி செய்ய வேண்டாம். இந்த கஷ்டத்தையும் கடந்து விடுவீர்கள். வெளிநாடு போக வேண்டும் என்று நினைத்திருப்பவர்கள் தயவு செய்து தள்ளிப்போடுங்கள். ஆன்மீக பயணம் செல்வது நல்லது. அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். கையில் இருக்கும் பணம் கரையக்கூடும் என்பதால் கவனமாக செலவு செய்யவும். உடல் நலப்பிரச்சினைகள் தீர சந்திர கிரகண நாளில் கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்வது நல்லது.
மீனம்: எட்டாம் வீட்டில் நான்கு கிரகங்கள் கூடியுள்ளன. சூரியன் செவ்வாய் கேது சேர்க்கை அஷ்ட ஸ்தானத்தில் அமைந்துள்ளதால் எதைக்கண்டாலும் பயம் உண்டாகும். தேவையற்ற கோபமும் எரிச்சலும் ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்கள் மீதே கோபப்பட்டு சண்டைக்கு செல்வீர்கள். சின்னச் சின்ன உடல் உபாதைகள் வந்து செல்லும். வண்டி வாகனங்களில் செல்லும் போது ஜாக்கிரதையாக இருக்கவும். நெருப்பு காயம் ஏற்படலாம் என்பதால் ஜாக்கிரதையாக இருக்கவும். கிரகண நாளில் சத்தான உணவுகளை சாப்பிடுங்கள். இது உங்களுக்கு சிறப்பானதல்ல வண்டி வாகனங்களில் செல்லும் போது ஜாக்கிரதையாக இருக்கவும். நெருப்பு காயம் ஏற்படலாம் என்பதால் ஜாக்கிரதையாக இருக்கவும். குடும்ப ஸ்தானத்தில் மூன்று கிரக சேர்க்கை கூடவே சந்திர கிரகணமும் நிகழ உள்ளதால் காலையிலேயே முருகன் கோவிலுக்கு செல்லுங்கள். துர்கா அஷ்டோத்திர பாராயணம் செய்வது மனதிற்கு அமைதியை தரும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications