Dhanusu: தனுசு ராசிக்கு பிரகாசமான வாழ்க்கை காத்திருக்கு.. இதில் மட்டும் கவனம்
சந்திர கிரகணம் 2026: மார்ச் 3 ஆம் தேதி சந்திர கிரகணம் நடைபெறவுள்ளது. இந்த சந்திர கிரகணத்தால் தனுசு ராசியினருக்கு ஏற்படப்போகும் மாற்றம், கிடைக்கும் பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம் [Lunar eclipse].
2026 மார்ச் மாதம் 3 ஆம் தேதி சந்திர கிரகணம் நடைபெறவுள்ளது. ஜோதிட சாஸ்திரத்தின்படி சூரியன், சந்திரன் இரண்டையும் ராஜ கிரகங்கள் என்றும், ஒளிக் கிரகங்கள் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஒளிக் கிரகங்களுக்கு ராகு, கேதுவால் ஏற்படக்கூடிய கிரகஸ்தம் கிரகணம் ஆகும். கேது பகவானால் சந்திரனுக்கு ஏற்படக் கூடிய கிரகணமாகும்.

மார்ச் மாதம் 3 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று பிற்பகல் 3.20 மணிக்கு கிரகணம் ஆரம்பித்து இரவு 7 மணி 53 நிமிடம் வரை கிரகணம் நடைபெறவுள்ளது. இந்த காலகட்டத்தில் ஒவ்வொரு ராசிக்கு பல மாற்றத்தை இந்த கிரகணம் ஏற்படுத்திக் கொடுக்கும். பூரம் நட்சத்திரத்தில் சந்திர கிரகணம் நடைபெறவுள்ளது. சிம்ம ராசி, கடக லக்னத்தில் கிரகணம் நடைபெறுகிறது.
பரணி, பூரம், பூராடம், மகம், உத்திரம் ஆகி 5 நட்சத்திரத்தினருக்கு கிரகணம் பிடிப்பதால் கிரகண சாந்தி செய்து கொள்வது நன்மை பயக்கும். சந்திர கிரகணத்தன்று தனுசு ராசியினருக்கும் கிடைக்கும் பலன்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
தனுசு (Dhanusu Rasi Palan)
சந்திர கிரகணத்தில் ஏற்படக் கூடிய நட்சத்திரங்களில் ஒன்று தனுசு ராசியினரின் பூராடம் நட்சத்திரம். தனுசு ராசியில் மூலம், பூராடம், உத்திரடாம் என்று 3 நட்சத்திரங்கள் உள்ளன. நிறைய தர்ம காரியங்களை எப்போதும் செய்வது நல்லது. பழைய கர்மாக்களை கழிப்பதற்கே நீங்கள் தனுசு ராசியில் பிறந்திருப்பீர்கள். இந்த கர்மாக்களினால் வாழ்க்கை, வேலை, மனம் என நிறைய கஷ்டங்களை அனுபவித்துக் கொண்டிருப்பீர்கள். இந்த பிரச்சனைகளில் இருந்து விடுபட நிறைய தர்ம காரியங்களைச் செய்வது நல்லது.
புதிய ஒப்பந்தம்
சந்திர கிரகணத்தின்படி, ராசிக்கு 3 ஆம் இடமான தைரிய வீரிய ஸ்தானத்தில் செவ்வாய், ராகு, சூரியன், புதன் ஆகிய 4 கிரகங்கள் உள்ளன. சதுர்த்தம கேந்திரத்தில் சுக்கிரனும் சனியும் இணைந்துள்ளனர். 7 ஆம் இடத்தில் இருந்து குரு பகவான் ராசியைப் பார்க்கிறார். பாக்கிய ஸ்தானத்தில் சந்திரனும், கேதுவும் அமர்ந்திருக்கின்றனர். தொழில், வியாபாரம் செய்பவர்கள் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள்.
மாணவர்களுக்கு ஏற்றம்
3 ஆம் இடத்தில் இருக்கும் புதன், சூரியனின் சேர்க்கை அரசாங்க ஒப்பந்தங்களைப் பெற்றுத் தரும். திருமண விஷயங்கள் கைகூடி வரும். மாணவர்கள் ஆன்லைனில் கோர்ஸ் எடுத்து படித்து முன்னேறும் யோகம் உண்டாகும். கிரகணத்துக்குப் பிறகு மாணவர்களுக்குப் பெரிய வளர்ச்சி ஏற்படும். இந்த ஆண்டு முழுவதுமே நிறைய பயணங்கள் தனுசு ராசியினருக்கு அமையும்.
பண வரவு சூப்பர்
4 ஆம் இடத்தில் சுக்கிரன், சனி அமர்ந்திருப்பதால் வீட்டில் புதிதாக எலக்ட்ரானிக் பொருள்கள் வாங்கக் கூடிய யோகம் உண்டு. 7 ஆம் இடத்தில் இருக்கும் குரு பகவான் உங்களைப் பார்ப்பதால் நிதி சார்ந்த விஷயங்களில் பெரிய முன்னேற்றம் ஏற்படும். சுப காரியங்கள் உங்கள் வீட்டில் நடக்கும். திருமண வரன்கள் கைகூடி வரும். வெளிநாடுகளில் வசிப்பவர்கள் சட்ட ரீதியான பிரச்சனைகளில் சிக்கிக் கொள்ளாமல் பார்த்துக் கொள்வது நல்லது.
வழிபாடு
அப்பாவுடைய உடல்நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். பூர்வீகம் தொடர்பான பிரச்சனைகள் வரலாம் என்பதால் கவனம் தேவை. ஆவணங்களைப் படித்துப் பார்த்துக் கொண்டு கையெழுத்திடுவது நன்மை பயக்கும். நிறைந்த வெற்றிகள் காத்திருக்கும் நல்ல காலகட்டம். இந்த சந்திர கிரகண காலத்தில் ஆஞ்சநேயர் மந்திரத்தை சொல்லி வருவது சகல வித நன்மைகளைத் தரும்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications