Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிம்ம ராசிக்கு விபரீத ராஜயோகம்.. சந்திரண கிரகணத்தில் வரப்போகும் அதிர்ஷ்டம்

Subscribe to Oneindia Tamil

சந்திர கிரகணம் 2026: மார்ச் 3 ஆம் தேதி சந்திர கிரகணம் நடைபெறவுள்ளது. இந்த சந்திர கிரகணத்தால் சிம்ம ராசியினருக்கு ஏற்படப்போகும் மாற்றம், கிடைக்கும் பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம் [Lunar eclipse].

2026 மார்ச் மாதம் 3 ஆம் தேதி சந்திர கிரகணம் நடைபெறவுள்ளது. ஜோதிட சாஸ்திரத்தின்படி சூரியன், சந்திரன் இரண்டையும் ராஜ கிரகங்கள் என்றும், ஒளிக் கிரகங்கள் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஒளிக் கிரகங்களுக்கு ராகு, கேதுவால் ஏற்படக்கூடிய கிரகஸ்தம் கிரகணம் ஆகும். கேது பகவானால் சந்திரனுக்கு ஏற்பட்கூடிய கிரகணமாகும்.

lunar-eclipse-what-kind-of-benefits-will-get-simmam-rasi-people-during-this-chandra-grahan

மார்ச் மாதம் 3 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று பிற்பகல் 3.20 மணிக்கு கிரகணம் ஆரம்பித்து இரவு 7 மணி 53 நிமிடம் வரை கிரகணம் நடைபெறவுள்ளது. இந்த காலகட்டத்தில் ஒவ்வொரு ராசிக்கு பல மாற்றத்தை இந்த கிரகணம் ஏற்படுத்திக் கொடுக்கும். பூரம் நட்சத்திரத்தில் சந்திர கிரகணம் நடைபெறவுள்ளது. சிம்ம ராசி, கடக லக்னத்தில் கிரகணம் நடைபெறுகிறது.

பரணி, பூரம், பூராடம், மகம், உத்திரம் ஆகி 5 நட்சத்திரத்தினருக்கு கிரகணம் பிடிப்பதால் கிரகண சாந்தி செய்து கொள்வது நன்மை பயக்கும். சந்திர கிரகணத்தன்று சிம்ம ராசியினருக்கும் கிடைக்கும் பலன்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

சிம்மம் (Simmam Rasi Palan)

சிம்ம ராசினருக்கு உங்கள் ராசியிலேயே சந்திர கிரகணம் நடைபெறவுள்ளது. இந்த காலகட்டத்தில் உங்கள் ராசியில் சந்திரன், கேதுவின் சேர்க்கை நடைபெறவுள்ளது. சந்திர கிரகணம் பூரம் நட்சத்திரத்தில் நிகழவுள்ளது. சிம்ம ராசியைச் சேர்ந்த மகம், உத்திரம், பூரம் ஆகிய 3 நட்சத்திரங்களுக்கு சந்திர கிரகணம் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் கிரகண சாந்தி செய்து கொள்வது அவசியமாகும்.

மாற்றம்

இந்த கிரகண நேரத்திற்குப் பிறகு பல மாற்றங்கள் சிம்ம ராசியினர் வாழ்க்கையில் ஏற்படும். குறிப்பாக, தொழில் செய்பவர்களுக்கு ஏற்றுமதி தொழில் செய்பவர்களுக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். கலைத் துறையைச் சேர்ந்தவர்களுக்கு புதிய புதிய வாய்ப்புகள் வந்து சேரும். வெளிநாட்டுக்குச் செல்லக்கூடிய யோகம், வெளிநாட்டில் திறமையை வெளிப்படுத்தக் கூடிய யோகம் உண்டாகும்.

தொழில்

எழுத்தாளர்கள், பேச்சாளர்கள் நன்றாக புகழ் பெறுவீர்கள். மன சஞ்சலம் இருந்து கொண்டே இருக்கும். கிரக அமைப்புகளைப் பார்க்கும் போது சிம்ம ராசியில் சந்திரன், கேது, மகர ராசியில் புதன், ராகு, செவ்வாய், சூரியன், கும்ப ராசியில் புதன், செவ்வாய், ராகு, சூரியன், மீன ராசியில் சுக்கிரன், சனி, மிதுனத்தில் புதன் பகவான் ஆகியோர் உள்ளனர். பிசினஸ் செய்பவர்களுக்கு பார்ட்னர்ஷிப்பில் நிறைய மாறுபாடுகள் ஏற்படும். மன மாறுபடுடனேயே உங்களுடன் நடந்து கொள்வார்கள்.

திருமண யோகம்

சில பேர் உங்கள் தொழிலை விட்டு விட்டு வேறு தொழிலில் இணையும் வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. அஷ்டமத்தில் சுக்கிரனும், சனியும் இருப்பதால் திருமண யோகம் உண்டாகும். திருமண உறவில் பொறுமையாக நடந்து கொள்ள வேண்டும். நீண்ட நாட்களாக வியாதிகள் இருக்கக்கூடியவர்கள் வியாதியில்
இருந்து விடுபடக் கூடிய வாய்ப்புகள் ஏற்படும்.

விபரீத ராஜயோகம்

சிலருக்கு உடல்நலப் பிரச்சனைகளைக் கொடுக்கும் வாய்ப்புள்ளது. பலருக்கு உடல்நலப் பிரச்சனையில் இருந்து விடுபடக் கூடிய வாய்ப்பும் உண்டாகும். 6க்கு உரிய சனி 8 ஆம் இடத்தில் அமர்ந்து விபரீத ராஜயோகத்தைக் கொடுக்கவுள்ளார். நீண்ட நாட்களாக உங்களுக்கு இருந்து வந்த வியாதிகள் நீங்குவதற்கான மருத்துவ ஆலோசனைகள் கொடுக்கும்.

வழிபாடு

மாணவர்களுக்கு கல்வியில் நல்ல வளர்ச்சி ஏற்படும். தாயின் உடல்நிலையில் அதிகமான கவனத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். மன கலக்கங்கள் அவ்வப்போது இருந்து கொண்டே இருக்கும். கிரகண நேரத்தில் பாதிப்புகள் வரக்கூடாது என்று நினைப்பவர்கள் கிரகணம் நடக்கக்கூடிய நேரத்தில் திருவையாறு ஐயாரப்பன் மந்திரத்தைச் சொல்லிக் கொண்டிருப்பது நல்ல ஏற்றத்தைக் கொடுக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+