Rasi Palan This Week: சிகரம் தொடும் மகர ராசி.. தொழிலில் அடிக்கும் ஜாக்பாட்
Magaram Rasi Palan: மே 4 ஆம் தேதி முதல் மே 10 ஆம் தேதி வரை, சித்திரை 21 ஆம் தேதி முதல் சித்திரை 27 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மகரம் ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

சித்திரை மாதம் பிறந்துள்ளது. அந்த வகையில், மே 5 ஆம் தேதி முதல் மே 10 ஆம் தேதி வரை, சித்திரை 21 ஆம் தேதி முதல் சித்திரை 27 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மகரம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
மகரம் ராசி பலன் (Magaram Rasi Palan)
மகரம் ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு மகர ராசியினருக்கு மிகப்பெரிய அனுகூலம் காணப்படும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு தொடர்பான விஷயங்களில் ஏற்றம் காணப்படும். தொழில் நிமித்தமாக எல்லா விதமான நன்மைகளும் ஏற்படக்கூடிய காலகட்டம். ஆரோக்கியத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். வண்டி, வாகனத்தில் செல்லும்போது உரிய விதிமுறைகளை கடைப்பிடிப்பது நன்மை பயக்கும்.
கவனம்
அஷ்டமத்தில் இருக்கும் கேது வாகனத்தில் பிரச்சனைகளைக் கொடுக்கக்கூடிய அபாயம் உள்ளதால் கவனம் தேவை. ஆத்ம ரீதியான நம்பிக்கைகள் ஏற்படும். வியாபாரத்தில், படிப்பில், கூட்டுத் தொழிலில் காணப்பட்டிருந்த சிக்கல்கள் தீரும். உறவுகள் தொடர்பான விஷயங்களில் மேன்மை காணப்படும். காரியசித்தி மாலையை கேட்டு வருவது உங்களுடைய பலம் இரட்டிப்பாகும். அற்புதமும், ஆனந்தமும் குடும்பத்தில் ஏற்படும்.
புதிய பொறுப்பு
யோக பலன்கள் அதிகளவில் அடையும் காலகட்டம். லாபமும், சந்தோஷமும் ஏற்படும். கொடுத்த வாக்கை குடும்பத்திலும், வெளிவட்டாரத்திலும் காப்பாற்றக்கூடிய யோகம் உண்டாகும். பயணங்கள் அனைத்தையும் எடுத்துக் கொள்வது நன்மை பயக்கும். புதிய பொறுப்புகளுக்குச் செல்லும் யோகம் உண்டாகும். வெற்றிகள் ஏற்படக்கூடிய காலகட்டம்.
முன்னேற்றம்
பொருளாதராத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நினைத்த காரியங்கள் கைகூடக்கூடிய யோகம் உண்டாகும். வாரத்தின் இறுதிப்பகுதி, ஆரம்பம் நன்றாக இருக்கும். லாப ஸ்தானத்துக்கு சுக்கிரன் பார்வை இருப்பதால் அற்புதமான வெற்றிகள் காணப்படும். எம்எல்ஏ, எம்பி ஆகக்கூடிய யோகம் உண்டாகும். மருத்துவ சீட், சிவில் சர்வீஸ் கிளியர் செய்வது போன்ற யோகம் உண்டு.
சுபகாரியம்
சுபகாரியங்களுக்காக செலவுகளைச் செய்வீர்கள். வேலைக்காக அலைச்சல் ஏற்படும். சனி, குரு இவை ஒரு இடத்தைப் பார்ப்பதால் அலைச்சல் ஏற்படும். கர்மாவை கழிப்பதற்கான நேரமாக இருக்கும். தெய்வ அனுக்கிரகம் நன்றாக இருக்கும். சந்தோஷம் 75 சதவீமும், பொருளாதார ஏற்றம் 75 சதவீதமும் நன்றாக இருக்கும்.
வழிபாடு
நரசிம்மர் வழிபாடு, விநாயகர் வழிபாடு தடைகளைப் போக்கும். ரத்தத்தில் பரவும் தொற்று நோய், சளி, அலர்ஜி, ஒவ்வாமை தொடர்பான விஷயங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.
-
ஜூன் மாத பலன்: மேஷ ராசிக்கு ஜூனில் வரப்போகும் சூப்பர் மாற்றம்.. நினைத்தது நிறைவேறும் யோகம் -
Mithunam: சிக்ஸர் அடிக்கும் மிதுன ராசி.. அள்ளிக் கொடுக்கும் கிரகங்கள்.. யோக காலம் -
ஜூன் மாத பலன்: ரிஷப ராசி வாழ்க்கையில் ஏற்பட போகும் திருப்பம்.. தூக்கிவிடும் சுக்கிரன் -
குருப்பெயர்ச்சி 2026: பணத்தை அள்ளப்போகும் 5 ராசிகள் யார்? குரு அருளால் அதிர்ஷ்ட மழை! -
Meenam: மீன ராசிக்கு குரு அருள் மழை!.. ஜூன் 1-7 வரை பணவரவு, முன்னேற்றம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications