Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மகர ராசிக்கு 2 லட்டு தின்ன ஆசையா.. டாப் கிளாஸ் யோகம்.. என்ஜாய் பண்ணுங்க

Subscribe to Oneindia Tamil

Aavani matha palan: ஆடி மாதம் நிறைவடைந்து ஆவணி மாதம் பிறக்கப் போகிறது. 2025 ஆம் ஆண்டின் ஆவணி மாதத்தில் மகர ராசிக்கான பலன்கள், பரிகாரங்கள், என்னென்ன நன்மைகள் கிடைக்கும், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் என்ன என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

2025 ஆவணி மாதம் பிறக்கப் போகிறது. சூரியனின் இயக்கத்தை வைத்தே தமிழ் மாதங்கள் ஆரம்பமாகின்றன. அதன்படி, தலைமை கிரகமான சூரியன் ஆட்சி என்கிறது உயர்நிலை அமைப்போடு சிம்மத்தில் வலுவாக இருக்கப் போகிறார். இது விசேஷமான அமைப்பாகும். குரு மிதுனத்திலும், சனி மீனத்திலும், சுக்கிரன், புதனின் இயக்கங்கள் கடகத்திலும், சிம்மத்திலும் மாறியிருக்கின்றன.

magaram-aavani-matha-palan-2025-what-are-the-benefits-remedies-and-changes-that-will-occur-for-mag

கன்னியில் செவ்வாய் இருப்பது நல்ல விசேஷமான நிலையாகும். புதனில் குருவும், செவ்வாயும், கடகத்தில் சூரியன், புதன், சுக்கிரன் இருப்பது நல்ல அமைப்பாகும். கும்பத்தில் இருக்கும் ராகுவை குரு பார்ப்பது நல்ல மாற்றங்களைத் தரும். அந்த வகையில் இந்த ஆண்டு ஆடி மாதம் நிறைவடைந்து ஆவணி மாதம் பிறக்கிறது.

இந்த ஆவணி மாதத்தில் மகரம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், ஏற்படப் போகும் மாற்றங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு டாப் கிளாஸ் யோகமாக இருக்கும். எதிர்பார்க்காத அதிர்ஷ்டங்கள், நன்மைகள் நடக்கும் மாதமாக இந்த மாதம் இருக்கும். 8 ஆம் இடத்தில் சூரியன் மறைந்திருந்தாலும், ஆட்சியாகத்தான் இருக்கிறார். ஆனால், ஸ்தான பலம் என்று சொல்லக்கூடிய ஆவணி மாதத்திற்கே உரிய ஆட்சி பலத்தோடு இருப்பதால் பெரிய அளவில் எந்தவிதமான சோதனைகளும் இருக்காது.

விடிவுகாலம்

8 இல் சூரியன், 6 இல் குரு இருக்கிற பலமான அமைப்புகள் செயல்படுகின்ற காரணத்தால் கடந்த காலத்தில் பங்குச்சந்தையில், ஆன்லைனில் பல ஆயிர்கணக்கிலான பணங்களை விட்டுவிட்டேன் என்பவர்களுக்கு விடிவுகாலம் பிறக்கக்கூடிய காலகட்டமாக இருக்கும். ஆன்லைன் சூதாட்டத்தில் எப்போதுமே சம்பாதிக்க முடியாது பணம் போய்க்கொண்டே இருக்கும் திரும்பி வராது என்பதை மனம் உணரும்.

மனப் பக்குவம் வரும்

சூதாட்டை நிறுத்துவதே உங்களுக்கு சேமிப்பாக மாறும். அது மாதிரியான மனப் பக்குவம் ஏற்படும். 3 ஆம் இடத்தில் இருந்து சனி, செவ்வாய் தொடர்பு கொள்கின்றனர். 9 ஆம் இடத்தில் செவ்வாய் இருக்கிறார். ஒரு நிலையில் 11 ஆம் அதிபதியான செவ்வாய் 9 ஆம் இடத்தில் இருப்பது அதிஅற்புதமான காலகட்டமாக இருக்கும். பணம், காசு போன்றவற்றில் தடைகளில் இருந்த நிலைமைகள் அனைத்தும் சகலவிதமாக நீங்கும்.

பண வரவு

இனி படிப்படியான முன்னேற்றம் ஏற்படும். பண வரவு ஏற்படும் காலகட்டமாக இருக்கும். ஏழரைச் சனி முடிந்த நிலையில் நல்லவை நடக்கும் ஆரம்ப மாதமாக இந்த ஆவணி மாதம் அமையும். சிலருக்கு அதிகமான பயணங்கள் ஏற்படும். ஏற்றுமதி, இறக்குமதி, தொழில் தொடர்பான விஷயங்களில் கடந்த காலங்களில் இருந்த கஷ்டங்கள் எல்லாம் விலகக் கூடிய அமைப்பு உண்டு.

சோதனைகள் விலகும்

மாதத்தின் பெரும்பான்மையான நாட்களில் சுக்கிரன் 7 ஆம் இடத்தில் இருந்து ராசியைப் பார்ப்பதால் புத்துணர்ச்சி பிறக்கும் காலகட்டமாக இருக்கும். ஏழரை சனி முடிவது, 3 ஆம் இடத்தில் சனி இருப்பது, ராசியை சுக்கிரன் பார்ப்பது போன்றவற்றால் கடந்த காலங்களில் பெண் வழி உறவுகளால் மன அழுத்தம் கொண்டிருந்தவர்களுக்கு உறவுகளால் இருந்து வந்த சோதனைகள் அனைத்தும் விலகக்கூடிய தன்மை ஏற்படும்.

எடுத்த காரியங்களில் வெற்றி

திருமணமாகாதவர்கள், திருமணமாகி தோல்வி அடைந்தவர்களுக்கு இந்த ஆவணி மாதம் திருமணத்திற்கான நாட்களை முடிவு செய்வதற்கான யோகம் உண்டாகும். ஒரு பொறுப்புள்ள குடும்பத் தலைவன், தலைவியாகும் யோகம் உண்டு. எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி பெறும் சுப மாதமாக இந்த மாதம் உங்களுக்கு அமையும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+