குருவின் அருளால் யோகம் பெறும் மகர ராசி.. உத்தியோகத்தில் வரப்போகும் சூப்பர் முன்னேற்றம்
Weekly Rasi Palan: ஜூலை 6 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி (ஆனி 22 முதல் 28 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் மகரம் ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
2026 இல் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

ஆனி மாதத்தில் சூரிய பகவான் மிதுனத்துக்கு பிரவேஷமாகியுள்ளார். அந்த வகையில், ஜூலை 6 முதல் ஜூலை 12 ஆம் தேதி (ஆனி 22 முதல் 28 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் மகரம் ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.
மகரம் ராசி பலன்
மகரம் ராசி மகரம் லக்கினம் சார்ந்த நபர்களுக்கு தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பில் ஏற்றம் உண்டாகும். திருமண அமைப்புகளில் அடுத்தடுத்து நல்ல காரியங்கள் நடக்கும். வீட்டில் சுப காரியங்கள் நடக்கும். சுப விரயம் உண்டாகும். அசையும், அசையா பொருள்கள் சேர்க்கை ஏற்படும். வண்டி, வாகனம் தொடர்பான விஷயங்களில் ஏற்றம் ஏற்படும்.
யோகம்
எல்லோருக்கும் நல்லவராக இருக்க வேண்டும் என்று நினைப்பதை தவிர்ப்பது நல்லது. உத்தியோகம் ரீதியாக நிறைய நன்மைகள் ஏற்படும். யோக பலன்கள் அதிகளவில் கிடைக்கும். இழுபறியாக இருந்த பல விதமான சிக்கல்கள் தீரும். வண்டி, வாகனங்கள், ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டு. பெண்கள், இளம் வயதை சார்ந்தவர்களுக்கு நிறைய அதிர்ஷ்டங்கள் தேடி வரும் அமைப்பு உள்ளது
சிக்கல் தீரும்
மற்றவர்கள் குடும்ப விஷயங்களில் நீங்கள் தலையிடுவது, உங்கள் குடும்ப விஷயத்தில் மற்றவர்கள் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். இழுபறியாக இருந்த சிக்கல்கள் தீரும். திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும். தனிப்பட்ட முறையில் உங்களுடைய செல்வாக்கு கூடும்.
குரு பார்வை
குருவின் பார்வை இருப்பதால் நிறைய நன்மைகள் நடக்கும். எடுத்த காரியங்களில் பெரும் ஜெயம் ஏற்படும். நிறைய பேருக்கு மெடிஷன் சீட், அரசு வேலை கிடைக்கும் யோகம் உண்டு. இந்த வாரத்தின் இறுதிப் பகுதியில் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். ரத்த அழுத்தத்தில் அடைப்புகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
வழிபாடு
குருவின் பார்வை இருப்பதால் பெரிய பாதிப்புகள் வராது. திட்டமிட்ட விஷயங்களில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். விநாயகர், துர்க்கை வழிபாடு ராகு, கேது தோஷங்கள் நிவர்த்தியாகும். எதிர்பார்க்காத செல்வங்கள் ஏற்படும். ரத்த அழுத்தம், குறை ரத்த அழுத்தம், நரம்பு சம்பந்தப்பட்ட பாதிப்புகள், தூக்கமின்மை போன்றவை வருவதற்கான வாய்ப்புள்ளது. சந்தோஷமும், பொருளாதராமும் 85 சதவீதம் நன்றாக இருக்கும்.


Click it and Unblock the Notifications
