Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Magaram: மகர ராசிக்கு கூரையை பிச்சுகிட்டு கொட்டும் பணம்.. சுக்கிரனால் வரும் மாபெரும் வெற்றி

Subscribe to Oneindia Tamil

சந்திர கிரகணம் 2026: மார்ச் 3 ஆம் தேதி சந்திர கிரகணம் நடைபெறவுள்ளது. இந்த சந்திர கிரகணத்தால் மகரம் ராசியினருக்கு ஏற்படப்போகும் மாற்றம், கிடைக்கும் பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம் [Lunar eclipse].

2026 மார்ச் மாதம் 3 ஆம் தேதி சந்திர கிரகணம் நடைபெறவுள்ளது. ஜோதிட சாஸ்திரத்தின்படி சூரியன், சந்திரன் இரண்டையும் ராஜ கிரகங்கள் என்றும், ஒளிக் கிரகங்கள் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஒளிக் கிரகங்களுக்கு ராகு, கேதுவால் ஏற்படக்கூடிய கிரகஸ்தம் கிரகணம் ஆகும். கேது பகவானால் சந்திரனுக்கு ஏற்பட்கூடிய கிரகணமாகும்.

lunar-eclipse-what-kind-of-benefits-will-get-magaram-rasi-people-during-this-chandra-grahan

மார்ச் மாதம் 3 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று பிற்பகல் 3.20 மணிக்கு கிரகணம் ஆரம்பித்து இரவு 7 மணி 53 நிமிடம் வரை கிரகணம் நடைபெறவுள்ளது. இந்த காலகட்டத்தில் ஒவ்வொரு ராசிக்கு பல மாற்றத்தை இந்த கிரகணம் ஏற்படுத்திக் கொடுக்கும். பூரம் நட்சத்திரத்தில் சந்திர கிரகணம் நடைபெறவுள்ளது. சிம்ம ராசி, கடக லக்னத்தில் கிரகணம் நடைபெறுகிறது.

பரணி, பூரம், பூராடம், மகம், உத்திரம் ஆகி 5 நட்சத்திரத்தினருக்கு கிரகணம் பிடிப்பதால் கிரகண சாந்தி செய்து கொள்வது நன்மை பயக்கும். சந்திர கிரகணத்தன்று மகரம் ராசியினருக்கும் கிடைக்கும் பலன்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

மகரம் (Magaram Rasi Palan)

மகர ராசிக்காரர்கள் பொதுவாகவே கடின உழைப்பாளிகளாக இருக்கக் கூடியவர்கள். சந்திர கிரகண காலகட்டத்தில் கிரக நிலைகளானது உங்கள் தன ஸ்தானத்தில் 4 கிரகங்களின் கூட்டணி உள்ளது. செவ்வாய், ராகு, புதன், சூரியன் ஆகிய கிரகங்கள் உள்ளன. தைரிய ஸ்தானத்தில் சுக்கிரன், சனி உள்ளது. அஷ்டம ஸ்தானத்தில் சந்திரன், கேதுவும், 6 ஆவது ஸ்தானத்தில் குரு பகவான் இருக்கிறார்.

தன வரவு

சந்திர கிரகணத்துக்குப் பிறகு மகர ராசியினருக்கு நல்ல தன வரவு உண்டாகும். பணத்திற்குப் பஞ்சம் இருக்காது. 2 ஆம் இடத்தில் 4 கிரகங்கள் இருப்பதால் பூமியினால் லாபம், சகோதரனால் லாபம், கணவர் வீட்டினால் லாபம், தந்தையால் பண வரவு, தாய்மாமனால் பண வரவு என நல்ல பண வரவு உண்டாகும். வாக்கு பலம் அதிகரிக்கும். ராசிநாதன் சனி பகவான் உபஜெய ஸ்தானத்தில் சுக்கிரனோடு சேர்ந்து அமர்ந்திருக்கிறார். மிகப்பெரிய வெற்றியைக் கொடுக்கும்.

திருமண யோகம்

திருமண வரன் கைகூடும். சுக்கிரனோடு சனி இணைந்திருப்பதால் மிகப்பெரிய வெற்றி உண்டாகும். வீட்டில் பெண் பிள்ளைகள் இருந்தால் திருமணத்திற்கு வரன் கைகூடும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் செல்லும் யோகம் உண்டாகும். தொழில், கலை, வியாபாரம் என சில துறைகளில் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் யோகம் உண்டாகும். சுப காரியத்தில் இருந்து வந்த தடைகள் நீங்கும்.

ஆரோக்கியம்

8 ஆம் இடத்தில் சந்திரன் கேது சேர்க்கை, 2 ஆம் இடத்தில் சூரியன், ராகு சேர்க்கை இருப்பதால் இந்த கிரகணத்துக்குப் பிறகு உங்கள் வீட்டில் இருக்கும் மூத்தவர்கள், தாய், தந்தைக்கு உடல்நலக் குறைபாடு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதால் மிக கவனமாக இருக்க வேண்டும். மனக் குழப்பங்கள் ஏற்பட்டுக் கொண்டே இருப்பதால், தெளிவாக வைத்துக் கொள்வது நல்லது.

முன்னேற்றம்

6 ஆம் இடத்தில் குரு பகவான் இருக்கிறார். இந்த கிரகண நேரத்தில் அதிகமாக அடாணா ராகத்தில் வரும் சங்கீதங்கள், பாடல்களைக் கேட்பது நன்மை பயக்கும். இதன் மூலம் நல்ல செல்வ வளங்கள் கூடும். வயிறு பிரச்சனைகள், நோய் நொடிகளுக்கு நல்ல வழி பிறக்கும். படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் நல்ல தன லாபம் ஏற்படும்.

வழிபாடு

இந்த கிரகண நேரத்தில் மகர ராசியினர் பெருமாள் மந்திரத்தை சொல்லி வருவது, விஷ்ணு சஹஸ்ர நாமத்தை பாராயணம் செய்வது மிகுந்த வெற்றியைக் கொடுக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+