Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Viruchigam: விருச்சிக ராசிக்கு அள்ளிக் கொடுக்கும் கிரகங்கள்.. நல்ல நேரம் ஆரம்பம்

Subscribe to Oneindia Tamil

சந்திர கிரகணம் 2026: மார்ச் 3 ஆம் தேதி சந்திர கிரகணம் நடைபெறவுள்ளது. இந்த சந்திர கிரகணத்தால் விருச்சிக ராசியினருக்கு ஏற்படப்போகும் மாற்றம், கிடைக்கும் பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம் [Lunar eclipse].

2026 மார்ச் மாதம் 3 ஆம் தேதி சந்திர கிரகணம் நடைபெறவுள்ளது. ஜோதிட சாஸ்திரத்தின்படி சூரியன், சந்திரன் இரண்டையும் ராஜ கிரகங்கள் என்றும், ஒளிக் கிரகங்கள் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஒளிக் கிரகங்களுக்கு ராகு, கேதுவால் ஏற்படக்கூடிய கிரகஸ்தம் கிரகணம் ஆகும். கேது பகவானால் சந்திரனுக்கு ஏற்பட்கூடிய கிரகணமாகும்.

lunar-eclipse-what-kind-of-benefits-will-get-viruchigam-rasi-people-during-this-chandra-grahan

மார்ச் மாதம் 3 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று பிற்பகல் 3.20 மணிக்கு கிரகணம் ஆரம்பித்து இரவு 7 மணி 53 நிமிடம் வரை கிரகணம் நடைபெறவுள்ளது. இந்த காலகட்டத்தில் ஒவ்வொரு ராசிக்கு பல மாற்றத்தை இந்த கிரகணம் ஏற்படுத்திக் கொடுக்கும். பூரம் நட்சத்திரத்தில் சந்திர கிரகணம் நடைபெறவுள்ளது. சிம்ம ராசி, கடக லக்னத்தில் கிரகணம் நடைபெறுகிறது.

பரணி, பூரம், பூராடம், மகம், உத்திரம் ஆகி 5 நட்சத்திரத்தினருக்கு கிரகணம் பிடிப்பதால் கிரகண சாந்தி செய்து கொள்வது நன்மை பயக்கும். சந்திர கிரகணத்தன்று விருச்சிக ராசியினருக்கும் கிடைக்கும் பலன்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

விருச்சிகம் (Viruchigam Rasi Palan)

விருச்சிக ராசியினருக்கு ராசிக்கு அதிபதி செவ்வாய் பகவான். செவ்வாய் என்றாலே கோபம், வேகம் அதிகமாக இருக்கும். இதன் பின்னால் ஒரு நியாமும், நேர்மையும் இருக்கும். வரும் மார்ச் 3 ஆம் தேதி நடைபெறும் கிரகண நேரத்தில் உங்கள் ராசிக்கு 4 ஆம் இடம் எனும் சுக ஸ்தானத்தில் ராசியதிபதி செவ்வாய், ராகு, புதன், சூரிய பகவான் அமர்ந்திருக்கின்றனர்.

சுக்கிரன் உச்சம்

பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சுக்கிரன், சனி பகவான், 8 ஆம் இடத்தில் குரு பகவான், 10 ஆம் இடத்தில் சந்திர பகவான், கேது பகவான் அமர்ந்திருக்கின்றனர். 10 ஆம் இடமான சிம்மத்தில் தான் சந்திர கிரகணம் நடைபெறுகிறது. இந்த காலகட்டத்தில் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சுக்கிரன் உச்சமாக அமர்ந்திருக்கிறார். சுக்கிரன் உங்களுக்கு சப்தமாதிபதி. 7 ஆம் இடத்திற்கு அதிபதி.

திருமண யோகம்

விருச்சிக ராசியினருக்கு நல்ல மனைவி, செல்வ செழிப்பு வேண்டும் என்றால் சுக்கிரனுடைய அனுக்கிரகம் வேண்டும். சுக்கிர் சனியுடன் 5 ஆம் இடத்தில் சேர்ந்திருப்பதால் இந்த கிரகணத்திற்குப் பிறகு பலருக்கு திருமண யோகம் உண்டாகும். திருமணத்தில் இருந்த தடைகள் எல்லாம் நீங்கி திருமணம் உண்டாகும். சீதா, ராதா திருமணத்தில் கலந்துகொள்வது நன்மை பயக்கும்.

ஆரோக்கியம்

5 ஆம் இடத்தில் சுக்கிரனும், சனியும் சேர்ந்திருக்கின்றனர். இந்த கிரகண காலத்துக்குப் பிறகு நிறைய பேருக்கு திருமணம், காதல் திருமணம் உறுதி செய்யப்படும். 4 ஆம் இடத்தில் செவ்வாய், ராகு இந்த கிரகங்களின் இணைவு நெஞ்சக நோய்கள் இருப்பவர்களுக்கு உரிய மருத்துவம் பெற்றுக் கொள்வது நல்லது. நுரையீரல், இதயம் பிரச்சனைகள் இருப்பவர்களுக்கு மருத்துவ ஆலோசனை பெற்றுக் கொள்ள வேண்டும்.

சொத்துகள் சேரும்

பூர்வீக நிலம், கணவர் நிலம், உங்கள் நிலம், உறவினர்கள் கொடுத்த நிலம் போன்றவற்றை விற்கும் யோகம் உண்டாகும். பழைய சொத்துகளை விற்றுவிட்டு புதிய சொத்துகளை வாங்குவீர்கள். அஷ்டமத்தில் இருக்கும் குரு பகவான் உங்களுக்கு காசு, பண யோகத்தைக் கொடுப்பார். திடீர் தன வரவுகள் உண்டாகும். சந்திர கிரகணம் 10 ஆம் இடத்தில் நடப்பதால் நல்ல வேலை மாற்றம், புதிய தொழில் தொடங்கும் யோகம் உண்டாகும்.

வழிபாடு

தொழிலில் உடன் இருப்பவர்களால் சில மன கலக்கங்கள், பிரச்சனைகளும் ஏற்படலாம். தொழிற்சாலைகளில் தீ விபத்துகள் ஏற்படக்கூடிய அமைப்பு உள்ளதால் நீங்கள் நடத்தும் நிறுவனங்களில் தீத்தடுப்பு கருவிகள், பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வது நல்லது. வெற்றியைத் தரும் சந்திர கிரகணமாக இருக்கும். சந்திர கிரகணம் நடைபெறும் நேரத்தில் காவல் தெய்வங்களின் மந்திரத்தை சொல்வது நன்மை பயக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+