Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Lunar eclipse: அடித்து ஆடப்போகும் மிதுன ராசி.. சந்திரகிரகணத்தால் வரப்போகும் பெரிய அதிர்ஷ்டம்

Subscribe to Oneindia Tamil

சந்திர கிரகணம் 2026: மார்ச் 3 ஆம் தேதி சந்திர கிரகணம் நடைபெறவுள்ளது. இந்த சந்திர கிரகணத்தால் கடக ராசியினருக்கு ஏற்படப்போகும் மாற்றம், கிடைக்கும் பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம் [Lunar eclipse].

2026 மார்ச் மாதம் 3 ஆம் தேதி சந்திர கிரகணம் நடைபெறவுள்ளது. ஜோதிட சாஸ்திரத்தின்படி சூரியன், சந்திரன் இரண்டையும் ராஜ கிரகங்கள் என்றும், ஒளிக் கிரகங்கள் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஒளிக் கிரகங்களுக்கு ராகு, கேதுவால் ஏற்படக்கூடிய கிரகஸ்தம் கிரகணம் ஆகும். கேது பகவானால் சந்திரனுக்கு ஏற்படக்கூடிய கிரகணமாகும்.

lunar-eclipse-what-kind-of-benefits-will-get-kadagam-rasi-people-during-this-chandra-grahan

மார்ச் மாதம் 3 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று பிற்பகல் 3.20 மணிக்கு கிரகணம் ஆரம்பித்து இரவு 7 மணி 53 நிமிடம் வரை கிரகணம் நடைபெறவுள்ளது. இந்த காலகட்டத்தில் ஒவ்வொரு ராசிக்கு பல மாற்றத்தை இந்த கிரகணம் ஏற்படுத்திக் கொடுக்கும். பூரம் நட்சத்திரத்தில் சந்திர கிரகணம் நடைபெறவுள்ளது. சிம்ம ராசி, கடக லக்னத்தில் கிரகணம் நடைபெறுகிறது.

பரணி, பூரம், பூராடம், மகம், உத்திரம் ஆகி 5 நட்சத்திரத்தினருக்கு கிரகணம் பிடிப்பதால் கிரகண சாந்தி செய்து கொள்வது நன்மை பயக்கும். சந்திர கிரகணத்தன்று கடக ராசியினருக்கும் கிடைக்கும் பலன்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

கடகம் (Kadagam Rasi Palan)

கடக ராசியினருக்கு உங்கள் ராசி தான் சந்திர கிரகணம் நடைபெறக் கூடிய லக்கினர். உங்கள் ராசிக்கு 2 ஆவது ராசியான சிம்ம ராசியில் பூரம் நட்சத்திரத்தில் சந்திர கிரகணம், கேது கிரஹஸ்தம் நடைபெறவுள்ளது. இந்த கிரகணம் நடைபெறும்போது அஷ்டம ஸ்தானத்தில் சூரியன், புதன், செவ்வாய், ராகு ஆகிய 4 கிரகங்கள் இருக்கின்றன.

அற்புதமான வளர்ச்சி

பாக்கிய ஸ்தானத்தில் சுக்கிரனும், சனியும் இருக்கின்றன. அயன சயன ஸ்தானத்தில் குரு பகவானும், தன ஸ்தானத்தில் சந்திரன், கேதுவும் உள்ளனர். கடக ராசியினருக்கு மாபெரும் வெற்றியை தேடித் தரக்கூடிய காலமாக இருக்கும். கடக ராசியினர் வாழ்க்கையில் மிகப்பெரிய வளர்ச்சியைக் காண்பீர்கள். பொதுமக்கள் தொடர்புடைய துறையில் இருந்தால் பொதுமக்களின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும்.

தொழில் துறை

எல்லா வகையிலும் புகழ்பெறக்கூடிய காலமாக இருக்கும். அஷ்டமத்தில் ராகு இருந்தால் சிலர் உங்களை அவமானப்படுத்தக் கூடிய சூழல் ஏற்படும். கிரகண காலத்திற்குப் பிறகு உங்களுக்கு நல்ல மாற்றங்கள் முன்னேற்றங்கள் ஏற்படும். எலக்டிரிக்கல் துறை, எலக்ட்ரானிக்ஸ் துறையில் இருப்பவர்களுக்கு பெரிய வளர்ச்சி ஏற்படும். கலைஞர்களுக்கு நல்ல பண வருமானங்கள் வரும்.

கவனம்

கலைஞர்களுடைய புகழை பாதிக்கக்கூடிய சம்பவங்கள், வாய்ப்புகளைத் தட்டிப் பறிக்கக்கூடிய சம்பவங்கள் நிறைய நடைபெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளதால் கவனம் தேவை. கலைஞர்கள் தங்கள் உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது. சொத்து சம்பந்தமாக உங்களை ஏமாற்றக்கூடிய முயற்சிகள் நடக்கும்.

பணவரவு

கிரகண காலத்திற்குப் பிறகு உங்களுக்கு அற்புதமான முன்னேற்றம் ஏற்படும். சிலருக்கு இந்த காலகட்டத்தில் தொழில் ரீதியாக நல்ல வளர்ச்சிகள் ஏற்படும். நிதி சார்ந்த விஷயங்களில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நீங்கள் நினைப்பதை விட செல்வ செழிப்பு அதிகரிக்கும். திருமணத் தடைகள் பரிபூரணமாக நீங்கும். திருமணம் கைகூடிய வரக்கூடிய யோகம் உண்டு.

முதலீடு அதிகரிக்கும்

12 ஆம் இடத்தில் குரு இருப்பதால் உங்களுடைய முதலீட்டை அதிகரிக்கும். தங்கம் வாங்குவதற்கான அமைப்பு உண்டாகும். சனி பகவான் மீனத்தில் இருப்பதால் தங்கத்தின் விலையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டாலும் உங்களுக்கு தங்கம் வாங்கக்கூடிய யோகம் ஏற்படும். தொழில் ரீதியாக புதிய மாற்றங்களைச் செய்வீர்கள்.

வழிபாடு

பெரிய மாற்றங்கள், முன்னேற்றங்கள் ஏற்படும். இந்த காலகட்டத்தில் பெரிய வெற்றிகளைப் பெறுவதற்கு ஓம் பார்வதி தேவியே நமஹ என்கிற மந்திரத்தைச் சொல்லி வருவது அனுகூலத்தைத் தரும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+