மகர ராசிக்கு கொட்டும் அதிர்ஷ்டம்.. சனி விலகிவிட்டது.. ஆனா வாயில தான் உங்களுக்கு கண்டம்

Subscribe to Oneindia Tamil

பங்குனி மாத ராசி பலன்: மாசி மாதம் முடிவடைந்து பங்குனி மாதம் தொடங்குகிறது. இந்த பங்குனி மாதத்தில் மகர ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்தப் பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

பங்குனி மாதம் பிறந்தாச்சு. மாதங்களில் அற்புதமான மாதமாக பங்குனி மாதம் குறிப்பிடப்படுகிறது. அதாவது, சூரிய பகவான் தனது குருநாதர், பிரகஸ்பதியாகிய, குருவாகிய மீனத்தில் வந்து அமர்ந்து இதுவரை தான் கற்ற பாடங்களை எல்லாம் தனது குருநாதரிடம் சொல்லி மதிப்பெண்கள் பெற்று தேர்விலே தேர்ச்சி அடையக்கூடிய மாதம் இந்த மாதம் பங்குனி மாதம்.

Panuguni month rasi palan Astrology Magaram

அதனால் தான், பரவலாக தேர்வு நடைபெறும் மாதமாக இயற்கையாகவே இந்த மாதம் இருக்கிறது. இதுவரை சம்பாதித்த சம்பாத்தியம், அதற்கான வருமான வரிகள், செலவுகள், சேமிப்பு என்ன என்று கணக்குப் பார்க்கும் மாதமாக இந்தப் பங்குனி மாதம் அமைந்திருக்கிறது. 12 ஆவது மாதமாகிய பங்குனி மாதத்தில் கடைசி நட்சத்திரமாக வரக்கூடிய பங்குனி உத்திரப் பெருவிழா இந்த சிறப்பு மாதத்தில் தான் கொண்டாடப்படும்.

விஷேசமான மாதமாகிய இந்த பங்குனி மாதத்தில்தான் ராமநவமி கொண்டாடப்படும். வழிபாட்டு மாதம், வைபவ மாதம், கல்யாண மாதம், தெய்வ திருமணங்கள் கூடிவரும் மாதம், தெய்வ மாதம் என்று அழைக்கப்படுகிறது பங்குனி மாதம். ராமர் சீதா தேவியை மணந்த மாதம், இலைகள் உதிர்ந்து பச்சை இலைகள் துளிர்க்கும் மாதம், ஸ்ரீ தேவேந்திரன் இந்திராணியை மணந்து கொண்ட மாதம், சந்திரன் 27 நட்சத்திரங்களை மணந்து கொண்ட மாதம், திருமாலின் திருமார்பில் ஸ்ரீ மகாலட்சுமி இடம்பிடித்த அற்புதமான மாதமாக இந்த பங்குனி மாதம் திகழ்கிறது.

இந்த பங்குனி மாதத்தில் மகர ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் என்ன, எந்த விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

மகர ராசிக்காரர்களுக்கு வேற்று மொழி மனிதர்களால் அதிக ஆதாயம் கிடைக்கும். வாகனத்தில் கவனமாக இருக்க வேண்டும். நரம்பு மண்டலம், படபடப்பு போன்றவற்றில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏழரை சனி விலகுவதால் தொட்டது துலங்கும். குடும்பத்தினருடன் இருந்து வந்த மனத் தாங்கல்கள் அனைத்தும் நீங்கம். குடும்பத்துக்குத் தேவையான அனைத்து விஷயங்களையும் செய்வது நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தும்.

ஆச்சரியத்தக்க முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகள் படிப்பு, தொழில், வியாபாரம், உத்தியோகத்தில் அனுகூலம் காணப்படும். கழுத்தில் இருந்து செல்லும் நரம்பு, மயக்கம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். சனி விலகிவிட்டதென்று வாகனங்களில் அஜாக்கிரதையாக இருக்காமல் இருப்பது நல்லது. பேசும் வார்த்தைகளில் கவனமாக இருக்க வேண்டும். தன்மையுடனும், இனிமையாகவும் பேசுவது நல்லது.

நண்பர்களுக்காக ஜாமீன் கொடுப்பது. உறவுக்காரங்களுக்காக கடன் வாங்கிக் கொடுப்பது போன்ற விஷயங்களை செய்யாமல் இருப்பது நல்லது. புதிய முயற்சிகள் அனுகூலத்தைக் கொடுக்கும். புதிய பொறுப்புகள் வந்து சேரும். ஆரோக்கியத்தில் எந்த பாதிப்பு ஏற்பட்டாலும் உடனடியாக சிகிச்சைகள் மேற்கொள்வது நல்லது.

சூரிய பகவானை வழிபடுவது நல்ல பலன்களைத் தரும். 15.03.2025 முதல் 13.04.2025 வரை உள்ள நாட்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பணம் சார்ந்த விஷயங்களில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. புதன் சாதகமற்ற நிலையில் இருப்பதால் வாகன விபத்து போன்றவற்றில் சிக்கும் வாய்ப்புள்ளதால் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+