மகர ராசிக்கு 90% அதிர்ஷ்டம்.. பணவரவு, சொத்து, நகை சேர்க்கை என கொட்டும் அதிர்ஷ்டம்
Weekly Rasi Palan: ஆகஸ்ட் 24 முதல் 30 ஆம் தேதி (ஆவணி 7 முதல் 13 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் மகரம் ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிடக் கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

சூரிய பகவான் சிம்ம ராசிக்கு வரக்கூடிய மாதமே ஆவணி மாதமாகும். சூரியன் தனது சொந்த ராசியில் வந்து அமர்வதால் மிகவும் வலுவாக காணப்படுவார். ரத்த அழுத்தம், வெர்டிகோ உள்ளவர்கள் இந்த மாதத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். அந்த வகையில், ஆகஸ்ட் 24 முதல் 30 ஆம் தேதி (ஆவணி 7 முதல் 13 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் மகரம் ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.
மகரம் ராசி பலன்
மகரம் ராசியினருக்கு இழுபறியாக இருந்து வந்த கஷ்டங்கள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். தனிப்பட்ட செல்வாக்குகள் கூடும். பூமி சம்பந்தப்பட்ட விஷயத்தில் அதீதமான ஏற்றமும், நன்மைகளும் ஏற்படும். பிள்ளைகள் விஷயத்தில் அனுகூலம் ஏற்படும். அசையும், அசையா பொருள்கள் சேர்க்கை ஏற்படும். தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும். முழு முதலீடுகளுக்கு உத்தரவாதம் ஏற்படும்.
ஆபரண சேர்க்கை
பிரகாசமாக மாறுவீர்கள். நிறைய சந்தோஷமான விஷயங்கள் நடக்கும். பொன், பொருள், ஆபரண சேர்க்கை ஏற்படும். எல்லா விஷயங்களும் உங்களுக்கு சாதகமாக நடக்கும். ஆரோக்கியத்தில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தில் தோல், கழுத்து, பின்பகுதிகளில் பிரச்சனைகள் வரும் வாய்ப்புள்ளது. முயற்சிகள் சாதகமாக இருக்கும்.
வெற்றி மேல் வெற்றி
பாக்கிய ஸ்தானத்தில் சுக்கிரன் இருப்பதால் நல்ல முன்னேற்றம் காணப்படும். எல்லா விஷயங்களும் சாதகமாக இருக்கும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். புதிய முதலீடுகளை செய்து மகிழ்வீர்கள். தனிப்பட்ட முறையில் செல்வாக்கு கூடும். தொடர்ச்சியாக இருந்து வந்த மனம், பணம் சார்ந்த பிரச்சனைகள் நிவர்த்தியாகும்.
முன்னேற்றம்
பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். பண வரவு உண்டாகும். உங்களுக்குத் தேவையான பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். தெய்வ பக்தி அதிகரிக்கும். தெய்வத்தின் அனுகூலம் கிடைக்கும். சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 90 சதவீதம் நன்றாக இருக்கும். சிவபெருமான் வழிபாடு, விநாயகர், பெருமாள் தாயார், அனுமன் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும்.
கவனம்
வண்டி, வாகனங்களில் செல்லும்போது மிகுந்த கவனம் தேவை. நரம்பு, தலைவலி, முதுகு வலி சம்பந்தப்பட்ட பாதிப்புகளில் மிகுந்த கவனம் தேவை. சுழுக்கு போன்ற பாதிப்புகள் கவனம் தேவை. வாகன விபத்து ஏற்படும் வாய்ப்புள்ளதால் கவனமாக இருக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications
