Thulam: துலாம் ராசிக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி.. சந்திர கிரகணத்தில் அடிக்கும் லாட்டரி
சந்திர கிரகணம் 2026: மார்ச் 3 ஆம் தேதி சந்திர கிரகணம் நடைபெறவுள்ளது. இந்த சந்திர கிரகணத்தால் துலாம் ராசியினருக்கு ஏற்படப்போகும் மாற்றம், கிடைக்கும் பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம் [Lunar eclipse].
2026 மார்ச் மாதம் 3 ஆம் தேதி சந்திர கிரகணம் நடைபெறவுள்ளது. ஜோதிட சாஸ்திரத்தின்படி சூரியன், சந்திரன் இரண்டையும் ராஜ கிரகங்கள் என்றும், ஒளிக் கிரகங்கள் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஒளிக் கிரகங்களுக்கு ராகு, கேதுவால் ஏற்படக்கூடிய கிரகஸ்தம் கிரகணம் ஆகும். கேது பகவானால் சந்திரனுக்கு ஏற்பட்கூடிய கிரகணமாகும்.

மார்ச் மாதம் 3 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று பிற்பகல் 3.20 மணிக்கு கிரகணம் ஆரம்பித்து இரவு 7 மணி 53 நிமிடம் வரை கிரகணம் நடைபெறவுள்ளது. இந்த காலகட்டத்தில் ஒவ்வொரு ராசிக்கு பல மாற்றத்தை இந்த கிரகணம் ஏற்படுத்திக் கொடுக்கும். பூரம் நட்சத்திரத்தில் சந்திர கிரகணம் நடைபெறவுள்ளது. சிம்ம ராசி, கடக லக்னத்தில் கிரகணம் நடைபெறுகிறது.
பரணி, பூரம், பூராடம், மகம், உத்திரம் ஆகி 5 நட்சத்திரத்தினருக்கு கிரகணம் பிடிப்பதால் கிரகண சாந்தி செய்து கொள்வது நன்மை பயக்கும். சந்திர கிரகணத்தன்று துலாம் ராசியினருக்கும் கிடைக்கும் பலன்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
துலாம் (Thulam Rasi Palan)
துலாம் ராசியினருக்கு உங்கள் ராசிக்கு பூர்வ புண்ணிய ஸ்தானம் வலுத்து இருக்கிறது. சூரிய பகவான், செவ்வாய், புதன், ராகு ஆகிய கிரகங்கள் அங்கு அமர்ந்திருக்கின்றன. ராசிக்கு 6 ஆம் இடத்தில் சனி பகவான் அமர்ந்திருக்கிறார். சுக்கிர பகவான் உச்சமாக அங்கு அமர்ந்திருக்கிறார். ராசிக்கு பாக்கிய ஸ்தானத்தில் குரு பகவான், லாபத்தில் சந்திரனும், கேதுவம் அமர்ந்திருக்கின்றனர்.
சுக்கிரனால் வெற்றி
சந்திர கிரகணத்தை துலாம் ராசியினர் கவனமாக கையாள வேண்டும். இந்த காலகட்டத்தில் சந்திரன் சுக்கிரனின் நட்சத்திரமான பூரம் நட்சத்திரத்தில் கிரகணம் பிடிக்கவுள்ளதால், இந்த சந்திர கிரகணத்தைப் பயன்படுத்திக் கொண்டால் அற்புதமான வெற்றி உண்டாகும். கிரகணத்தின்போது உங்கள் ராசிநாதன் சுக்கிரன் 5 ஆம் இடத்தில் அமர்ந்திருப்பதால் மிகப்பெரிய வெற்றி உண்டாகும்.
கலைத் துறை
சினிமா, நடகத் துறை, கலைத் துறையைச் சேர்ந்தவர்களுக்கு மிகப்பெரிய வெற்றி, முன்னேற்றம் உண்டாகும். 5 ஆம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானம் வலுத்துள்ளதால் நன்மை உண்டாகும். 5 ஆவத ஸ்தானத்தில் செவ்வாய் அமர்ந்திருப்பதால் கிரகணத்திற்குப் பிறகு திருமணம் உறுதியாகும். திருமணத்திற்கு காத்திருப்பவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கும்.
குரு பார்வை
குரு பகவான் உங்கள் ராசியைப் பார்ப்பதால் தீமைகள், துன்பங்கள் உங்களை விட்டு விலகும். 5 ஆம் இடத்தில் செவ்வாய், ராகு சேர்க்கை இருப்பதால் நண்பர்கள் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். நண்பர்களுடன் ஏற்படும் பொழுதுபோக்குகள் தவறான பொழுதுபோக்காக இருப்பதால் உங்கள் பெயர், புகழ் கெடுவதற்கான வாய்ப்பு ஏற்படும். நண்பர்களோடு பழகும்போதும், வெளியிடங்களுக்குச் செல்லும்போதும் பாதுகாப்பாக இருப்பது நல்லது.
பெயர் புகழ்
உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு வாய்ப்புகள் அருமையாக கூடி வரும். துலாம் ராசியைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர்கள், கேஸ்டிரோ என்டோலஜிஸ்ட், புற்றுநோய் சம்பந்தப்பட்ட ஆராய்ச்சி செய்பவர்களுக்கு நல்ல பெயர், புகழ் கிடைக்கும். உங்கள் துறையில் நீங்கள் மிகப்பெரிய நிபுணத்துவம் பெறுவீர்கள். வெற்றி பெறும் யோகம் உண்டாகும்.












Click it and Unblock the Notifications