Rasi Palan This Week: சிங்கம் போல கெத்தாக மாறும் மகர ராசி.. குதூகலமா இருக்கப் போறீங்க

Subscribe to Oneindia Tamil

Magaram Rasi Palan: ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை, சித்திரை 7 ஆம் தேதி முதல் சித்திரை 13 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மகரம் ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

Magaram Weekly rasi palan lucky zodiac signs

சித்திரை மாதம் பிறந்துள்ளது. சித்திரை என்பது சூரியன் மகரத்திற்கு வரக்கூடிய மாதமாகும். அந்த வகையில், ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை, சித்திரை 7 ஆம் தேதி முதல் சித்திரை 13 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மகரம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

மகரம் ராசி பலன் (Magaram Rasi Palan)

மகரம் ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு மிகப்பெரிய வெற்றி, சந்தோஷத்தைப் பார்க்கக்கூடிய அற்புதமான வாரம். மன மகிழ்ச்சி ஏற்படும். எல்லோரும் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். வீட்டில் பெண் குழந்தைகள் பிறக்கும் யோகம் உண்டு. காதல் கைகூடும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். குளிர்ச்சியான பகுதிகளுக்கு சென்று வருவீர்கள்.

தொழில்

தொழில் ரீதியாக அனுகூலம் ஏற்படும். வியாபாரத்தில் ஏற்றம் பெறுவீர்கள். உறவினர்களுடன் தர்க்கம் செய்வதை தவிர்ப்பது நல்லது. ரத்த பந்த உறவுகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். உறவினர்களிடம் இணக்கமாகச் செல்வது நல்லது. உத்தியோகம், தொழில், வியாபாரம், படிப்பு சார்ந்த விஷயங்களில் இருந்து வந்த தடைகள் அனைத்தும் பரிபூரணமாக நீங்கும்.

சுற்றுலா

படைப்பாளிகள், கலைத் துறையினர், மீடியா துறையினர்களுக்கு நிறைய நன்மைகள் நடக்கும். பெரிய வெற்றிகள் ஏற்படும் காலகட்டமாக இருக்கும். ஆச்சரியமான முன்னேற்றம் ஏற்படும். நீங்கள் பேசினால் காசு வரக்கூடிய அமைப்பு உள்ளது. பெரிய வெற்றிகள் ஏற்படக்கூடிய வாரமாக இருக்கும். இன்ப சுற்றுலா, ஆடம்பர சுற்றுலா சென்று வருவீர்கள். பெங்களூர், கூர்க் பகுதிகளுக்குச் சென்று வரும் அமைப்பு உள்ளது.

ஆரோக்கியம்

வயிறு உபாதைகள், அஜீரணக் கோளாறுகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. கைகளில் அடிபடாமல் பார்த்துக் கொள்வது நன்மை பயக்கும். எலும்பு முறிவு, பிசங்குவது, தையல் போடுவது போன்றவை ஏற்படும் என்பதால் கவனம் தேவை. நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் கவனம் தேவை. ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நன்மை பயக்கும்.

வழிபாடு

பண வரவுக்குப் பஞ்சம் இருக்காது. பொருளாதாரத்தில் அற்புதமான முன்னேற்றம் ஏற்படும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். தொட்டது துலங்கக்கூடிய நல்ல காலகட்டம். திட்டமிட்டு செய்யும் காரியங்களில் ஏற்றம் ஏற்படும். சந்தோஷம் 80 சதவீதமும், பொருளாதார ஏற்றம் 90 சதவீதமும் நன்றாக இருக்கும். பிள்ளையார் வழிபாடு, திருத்தணி சுப்பிரமணியர் வழிபாடு பெரிய வெற்றியைக் கொடுக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+